Friday, 9 December 2016

பணப்பெட்டி


பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….
பொதுவாக நம் வீட்டில் பணப்பெட்டி எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்ற சந்தேகம் வருவதுண்டு. அதாவது பணப்பெட்டியை சிலர் பீரோவில் வைப்பர் அல்லது அதற்கென தனிஇடத்தை ஒதுக்கி நகை மற்றும் பணத்தை சேமிப்பர்……நாம் சேமிக்கும் இடம் வாஸ்துபடி நமக்கு வளர்ச்சியை தருவதாக இருக்க வேண்டும் அல்லவா…..இதை படிங்க.
பணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில் லாபம் தராது. பணம், நகைகள் இவற்றை வைக்கும் அலமாரி (அ) இரும்புப் பெட்டியை தென் மேற்கு அறையில் தெற்கு பக்கமாக வைக்கலாம். இவை வடக்கு, கிழக்கு முகமாக இருக்கும்படி அமைக்கலாம். இவற்றை தரைக்கு சற்று உயரமாக வைக்க வேண்டும். அல்லது மரத்தால் செய்த 1 அடி உயரமான நாற்காலி செய்து அதன் மேல் நிலையில் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியை வடக்கு (அ) கிழக்கு முகமாக பார்த்து வைக்கலாம்.
அதில் வைக்கும் பணம் தங்கும், வீண் செலவைத் தராது. வடக்கு அறையில் வட மேற்கில் வைக்கலாம். வடக்கு (அ) கிழக்கு முகமாக திறக்கும் நிலையில் வைப்பது இன்னும் சிறப்பாகும். சிலருக்கு எந்த திசை என்று சரியாக கனிக்கத் தெரியாது. இவர்கள் வாஸ்து ஜோதிடரை அணுகி சரியான திசையை பின்பற்றலாம்.

No comments: