Monday, 19 December 2016

லிங்க புராணம் ஒற்றைக் காலிலே நிற்கும் கலியுகம்

           
             
மழைக்கு இனிமேல் கால நேரம் எதுவும் கிடையாது. தன் இஷ்டத்துக்கு வரும் போகும் மழை கொட்டோ கொட்டென கொட்டப் போகுது இவ்வளவு மழையா.! கடவுளே என்று புலம்புவார்கள் என்று லிங்க புராணம் சொல்கின்றது.லிங்க புராணம்


ஒற்றைக் காலிலே நிற்கும் கலியுகம்

லிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய 11வது புராணமாகும் இந்த 21வது நூற்றாண்டி நடந்து கொண்டிருக்கும் "Greenhouse Effet "(பருவநிலை மாற்றத்தினால் வரும் பாதிப்புக்கள்)  வியாசர்க்கு எப்படி தெரிந்தது.

இந்த கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளும்  லிங்க புராணத்திலும் மகாபாரத்தில் கூறப்பட்ட விடையங்கள் தான் யுத்தம் பஞ்சம், பசி, பிணி மக்கள் நாடோடிகள்  (அகதிகள்) ஆவார்கள் திருடர்கள் மன்னர்கள் ஆகிவிடுவார்கள் பொருளாதார நெருக்கடி போன்ற பல விடையங்கள் லிங்க புராணத்தில் கூறப்பட்டிருக்கின்றது

21-22 ஆம் நூற்றாண்டில் புவி வெப்பமடைவதற்கு-(global warming) வேறு சில காரணங்கள் லிங்க புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பது அரிய தகவலாக இருக்கின்றது

சூரியனைப்பற்றி நவீன ஆய்வுகள் என்ன சொல்கின்றது
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது இந்த புள்ளிகள் மறையக்கூடியது என்றும் அப்படி கரும்புள்ளிகள் மறையும் போது சூரியனின் வெப்ப நிலையில் மாற்றம் மற்றும் சூரியப் புயலின் தாக்கங்களினால் 

பூமி வெப்பமடைய வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது இன்று உலகத்தில் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எதிர்காலங்களில் வரப்போகின்ற பெரிய பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது 

பெருகி வரும் மக்கள் தொகைதான் ( 7,2 பில்லியன் மக்கள்) இதற்கு ஏற்ப அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உலக நாடுகள் தடுமாறுகின்றன இதனுடைய வெளிப்பாடுதான் புவி வெப்பமடைதலுக்கு காரணம் என்று உலக அரசாங்களும்

அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் கெமிக்கல் கழிவுகள் நிலத்தடி அணுகுண்டு பரிசோதனைகள் என்று மக்களும் மாறி மாறி ஒருவர் மீது பழி சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்கடைசியில் வாய்யில்லா ஜீவன் மீது பழியை போட்டார்கள்  மாடுகளுக்கு (மீதேன்) வாய்வு தொல்லை என்று, உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும்,

வியாசர் முனிவர் இன்றைய காலநிலையை அன்று எப்படி இதை கணித்தார் இது எப்படி சாத்தியம் ஆகும் சூரியனை வைத்து தான் கணித்திருப்பார் போலும் பின்னால் வந்த மாயன்களும் இந்த முறையை பின்பற்றி மாயன்களின்-சூரிய கலண்டரை உருவாக்கி,  2012  உலக அழிவைப்பற்றி முன் கூட்டியே அறிந்து சொன்னார்களா .....? இன்று பூமிப்பந்தில் இருக்கின்ற பாலைவனங்கள்   ஒரு காலத்தில் சோலை வனங்களாக இருந்தவைகள் தான் 

புவி வெப்பமடைவதற்கு ஒட்டு மொத்தமாக  மனிதச் செயற்பாடுகள் தான் காரணம் என்று சொல்லி விடமுடியாது  50% சதவீதம் மனிதச்செயல்களும் பெருகி வரும் உலக சனத்தொகையும் ஒரு காரணமாக சொன்னாலும் மீதமுள்ள 50% சதவீதம் வியாசர் முனிவர் கூறியது காரணங்களாகவும் கூட இருக்கலாம் அல்லவா ?

இயற்கை ஆவலர்களின் ஒட்டு மொத்த கவலையும், கவனம் திரும்பியிருப்பது என்னவோ மக்கள் மீதுதான் பூமி தன்னை மறு சுழர்ச்சி செய்ய முடியாமல் இருப்பதற்கு பெருகி வரும் சனத்தொகையும் ( 7.2 பில்லியன்) ஒரு காரணமாக இருக்கலாம்   

இயற்கையை அழித்தால் அது நம்மை திருப்பி அழிக்கும் என்பது உறுதி எங்களுடைய பூமியை நாங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய ஆதங்கமாக இருக்கின்றது 

இல்லாமல் போனால், வெள்ளத்தில் ஒரு நாள் மூழ்கி வாழ வேண்டிய நிலைமைகள் தான் வரும் இது இயற்கை மனிதனுக்கு அடிக்கும் கடைசி எச்சரிக்கை மணி ♮♩

கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக் கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல மகாரூப ரூப வெளி மதி
மேற் காணும் துதியாக நாழி இரு இருபத் தைந்தில்தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்சதியாக வடதேசம் தன்னி லோர்பால்கடல்போங்கி நெருப்பு ரத்த
மழையுடண் டங்கே.... ..."போகரின் சீடரான கோரக்கரின் பாடல்"

ஒற்றைக் காலிலே நிற்கும் கலியுகம்


இந்த  கடைசி தூணும்  இடிந்து விழுந்தால் கலியுகம் முடிந்து புது யுகம் தொடங்கும் (உலகம் அழிந்துவிடும்) என்று ஒரு நம்பிக்கை இங்கு நிலவுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் 1424 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட, இந்த ஹரிஷ்சந்திரகட் கோட்டை பற்றிய முக்கிய குறிப்புகள் அக்னிபுராணம், ஸ்கந்தபுராணங்களிலும் காணப்படுவது  இந்த கோட்டைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது

மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான விளங்குகின்ற இந்த ஹரிஷ்சந்திரகட் கோட்டைக்குள்ளே இருக்கும் ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக அமைந்துள்ள கேதாரேஷ்வர்  என்ற மிகப்பெரிய குகையைக் காணலாம் அங்கு  நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்திருக்கிறது

இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு குளிர் நீர் சூழ்ந்து மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் நீரில் மூழ்கி கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமான ஒன்றாக கருதப்படுகின்றது இது மட்டுமல்லாமல் மிக முக்கியமாக கருதப்படும்

அந்த நான்கு தூண்களும் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்


அதன்படி தற்போது மூன்று தூண்கள் இடிந்து விட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து விடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.

No comments: