Friday, 9 December 2016

துளசி செடி



துளசியை பூஜித்து மஹா விஷ்ணுவை அடையலாம்…..
1.மஹா விஷ்ணுவின் அம்சம் நிறைந்தது துளசி செடி. துளசி செடியை வீட்டின் பின்புறத்தில் ஒரு மேடை அமைத்து அல்லது பூந்தொட்டியில் வைத்து வழிபடலாம்.
2.துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ‘ஆவாஹனம்’ செய்து துளசி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து பூஜை செய்யலாம்.
3.பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி கடக்ஷம், வம்சம் தழைக்கும், உடல் வலிமை, மனோ தைரியம் உண்டாகும். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும்.
4.பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து துளசி பறிக்க கூடாது. வேறு துளசி செடியிலிருந்து துளசி பறிக்க வேண்டும். இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் இலையை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள்.
5.துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.
6.துளசி இலையின், நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்ற பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
7.ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த இல்லத்தில் துளசி இருக்கிறதோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.
8.அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகிறது. இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.
9.துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமாக பலனைக் கொடுக்கும். துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.

10.மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும் துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது.
11.தானம் செய்யும் பொருளுடன், துளசித் தளம் சேர்த்துக் கொடுத்தால், தானத்தின் முழுமையான பலன் கிட்டுகிறது. சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.

No comments: