Friday, 9 December 2016

கோபூஜை



தா என்று போற்றப்படும் கன்றுடன் கூடிய பசுவை முதன் முதலில் உள்ளே அழைப்பது எல்லோரது வீடுகளிலும் நடப்பது. இது தரைத்தள வீடுகளில் மட்டும் சாத்தியமாகிறது.
மாடி வீடுகளில் வசிப்பவர்கள் பசுவின் பொம்மை, காமாட்சி தீபம், மட்டைத் தேங்காயை வைத்து கோபூஜை செய்து விடலாம்.
வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழுங்க அழைத்து வருகிறார்கள்.

பசு கன்றுடன் வீட்டு உள்ளே வரும் போது….
“ஓம் சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசி நீ
பாவநீ சுரபி ஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே”!
என்று வணங்கி கூற வேண்டும்.
ஏ! கோ மாதாவே சகல தெய்வங்களையும் தீர்த்தங்களையும் உடலுள் வைத்துக் கொண்டு லட்சுமி அருளையும், சகல ஐஸ்வர்யங்களையும் பேர் அருளாய்ச் சுரக்கும் உன்னை அன்னையாகத் துதிக்கிறேன் என்று வரவேற்க வேண்டும். இதனால் வீட்டில் அனைத்து தெய்வ – தேவ வாழ்த்துக்களும் கிடைக்கும்.

No comments: