Wednesday, 21 December 2016

முருக பெருமான் வாக்கு


1.ஒரு முறை ஜோதி ஏற்றி முருகனை மனம் உருகி வழிபட்டால் அந்த வழிபாடு உண்மை வழிபாடாய் விளங்கும் பட்சத்தில், 


2.அவர் செய்த அந்த ஜோதி வழிபாடு ஆயிரம் ஆண்டுகள் விரதமிருந்து தவம் செய்ததற்கு ஒப்பான பலனைத் தரும் என்பது முருகனின் வாக்காகும்.

தினம் தினம் தவறாமல் காலை மாலை இருவேளையும் முடிந்தால் இரவு 12 மணிக்கு ஒருமுறையும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று 108 முறையும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்று 108 முறையும் மந்திரஜெபம் செய்து மந்திர உரு ஏற்றி வரவர மந்திர உருவின் பலத்தினாலே முருகன் அருள் நம்முள் பெருகத் தொடங்கும்.

முருகா! முருகா! முருகா! 
என்போம் முத்தியும் சித்தியும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வோம்.



No comments: