Monday, 26 December 2016

புதுக்கோட்டை தபசு மலை


பசுமலை

24.11.2016 தபசுமலை  சென்று வந்தேன்..









தபசுமலை-தவசிகள் தவம் செய்த மலை. சப்தமுக்தி மலை மருவி என்ற பெயர் மருவி தத்துமுக்தி மலை எனப்பெயர் பெற்றதாக தெரிகிறது. இது தபசு மலை என்ற வழக்காடலாகி இருக்கலாம்.

 சப்த என்றால் ஏழு-ஏழு மகான்கள் முக்தி பெற்ற மலை.அருகில் உள்ள சிறிய குக்கிராமத்திற்கு தத்து முக்திப்பட்டி என்ற பெயர்-அமைதியான சூழ்நிலையில் இருக்கும் ஊர். 

மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முன்னதாக 5 கி.மீ தொலைவில் லேனாவிலக்கு என்னும் பிரிவு கொண்ட பாதை பிரிந்து செல்கிறது. இந்த லேனாவிலக்கிலிருந்து 10 கி.மீ தொலைவில் தபசுமலை அமைந்திருக்கிறது. 


சொர்ணாகர்ஷண பைரவர்: தபசு மலை.

இதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலயம் தான். புதுக்கோட்டையிலிருந்து விராச்சிலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் (லெம்பலக்குடி வழி), ‘தபசு மலை’ என்ற சிறு மலை காணப்படுகின்றது. இந்த மலையில் முருகப் பெருமான் தண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார்.
இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் காணப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்தப் பீடங்கள் கருதப்படுகின்றன.

























யார் ஞானியாகிறார்?
பிரபஞ்சத்தின் ரகசியத்தை நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், ஞானிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகரிஷிகள் அனுபவித்து வழங்கி வந்திருக்கிறார்கள். நான் புதிதாக ஒன்றும் சொல்ல போவதில்லை. இருந்தாலும் கால்நூற்றாண்டு காலமாக தபசுமலையில் வாழ்ந்த இந்த காலகட்டத்தில் நான் உறவு கொண்ட அந்த இறைவன் கடவுள் என்ற இந்த பிரபஞ்ச சக்தி ஒரு வழிகாட்டியாக இருக்கிறான் என்பதே எனது அனுபவம். ஒருவர் ஞானியாக ஆவதற்கு கண்ட எவற்றையும் விழுந்து படிக்க வேண்டும் என்பதில்லை. மாடு மேய்ப்பவனும் மகானாக முடியும். அதற்கு வேண்டியதெல்லாம், குருவிடம் விசுவாசம் கொண்ட சீடன் வளைந்து கொடுத்தால் அந்த குரு அவனை ஞானியாக்கி விடுவார். இங்கு நாம் தேட வேண்டிய குரு இறைவன் தான்

No comments: