Tuesday, 27 December 2016

பஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர

பஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர.
கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பொய் சொல்லுதல்,ஏமாற்றுதல்-இவை அனைத்தும் பஞ்சமா பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றைய கலிகாலத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்லாமல் வாழ முடியாத அளவிற்கு நமது வாழ்க்கை அமைந்துவிட்டது.
இதனால் ஏற்படும் பாவங்கள் தீர கீழ்காணும் சிவ மகாமந்திரத்தை ஒரு சிவன் கோவிலில் பிரதோஷநாளில்-பிரதோஷ நேரத்தில்- கோவிலுக்கு உள்ளே-கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து-108 முறை மனதிற்குள் ஜபிக்கவேண்டும்.
இம்மந்திரம் சிவபுராணத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
ஓம் ஆம் கவும் சொள(Ohm aam howm sow)-உச்சரிப்பு ஆங்கிலத்தில்
இதே மந்திரத்தை தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் சனிப்பிரதோஷங்களில் ராமேஸ்வரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி அல்லது பழமையான சிவாலயங்களில்-ஜபித்தால் நமது முற்பிறவிப்பாவங்களும் நீங்கும்.நமது முன்னோர்கள் பாவங்களும் நீங்கிவிடும்.இது அநுபவ உண்மை!!

No comments: