Tuesday, 27 December 2016

புதுக்கோட்டை வாஸ்து ஆலயம் செவலூர் பூமிநாதர்




2017 வாஸ்து நாட்கள்
 


23.11.2016  வாஸ்து நாள் .செவலூர் சென்று செங்கல் வாங்கி வந்தேன் ,வீடு கட்டுவதற்காக

வாஸ்து கோளாறு வீட்டையே ஆட்டி படைக்கும் என்பார்கள். அத்தகைய வாஸ்து  பிரச்னைகளை தீர்த்து வீடு கட்ட வரம் அருளும் பூமிநாதர்  புதுக்கோட்டை மாவட்டம் செவலூரில் குடிகொண்டுள்ளார்.   தமிழகத்தில் உள்ள வாஸ்து  ஸ்தலங்களில் செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயில் சிறப்பு வாய்ந்ததாகும். 
























































புதுக்கோட்டை, பொன்னமராவதி நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் இருந்து 3கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வாலயம். இக்கோயில் சிவபெருமானுக்கு 16 பட்டைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு பட்டையும் பூமாதேவி பூஜைசெய்த ஸ்தலமாக கூறப்படுகிறது. 

மேலும்  இக்கோயிலில் அபிஷேக தீர்த்தம் பூமிக்குள்ளேயே சென்றுவிடும்படி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. மனைகள் வாங்க, புதிய வீடு தடையின்றி கட்டி முடிக்க மற்றும் அனைத்து வாஸ்து குறைகளையும் தீர்க்கும் ஆலயமான செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி திருக்கோயிலில் ஒவ்வொரு வாஸ்து நாளன்றும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

வாஸ்து நாட்களில் இக்கோயிலில் வாஸ்து ஹோமம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு வாஸ்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்படும் செங்கல்லை வாங்கி  சென்றால் கட்டிடப் பணிகள் துரிதமாகவும் தங்கு தடையின்றி முடியும் என்பது ஐதீகம்.

1 செங்கல் விலை 110 Rupees

No comments: