Wednesday, 28 December 2016

சிங்கப்பூா் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்

என்னுடைய  கஷ்ட  காலங்களில் இங்குள்ள சிவபெருமானிடம் முறையிட்டு அவர் அருளால் இன்று நன்றாக உள்ளேன். இந்த பெருமானை பாா்க்கும் பொழுதெல்லாம். பழ முறை அழுதுள்ளேன்.

26.12.2016 பிரதோஷத்தில் கலந்து கொண்டேன்.

நான் கடந்த 2001 முதல் சிங்கப்பூாில் பணி புரிந்து வருகின்றேன்.




காசிபமுனிவருக்கு மயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான்.கடுந்தவம் புரிந்து பரமேசுவனிடம்அளப்பரிய வரங்களை பெற்ற சூரன், முன்று லோங்களும் அவன் ஆளுகைள் வந்தன.வானவர்களை அடக்கிகடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவேந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும்,தேவமாதர்களும் சிறையில் அடைபபட்டு வேதனைப்பட்டார்கள்.



சூரபத்மனின் கொடுமை தாங்காமல், இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசன் தரிசனம் தந்து''தவத்தின் நோக்கமென்ன? என்று வினவினார். ''அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.எதிர்த்துப் போரிட களுக்குப் போ எங்திய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காணவேண்டும்''என வேண்டி நின்றான்.

'இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்''எனப் பெருமான் அருள்பாலித்தார். இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போதுநிகழ்த்துவார்?எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். பிரமதேவர்திருமாலை நாடினார். 'சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்' என்றார்



'' பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா?அது சாத்தியமாகுமா? எனக் கேட்டார். ''மன்மதன் ஒருவரால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும்அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாகுவார்கள். மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன்.எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.



பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ''சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றிஎடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமாரக் கடவுள் தோன்ற வேண்டுமாகின் சிவத்தின் தவத்தைக்கலைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.'' என அவனிடம் வேண்டினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,மன்மதன் தீயை மிதத்தவன் போலாகி, 'ஈசனுடைய மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீதவிளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்?



நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில்நெருங்க முடியுமா? எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனைக் கடைசிக்கட்டமாக, ''மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்'' எனக் கோபத்தோடு சொன்னார்பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் இருவரின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன்,பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான்.



 இதனை மனைவி இரதிதேவியிடம்,விவரித்தான். இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு, வில், கரும்பு நாண், அரும்பு பாணம் எனபஞ்சபாணங்களோடு, தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.



மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான். கல்லால மரத்தினடியில் சனகாதியர் முன்பு எம்பெருமான்அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ''சகல லோகங்கலையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி,நீறு செய்யும் நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது'' என்று கலங்கி விதி வலியது என்றமுடிவோடு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க்கணைகளைப் பூட்டி, மதிசடை நாயகன் முன்சென்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு, மேனி நடுங்க பாணங்களைப் புட்டி வில்லை வைத்து இறைவன்திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான்.



விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாங்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்ததீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. 




இதனைக் கண்ணுற்ற இரதிதேவிதலைவிரி கோலமாக இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள்.
''தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இந்தப் பாதகச் செயலில் இறங்கினார்.காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்குமீண்டும் வாழ்வளிக்க வேண்டும்'' என முறையிட்டாள். ஈசனும் ''பெண்ணே! கவலைப்படாதே!உன் கணவரை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால், உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்''என உரைத்தார்.



மிகுந்த கருணைக் கொண்டு மன்மதனின் உயிரை உயிர்பித்து தந்தததால் ஈசனுக்கு காரூணீஸ்வரர்என்று பெயர் வந்தது. மன்மதனுக்கு கருணை புரிந்ததால் ''மன்மத காரூணீஸ்வரர்'' ஆனார்.

No comments: