Friday, 9 December 2016

வாஸ்துவின் உள்ளார்ந்த ரகசியங்கள்





வாஸ்துவின் உள்ளார்ந்த ரகசியங்கள்
1.திசைகள் நிலையானதா?
ஆம்,நாம் புவியிர்ப்பு பகுதிக்குள் இருக்கும் வரை திசைகள் நிலையானதே .வடதுருவம் மற்றும் தென்துருவங்களில் மட்டும் திசைகாட்டும் கருவி வேலை செய்யாது.விண்வெளியில் எவ்வித ஈர்ப்பு சக்தியும் இல்லாததால் அங்கும் திசைகளை அறிய முடியாது.
2.வாஸ்துவை அறிந்து கொள்வதால் என்ன பயன் ?
நம்மை நாம் அறிந்து கொள்ளும் வழியே வாஸ்து.நம்முடைய குணா திசையங்கள்,வருமானம் மற்றும் மக்கட் பேறு அனைத்தையும் தீர்மானிக்கும் வீட்டு அமைப்பே வாஸ்து.அதனை அறிந்து கொண்டால் நம்மை நாம் அறிந்து கொள்வது சுலபம்.
3.வாஸ்து பார்க்கும்பொழுது வீட்டுடன் சேர்த்து அடிமனைக்கும் வாஸ்து பார்க்கவேண்டுமா ?
ஆமாம்,அடிமனைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிமனையில் உள்ள வாஸ்து குறைப்பாட்டை முதலில் சீர் செய்த பிறகே அந்த மனை வீட்டிற்குள் திருத்தங்களை செய்ய அனுமதிக்கும்.
4.எந்த திசை சிறந்தது ?
திசைகளில் சிறந்தவை என்றும் தாழ்ந்தவை என்றும் பாகுபாடு கிடையாது.ஒவ்வோரு திசைக்கும் ஒவ்வோரு குணநலம் உண்டு.வடக்குத்திசை வருமானத்திற்கு உரியது என்றால், தெற்குத்திசை அதனை கட்டி ஆளுகின்ற திசையாகும்.கிழக்குத்திசை மனநலம் மற்றும் ஆயுட்காலத்திற்கு உரியது என்றால் அவற்றை பேணி காத்து மேன்மைக்கு வழி வகுப்பது மேற்கு திசையாகும்.ஆகவே,எந்த திசையைப் பார்த்த வீடு என்றாலும் உச்ச நீச்சங்களை அறிவது மிகவும் அவசியம்.
5.வாடகை வீட்டிற்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா ?
வாடகை வீட்டிற்கும் கண்டிப்பாக வாஸ்து பார்க்க வேண்டும்.நாம் அந்த வீட்டில் இருக்கும் வரை அந்த வீட்டின் அமைப்பிற்கு ஏற்றவாறு தான் நம் வாழ்க்கைத் தரமும் இருக்கும்.அந்த வீட்டின் உரிமையாளருக்கும் அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சம்பந்தம் கண்டிப்பாக இருக்கும்.அது நம்மையும் பாதிக்கும்.
6.ஈசான்ய மூலையில் என்னயென்ன அறைகள் வரலாம்?
ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு மூலையில் வரவேற்பறை ,உணவருந்தும் அறை மற்றும் குழந்தைகளின் படிப்பறை அமைக்கலாம்.தவிர்க்க முடியாத சில இடங்களில் படுக்கையறை அமைக்கலாம்.ஆனால் அப்படி அமைப்பது இரண்டாம் பட்சமே.
7.ஈசான்ய மூலையில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே ...அது ஏன் ?
வாஸ்துவில் நான்கு மூலைகளில் கன்னி மூலை (நிருதி)எனப்படும் தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்க வேண்டும்.அதற்கு அடுத்தபடியாக வாயு மூலையும், அக்னி மூலையும் சற்றே தாழ்திருக்க வேண்டும்,இப்படி அமைக்கும் போது ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு பகுதி இயற்கையாகவே மற்ற எல்லா மூலைகளையும் விட பள்ளமாக ஆகிவிடுகிறது. மேலும்,பஞ்ச பூதங்களில் வடக்கு திசை என்பது தண்ணீரைக் குறிக்கும்.எனவே ஈசான்யம் பள்ளமானதால் தண்ணீர் இங்கே இருக்கும் நிலை உண்டானது.இதுவே உண்மையான தாத்பர்யம்.
8.அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள பிளாட்டுகள் 100 சதவிகிதம் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்கிறர்களே ......அது சாத்தியம் தானா ?
இடப்பற்றாகுறையாலும், நிதிப்பற்றாக்குறையாலும் உருவாக்கப்பட்டதே இந்த அடுக்குமாடி கட்டிட தத்துவம். அடிநிலம் அனைத்து பிளாட்டுக்கும் ஒன்றுதான் உங்கள் வீட்டின் மேல்தளம் உங்களின் மாடிவீட்டுக்காரருடைய தரைதளம் ஆகும் .இந்த சூழ்நிலையில் வாஸ்து முறைப்படி எல்லா பிளாட்டுகளுக்கும் அறைகள் அமைக்க முடியாது.பெரும்பாலான இடங்களில் அக்னி மூலையில் சமையலறையும் நைருதியில் மாஸ்டர் பெட்ரூமும் இருந்து விட்டால் வாஸ்து முழுமையாகிவிடும் என்று நம்பப்படுகிறது .இது உண்மையல்ல வீட்டின் ஏதாவதொரு சுவர் பொது சுவராகி விடுகிறது.எனினும் 60% வாஸ்து முறைப்படி பிளாட்டுகள் அமைய வாய்ப்புள்ளது.
9.வாஸ்து குறைபாடுகளுக்க ஏதேனும் பரிகாரங்கள் உண்டா?
ஒரு வீட்டை செங்கற்களாலும் சிமெண்டாலும் கட்டுகிறோம்.அதில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை நீக்க செங்கற்களும், சிமெண்ட் டும் கொண்டுதான் செய்யவேண்டும்.நாங்கள் இயந்திரங்கள்,சீன வாஸ்து பொம்மைகள் போன்றவற்றை பரிந்துரைப்பது கிடையாது. இவை நிரந்தர திர்வைத்தராது.எனவே,சரியான வாஸ்து ஆலோசனைப் பெற்று சீர்திருத்தங்களை செய்யவேண்டும். எனவே பரிகாரம் இல்லை.ஆனால் நிச்சயம் தீர்வு உண்டு.
10.வாஸ்து சீர்திருத்தங்கள் செய்ய இயலாத பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன ?
ஒரு வீட்டின் அமைப்பு அங்கு வாழும் அன்பர்களின் ஆன்மபலம் ,பணவரவு மற்றும் மக்கட் செல்வங்கள் ஆகியவற்றை தீர்மானிக்கின்றது.சில வகை வீட்டு அமைப்புகள் பணவரவை தடை செய்து கடன் சுமையை அதிகரிக்கச் செய்வதும் உண்டு.அப்படிப்பட்ட இல்லங்களில் நாங்கள் சில எளிய சிர்த்திருத்தங்களைச் சொல்லுவதோடு இதே அமைப்புள்ள கோவில்களையும் பரிந்துரை செய்வதுண்டு.அந்த கோவில்களுக்கு சென்று வருவதால் அந்த வீட்டின் தாக்கத்தில் இருந்து தற்காலிகமாக நிவாரணம் பெற்று வாஸ்துவை உணரமுடியும். .இதுவே அவர்களை நிரந்தர தீர்வை பெற அடிகோலும்.

No comments: