Friday, 30 December 2016

புருவமத்தி தியானம்



இன்று எங்கு பார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம்.
சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது.

அவற்றின் இயல்பு வருமாறு;
******************************
பிருதிவி பூதம் - மூலாதாரம்
அப்பு (நீர்) பூதம் - சுவாதிஷ்டானம்
தேயு (தீ) பூதம் - மணிப்பூரகம்
வாயு பூதம் - அநாகதம்
ஆகாய பூதம் - விசுத்தி
மனம் - ஆக்ஞா
இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்க.
 பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும். இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும்.
மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம்.
இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும். இந்தப்பயிற்சியா
ல் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) ;
நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே
இதன் பொருள் வருமாறு:
**************************
மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து வர 4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார்.
இதனை எப்படி பயிற்சிப்பது?
******************************
அதிகாலை காலை 04.00 - 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 - 07.00 மணிவரை 
முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். 
அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம்.
பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை,
கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியும் தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது, இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும்.
( நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும்.



அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். 
அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. - குங்குமம் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமி நாசினிப் பொருட்கள் ஆகும்.


மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு , நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. 
மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி, தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும். 
ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு.


எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. 
மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.)

Thursday, 29 December 2016

புதுக்கோட்டை தேனிமலை முருக பெருமான்




நிலவளம், நீர்வளம் மிகுந்து திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காணப்படுகிறது தேனிமலை கிராமம்.

இந்த ஊருக்குப் பெருமை சேர்க்குற விதமாக மலை மேல் கோயில் கொண்டுள்ளார் சுப்பிரமணியசுவாமி.

இந்த மலையின் உச்சியில் தேனீக்கள் பெரிய பெரிய கூடுகளைக் கட்டுவது வழக்கம். ஆனால் தேனீ கூடுகளை மக்கள் எக்காரணம் கொண்டும் சேதப்படுத்துவதோ, அதிலிருந்து தேன் சேகரிப்பதோ இல்லை. மலையில் மூன்று பெரிய கூடுகளை தேனீக்கள் கட்டியிருந்தால் அந்த ஆண்டு விவசாயம் அமோகமாகவும், இரண்டு கூடுகளைக் கட்டியிருந்தால் சுமாரான விளைச்சலும் இருக்கும். 

புதுக்கோட்டை - பொன்னமராவதி இடையே உள்ள தேனிமலை, திருக்கோளக்குடி ஆலயங்களில் பாறைத் தேன் உண்டு. அபூர்வமான தரிசனம். இன்று இவற்றைத் தரிசித்து (தரிசனம் மட்டுமே, தேனீக்களை விரட்டக் கூடாது) இங்கு கிரிவலம் வந்து வழிபடுதலால், தான் அன்புடன் போற்றியவர்கள் (உற்றம், சுற்றம், நட்பு) பகைமை கொண்டிருப்பது அகன்று, நல்லுறவு பரிணமிக்க உதவும்


ஒரு கூடு மட்டும் கட்டியிருந்தால் விளைச்சல் சரியாக இருக்காது என்பது இங்குள்ள மக்கள் ஆண்டாண்டு காலமாகக் கொண்டுள்ள நம்பிக்கை.

தேனீக்கள் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரத் தோடு இணைந்திருப்பதால் மலையும், ஊரும் தேனிமலை என்றே அழைக்கப்படுகிறது. 



முற்பிறவியில் பாவச் செயல் புரிந்தோர் இப்பிறவியில் தேனீக்களாய் பிறந்து, இந்த மலையை கட்டிக் காத்து, சுப்பிரமணிய சுவாமியின் அருள் கடாட்சத்தால் சாபவிமோசனம் நீங்கப் பெற்று, முக்தி பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

இம்மலையில் சித்தர்கள் பலர் தங்கியிருந்து முருகப் பெருமானின் திருவருள் பெற்று முக்தியடைந்ததாகவும், அந்த சித்தர்கள் சுப்பிரமணியசுவாமியை நாளும் தரிசிக்க இன்றும் வந்து செல்வதாகவும் மக்கள் நம்புகின்றனர். இங்கு பெருமானந்த சுவாமி என்கிற சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. 



இவர் இம்மலையில் நீண்ட காலம் தங்கியிருந்த குமரக்கடவுளை வழிபட்டு வந்ததாகவும், அவரை நாடி வந்த மக்களுக்கு அபிஷேக தீர்த்தம் வழங்கி நோய் தீர்க்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலயம் உருவானது எப்படி?

ஒருசமயம் பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் வனப்பகுதிக்கு வேட்டையாட பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றார் புதுக்கோட்டை மன்னர். காட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது மன்னருக்கு கடுமையான வயிற்றுவலி உண்டானது. அவருடன் வந்திருந்தவர்கள் சுற்றுமுற்றும் ஓடிச்சென்று யாராவது ஆட்கள் தென்படுகின்றனரா என்று தேடினர். 
தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக் கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.

அதற்கு சிறுவன், இங்கு வைத்தியர் இல்லை. ஆனால் அதோ தெரிகிறதே தேனிமலை. அங்கு குமரக்கடவுளின் சக்திவேல் நிறுவபபட்டுள்ளது. 



அதற்குப் பக்கத்திலேயே சுனைகளில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீர் நிரம்பிய தீர்த்தக்குளம் உள்ளது. சக்திவேலுக்கு தீர்த்தக் குள நீரால் அபிஷேகம் செய்து கொஞ்சம் அபிஷேக தீர்த்தத்தை மன்னருக்கு அருந்த கொடுத்தால் தீராத வயிற்றுவலி உள்பட சகலபிணிகளும் தீரும் எனச் சொன்னான்.

மந்திரி பிரதானிகள் அப்படியே செய்ய, என்ன அதிசயம்! சற்றைக்கெல்லாம் மன்னரின் வயிற்றுவலி நீங்கி, சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டார். மகிழ்ந்த மன்னர், தேனிமலையில் உடனடியாக குமரக்கடவுளின் திருமேனியை ஸ்தாபித்து, கோயில் கட்ட ஆணையிட்டார். அவ்விதமாக உருவானதுதான் தேனிமலை முருகன் ஆலயம்.


அடிவாரத்தில் தேனிப் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. அங்கிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கு வசதியாக இருநூற்று ஐம்பது படிகள் அமைத்துள்ளனர். செல்லும் வழியில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்வதற்கு வசதியாக மண்டபங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பார்த்த கோயில். ராஜகோபுரவாயில் தாண்டி உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை. மகாமண்டபத்தில் மயில் வாகனமும், அர்த்த மண்டபத்தில் விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி, நாகரும் அருள்கின்றனர். கருவறையில் மயில்மீது அமர்ந்த கோலத்தில் வள்ள-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சக்திவேலைத் தாங்கியபடி எழுந்தருளியுள்ளார்.



இரு கால பூஜை நடைபெறுகிறது. கார்த்திகை நட்சத்திர நன்னாளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இது தவிர தைப்பூசம், பெரிய கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய கார்த்திகைத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவது கண்கொள்ளாக் காட்சி.

தலவிருட்சம் இச்சிமரம்: தீர்த்தம் சரவணப் பொய்கை. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.




கிரிவலப் பாதையில் விநாயகர், அண்டங் கருப்பர், இடும்பன், வேல்பாறை, குடவரைக் கோயில், பெருமானந்த சுவாமி ஜீவ சமாதி ஆகியவை அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் பௌர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வந்தால் சகல பாக்யங்களும் சேரும் என்று கல்வெட்டுச் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய் நொடிகள் நீங்கவும், மனக்குறைகள் நீங்கி வளமான வாழ்வை விரும்புபவர்களும் தவறாது சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் தேனிமலை என்பது சர்வ நிச்சயம்!

எங்கே இருக்கு: பொன்னமராவதியிலிருந்து (காரையூர் வழியாக) 7 கி.மீ, தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் வழியில் தேனிமலை அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ.,

தரிசன நேரம்: காலை 9-1; மாலை 5-6

Wednesday, 28 December 2016

சிங்கப்பூா் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்

என்னுடைய  கஷ்ட  காலங்களில் இங்குள்ள சிவபெருமானிடம் முறையிட்டு அவர் அருளால் இன்று நன்றாக உள்ளேன். இந்த பெருமானை பாா்க்கும் பொழுதெல்லாம். பழ முறை அழுதுள்ளேன்.

26.12.2016 பிரதோஷத்தில் கலந்து கொண்டேன்.

நான் கடந்த 2001 முதல் சிங்கப்பூாில் பணி புரிந்து வருகின்றேன்.




காசிபமுனிவருக்கு மயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான்.கடுந்தவம் புரிந்து பரமேசுவனிடம்அளப்பரிய வரங்களை பெற்ற சூரன், முன்று லோங்களும் அவன் ஆளுகைள் வந்தன.வானவர்களை அடக்கிகடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவேந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும்,தேவமாதர்களும் சிறையில் அடைபபட்டு வேதனைப்பட்டார்கள்.



சூரபத்மனின் கொடுமை தாங்காமல், இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசன் தரிசனம் தந்து''தவத்தின் நோக்கமென்ன? என்று வினவினார். ''அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.எதிர்த்துப் போரிட களுக்குப் போ எங்திய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காணவேண்டும்''என வேண்டி நின்றான்.

'இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்''எனப் பெருமான் அருள்பாலித்தார். இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போதுநிகழ்த்துவார்?எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். பிரமதேவர்திருமாலை நாடினார். 'சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்' என்றார்



'' பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா?அது சாத்தியமாகுமா? எனக் கேட்டார். ''மன்மதன் ஒருவரால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும்அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாகுவார்கள். மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன்.எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.



பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ''சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றிஎடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமாரக் கடவுள் தோன்ற வேண்டுமாகின் சிவத்தின் தவத்தைக்கலைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.'' என அவனிடம் வேண்டினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,மன்மதன் தீயை மிதத்தவன் போலாகி, 'ஈசனுடைய மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீதவிளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்?



நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில்நெருங்க முடியுமா? எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனைக் கடைசிக்கட்டமாக, ''மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்'' எனக் கோபத்தோடு சொன்னார்பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் இருவரின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன்,பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான்.



 இதனை மனைவி இரதிதேவியிடம்,விவரித்தான். இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு, வில், கரும்பு நாண், அரும்பு பாணம் எனபஞ்சபாணங்களோடு, தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.



மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான். கல்லால மரத்தினடியில் சனகாதியர் முன்பு எம்பெருமான்அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ''சகல லோகங்கலையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி,நீறு செய்யும் நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது'' என்று கலங்கி விதி வலியது என்றமுடிவோடு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க்கணைகளைப் பூட்டி, மதிசடை நாயகன் முன்சென்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு, மேனி நடுங்க பாணங்களைப் புட்டி வில்லை வைத்து இறைவன்திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான்.



விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாங்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்ததீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. 




இதனைக் கண்ணுற்ற இரதிதேவிதலைவிரி கோலமாக இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள்.
''தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இந்தப் பாதகச் செயலில் இறங்கினார்.காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்குமீண்டும் வாழ்வளிக்க வேண்டும்'' என முறையிட்டாள். ஈசனும் ''பெண்ணே! கவலைப்படாதே!உன் கணவரை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால், உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்''என உரைத்தார்.



மிகுந்த கருணைக் கொண்டு மன்மதனின் உயிரை உயிர்பித்து தந்தததால் ஈசனுக்கு காரூணீஸ்வரர்என்று பெயர் வந்தது. மன்மதனுக்கு கருணை புரிந்ததால் ''மன்மத காரூணீஸ்வரர்'' ஆனார்.

சிவ பெருமானின் சொந்த ஊா்



ராவண வதம் முடித்த ராமனுக்கு சிவபக்தனை வதம் செய்ததால் ப்ரம்ம ஹத்தி தோஷம் பிடித்தது ,
உப்பூர் என்னும் ஊரில் வெயில் காத்த விநாயகரை பிரதிஷ்டை செய்து தேவி பட்டினம் என்னும் இடத்தில் விண்ணுலக நவகிரக கோள்களை முதன் முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறகு புண்ணிய நதி கரையோரத்தில் லிங்க ப்ரதிஷ்ட்டை செய்து சிவபூஜை செய்தும் ப்ரம்மஹத்தி தோஷம் விலகாமல் போக வருந்திய ராமனின் காதுகளில் அரூபமாக 999 ரிஷிகளை தன்னுள் அடக்கி சகஸ்ர லிங்கமாக அமைந்து இருக்கும் உக்கர கோச மங்கை ஆலயத்திற்கு வரும் படி ஈசன் அருள் செய்தார் ,
இதன் படி சதுர் வேத மங்களம் ,தக்சன கைலாயம் ,பத்திரிகவனம் (இலந்தை மரம் கொண்டது )ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்பட்ட தளத்திற்கு வந்த ராமன் சிவபூஜைகள் செய்து ப்ரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டு தன் ஊருக்கு சென்றார் என்று கோவில் சுவடுகள் சொல்கிறது .
மனு அரசனால் கோபுரமும் ,பாண்டிய மன்னர்களால் கருவறைகளும் கட்டி தரப்பட்டது என்றும் ,3000 வருடமாக உயிருடன் இருக்கும் இலந்தை மரமும் ,
மரத்தின் அடியில் மாணிக்கவாசகருக்கு உமா மஹேஸ்வரராக காட்சி கொடுத்து, 999 ரிஷிகளை தன்னுள் அடக்கி கொண்ட தளமும் ,மண்டோதரிக்கு ராவணனை திருமணம் செய்த வைக்க சிவபெருமானை அவதரித்த இடமும்(சிவனின் ஊர் என்று சொல்லப்படுகிறது )
சிவ ரகசியத்தை அழகிய மங்கைக்கு சொல்லிய இடமும் ,முதன் முதலில் நடராஜ தரிசனத்தை அம்பாளுக்கு கொடுத்த இடமும் கொண்டது உக்கர கோச மங்கை என்னும் அதி சிதம்பரம் ....
மாணிக்கவாசகர் சொல்லித்தந்த பள்ளியறை எழிச்சி முதல் பள்ளியறை முடிவு வரை அனைத்தும் இந்த கோவிலில் இருந்து தான் உலகில் உள்ள எல்லா சிவபெருமான் கோவில்களுக்கும் பரவியது/ பின்பற்ற படுகிறது ,
இராவணன் வதம் பின்புதான் ராமனால் நவகிரகம் (நவபாஷாணம் )
பூமிக்கு வரப்பட்டு நமக்கு தெரியப்பட்டது வழிபாடு செய்ய பட்டது என்று இந்த கோவில் சுவடுகள் சொல்கிறது .
ஒரே மரகத கற்களினால் உண்டான நடராஜ உருவம் மார்கழி திருவாதிரை அன்று அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து பிறகு சந்தனத்தால் மூழ்கி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
சிவனே மண்டோதிரிக்கு ராவணனை திருமணம் செய்து வைத்த படியால் இங்கு மங்கள நாயகி ,மங்கள நாயகன் ,மங்கள விநாயகம் என்ற மூர்த்திகளும் உள்ளனர் ,
சூரியன் ,சந்திரன் ,சனி இவர்கள் மட்டும் இங்கேய இருந்து வழிபடுகின்றனர் என்றும் மற்ற கோள்கள் இல்லை என்றும் சொல்ல படுகிறது ,
மேலும் ,காக புஜேந்தர் ,மிருகண்டு மஹரிஷி வேத வ்யாஸர்,பராசரர் வழிபாடு செய்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது ....
மாணிக்கவாசகர் சொன்னது ....
சிவபெருமானுக்கு 1087 கோவில்கள் இருந்தாலும் உக்கிரகோசமங்கை இடமே சிவனின் ஊர் என்றும் ,
ஒரு குடும்பத்தில் ஒருவர் வந்து தரிசித்தால் அவர்களின் 3 தலைமுறைக்கு புண்ணியம் பலன்கள் தந்து காக்கப்படும் என்கிறார் ....
அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய கோவில் ...
இடம் --ராமநாதபுரம் மாவட்டம்
மதுரை வழியே ராமேஸ்வரம் புறவழிச்சாலை ...
மற்றும் காரைக்குடி வழியே ராமநாதபுரம் --மதுரை புறவழிச்சாலை ....
நமசிவாய