Wednesday, 4 January 2017

திரிபலா

திரிபலா பலன்கள்!



                                      Zoom the Picture

சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது திரிபலா சூரணம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று பொருட்களின் கூட்டமைப்பு. நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.

தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தைத் தடவிவர, விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது.

உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.
காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.

No comments: