தெய்வத்தை
நேரில் காணும் பாக்கியம் இந்தக் காலத்தில் கிடைக்காதா?
இது
கலியுகம். இதன் இலக்கணம்.. எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் தவறு செய்வார்கள்.
நல்லவர்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள். பாவத்தின் தன்மை அதிகரித்திருக்கும்.
உலகில் தெய்வத்தை நேரடியாக காண முடியாது. உண்மையான பக்தியும், தர்மமும், ஒழுக்கமும்
கடைபிடிப்பவர் வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தனது சக்தியை தெய்வம் வெளிப்படுத்தி
உறுதுணையாக இருந்து வரும்.
தீயவர்களுக்கும் தன் சக்தியை உணர்த்தினாலும் அவர்கள்
அதைப் புரிந்து கொள்ளாமல் பாவத்தில் ஈடுபடுகிறார்கள். தெய்வத்தைக் காணும்
பாக்கியம் என்பது கலியுகத்தில் குறைவே. ஆனால், மனதளவில் தெய்வீகத்
தன்மையை உணர முடியும்.
No comments:
Post a Comment