Thursday, 12 January 2017

சிங்கப்பூா் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலாயம்


08.01.2017 மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று காக்கும் தெய்வம் ஸ்ரீமன் நாராயண பெருமாளை காண சென்றேன். இவரை பார்க்கும் பொழுதெல்லாம் எண் கண்களில் கண்ணீர் வருகின்றது.

சிவபெருமானை பார்க்கும்  பொழுது ஓரு பயம் எந்த நேரத்தில் நெற்றி கண் திறக்குமோ எந்த நேரத்தில் சூலத்தை வைத்து குத்துவாரோ தெறியாது.

ஆனால்  ஸ்ரீநிவாச பெருமாள் சாந்த சொருபி. ஓரு நண்பரை போல் வேண்டுவனவற்றை இவரிடம் கேட்கலாம். இவரிடம் அழுது மண்றாட வேண்டியதில்லை கேட்டவுடன்  கொடுப்பவர்.


ஓரு கதை ஞாபகம் வருகிறது  

கஜேந்திர என்ற யானை ஆதிமுலமே என்று யானை பிளிறிய பொது ஓடோடி வந்து அந்த யானையினை முதலையிடமிருந்து காபாற்றியத்தை நினைவு கூறலாம். அந்த நேரத்தில் தன் மணிமுடி கூட தறிக்கவில்லை.பக்தனின் துயர் துடைக்க அவ்வளவு அவசரம்.
இவர் வைகுண்டத்தை விட பூலோகத்திலே அதிக நாட்கள் தங்கி விடுகிறார் தன் பக்தனின் துயர் துடைக்க.

மேலும் எங்கோ படித்த ஞாபகம் ஓரு சிவ முனிக்கு தான் கஷ்டம் வந்த நேரத்தில் சிவனை விட பெருமாளே ஓடோடி வந்து உதவி செய்துள்ளர். இவரின் கருனையை  பத்தி  நாம்  புரிந்து கொள்ளலாம்.
இவரும் தன்னை சரனடையும் பக்தர்களுக்கு முக்தி கொடுத்து பிறவா நிலையை அடைய செய்பவர்.

நான் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியில்  ஸ்ரீநிவாச பெருமாளை பார்த்து ஆசிகள் வாங்கி செல்வேன்.


அனைத்து லோகங்களின் செல்வம் ,நிதி, அதிர்ஷ்டம், புதையல்களுக்கு சொந்தக்காரர்.

























No comments: