Thursday, 5 January 2017

அட்ட வீரட்டானம் முன்னுரை


  சிவனின் எட்டு  (வீரம்  மற்றும் வதம்) ஆகியவற்றிக்கு பெயர் சொல்லும்  8 திருத்தலங்கள்.   





                                                                              zoom the picture

கடந்த 2014  ம் ஆண்டு  நான்கு அட்ட வீரட்டானம்  ஸ்தலங்களுக்கு சென்று வந்தேன். இந்த திருத்தலங்களின் பெருமைகளை எனக்கு அறிமுகம் செய்தவா்  அமெரிக்காவில் அணு விஞ்ஞானி யாக இருக்கும் மதிப்பிற்குரியவர் திரு ராம் அண்ணா . அவர்கள். எனக்குள் இருக்கும் சிவ அன்பை ஆறாக பெருக்கோட செய்தவர். அவரை நான் குருவாக கொண்டுள்ளேன்.

அனைத்தையும் இயக்குபவர் பரபிரமம் சிவபெருமானின் கருனையால் திரு ராம் அண்ணா  அவர்களின் நட்பு கிடைத்தது. இவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் நேரடி மாணவர் ஆவார். தற்சமயம் இவர் சத்குரு திருமுலரின் திருமந்திரத்திற்கு மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம்  YOU TUBE ல்  MP3 யாக பதிவேற்றுகிறார். 

இவரின் பேச்சை கேட்பவர்கள் ஆதி குரு   சிவபெருமானின் அன்பை பெற்றவராவர். அவரின் கணிவான பேச்சை கேட்டு பாருங்கள்.

கீழே உள்ள YOU TUBE லிங்கை COPY  செய்து கொள்ளுங்கள். பின்னர்  USE GOOGLE TO OPEN THE YOUTUBE THEN PASTE THE LINK

  தொடர்ந்து கேட்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCx-_zxrROJ1fxFmwKgwf3lA

https://www.youtube.com/channel/UCx-_zxrROJ1fxFmwKgwf3lA
அட்டவீரட்டானங்களை தரிசிப்பதால் கிடைக்கும் வடுக ஆசிகள்!!!

சிதம்பர ரகசியம் என்பதே செல்வத்தை நிர்வாகிக்கும் இறைவன் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர்,சொர்ணதாதேவியுடன் அருள்பாலிக்கும் சன்னதிதான்!
எப்படி சூரியனை எட்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சுற்றிவருகின்றனவோ,அதே போல சூரியனின் பிராணதேவதையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்,சொர்ணதாதேவி இருக்கும் சிதம்பரத்தைச் சுற்றிலும் அட்டவீரட்டானங்கள் அமைந்திருக்கின்றன;

பைரவப் பெருமானின் வீரதீரப்பராக்கிரமச் செயல்கள் இந்த அட்டவீரட்டானங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன;

யாருக்கு பூர்வபுண்ணியம் இருக்கிறதோ,யாருக்கு சித்தர்களின் ஆசி இப்பிறவியில் கிட்டுமோ;யாருக்கு தகுந்த ஆன்மீக குரு கிட்டுமோ;யார் இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்வார்களோ அவர்கள் மட்டுமே இந்த அட்டவீரட்டானங்களுக்கும் சென்று சிவலிங்க வடிவில் அமைந்திருக்கும் வீரட்டேஸ்வரர்களைத் தரிசிக்க முடியும்.

தமது பிறப்புகளின் ரகசியத்தை பைரவப்பெருமானின் மீது கொண்டிருக்கும் பக்தியால் அவிழ்க்க முடியும்.



 அட்ட வீரட்டானங்களில் நிகழ்ந்த பல நிகழ்வுகள்,நடக்கும்போது விநாயகரும்,முருகக்கடவுளும் பிறக்கவே இல்லை;என்பதை வாசிக்கும் போது எத்தனைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பைரவ திருவிளையாடல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.

இந்த அட்டவீரட்டானங்களுமே நமது தமிழ் நாட்டில் இருப்பது நாம் பல யுகங்களாக செய்த புண்ணியம் என்றே எண்ணத் தோன்றுகிறது.அப்படிப்பட்ட அட்டவீரட்டானங்களுக்கு நாம் ஒரே ஒருமுறை சென்று தரிசிக்க வேண்டும் எனில் நமக்கு நமது பித்ருக்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளாசியும் இருக்க வேண்டும்;


https://www.youtube.com/watch?v=jTZc30kdcaE


No comments: