Friday, 10 March 2017

பூக்களை பறிப்பதால் வரும் தோஷம்


  அகத்தியப் பெருமான் அருளிய இந்த அருள் வாக்கை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்  தோன்றியது. கீழே தருகிறேன். படித்து உணர்ந்து செயல்படுங்கள்.

"பூக்களைப் பறித்தாலும், தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு என்ற நோக்கத்திலே மெய்யாக, மெய்யாக, மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும்பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல.

அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும், இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும், பூக்களின் சாபத்தையும், விருக்ஷங்களின் சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது.


ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும், தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

ஒரு (வாழ்ந்த) மகான் உண்மையாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான், நல்ல சேவைகளை செய்திருக்கிறான், பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு உடன்பாடு இல்லை."

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
 அருளிய இந்த அருள் வாக்கை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்  தோன்றியது. கீழே தருகிறேன். படித்து உணர்ந்து செயல்படுங்கள்.







ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

No comments: