Sunday, 5 March 2017

கால பைரவரின் வேட்டை -1 -குழந்தை கடத்தல்



கடந்த  இரண்டு வாரங்களாக செய்திதாள்களில் குழந்தை கடத்தல் படித்தவுடன் என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை . பணத்திற்காக குழந்தைகளை கடத்துவதா. 

சில ஆன்மிகவாதிகளிடம் கீழ் கண்டவாறு எழுதி அனுப்பினோன் ஓன்றும் பதில் இல்லை.


ஐயா தாங்களிடம் தீர்வு உள்ளதா.

ஐயா. தமிழகம் மற்றும் உலகம் முழுவதம் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.ஐயா அந்த பிஞ்சு குழந்தைகள் மனசு என்ன பாடுபடும்கடத்துபவர்கள் அந்த குழந்தைகளுக்கு நல்ல உணவு ,விளையாட்டு பொருட்கள் வாங்கி தர இயலுமா. குழந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம் அம்மா மட்டும் தான். இந்த பரந்த வெளியில் அவர்களுக்கு யார் ஆதரவு. ஐயா தாங்கள் மகானிடம் கூறி  அவர்களுக்கு நல் வழி காட்ட வேண்டும். விரைந்து குழந்தைகளை மீட்டு தாய் தந்தையிடம் சேற்க வேண்டும்.

கால பைரவரின் கருனை

singapore Farrer park peruman kovil
china town mariamman kovil 
kallang sivan temple. & kala bairavar

மேலே உள்ள 3 கோவில்கழுக்கு சென்று குழந்தை கடத்தலை தடுக்க வேண்டும் என்று விளக்கு போட்டேன் . 5.3.2017 வளர் பிறை அஷ்டமி ராகு காலத்தில் kallang sivan temple. கால பைரவரிடம் குழந்தை கடத்தலை தடுக்க வேண்டும் என்று 11 விளக்கு போட்டேன். என்ன ஆச்சர்யம் இன்று 6.3.2017 தினதந்தியில் நல்ல செய்தி வந்துள்ளது. என்னுடைய  பிரத்தனைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் 

                                 தெய்வம் நின்று கொள்ளும். 


                            தினதந்தி 6.3.2017 செய்தியை கொடுத்துள்ளேன். 

டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி



டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி.இவர்களது 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி

உலகில் மனித கடத்தலில் தண்டனை பெற்றவர்களில் 10க்கு 3 பேர் பெண்கள் ஆவார்கள். மனித கடத்தலில் பெண்கள் ஈடுபடும் போது கடத்தபடுபவர்களை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க முடிகிறது. அவர்களை எளிதில் ஏமாற்றி கடத்த முடிகிறது. 

இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில்  இருந்தும் வெளிநாடுகளுக்கு வங்கதேசம் வழியாக பெண்கள் கடத்தப்படும் கொடூரம்  ஓசையின்றி நடந்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நா டகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பெண்களை கடத்தும் கும்பலை பிடிக்க நாடெங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது டெல்லியைச் சேர்ந்த கணவன் - மனைவியான அபக் உசேன், சாய்ரா பேகம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப் பெரிய தொழிலாக செய்து வந்தது கண்டு பிடிக்கபட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் சுமார் 4 ஆயிரம் இளம் பெண்களை ஏமாற்றி கடத்தி விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு பெண் ணையும் விற்கும் போதும் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால், நாளடைவில் அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை நியமனம் செய்து பெண்களை கடத்தி விற்பதை விரிவுபடுத்தி யுள்ளனர்.

பெண்களை கடத்தி விற்றதன் மூலம் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் ரூ.250 கோடி வரை சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் டெல்லி உள்பட பல இடங்களில் சொகுசு பங்களாக்கள் வாங்கி உள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, அங்கு வசித்து வந்தனர். ஆடி, டொயோட்டா, ஹோண்டா என்று விதம் விதமான கார்களில் வலம் வந்தனர்.தங்கள் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது  என்பதற்காக உசேனும், சாய்ரா பேகமும் 2 போலி நிறுவனங்களை நடத்தி வந்தனர். பெண்களை விற்பனை செய்வதற்கு அவர்களது நிறுவனங்கள் உதவியாக இருந்துள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அபக்உசேனும், சாய்ரா பேகமும் பரம ஏழையாக இருந்தவர்கள். இருவரும் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி டெல்லி வந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. ஐதராபாத்தைச் சேர்ந்த அபக்உசேன், டெல்லி சென்று ஒரு நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபத்தைச் சேர்ந்த சாய்ரா அறிமுகம் ஆனார்.

சாய்ரா விபசார தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரை 1999-ம் ஆண்டு அபக்உசேன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டனர்.

குறுகிய காலத்தில் ஏராளமான பெண்களின் விபசாரம் மூலம் அவர்களுக்கு பணம் கொட்டியது. நாளடைவில் ஏஜெண்ட் மூலம் அதிக பணம் கிடைத்தால் கோடீசுவரர்கள் ஆகி விட்டனர். தற்போது கைதாகி சிறையில் உள்ள அவர்களுடன் பெண்களை கடத்தியதாக மேலும் 10 பேர் உள்ளனர். அவர்கள் மீது 3895 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 126 பேர் காட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

அபக்உசேன் - சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி விற்று சம்பாதித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவும் அடங்கும்.





No comments: