1 கப் வெண்டைக்காய் தினமும் கொடுங்கள்!
1.தேர்வுக்கான உணவு குறித்து கூறும், மைண்ட் ப்ரெஷ் டிரெயினிங் மனவளப் பயிற்சியாளர் கீர்த்தன்யா: தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு, தாம் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். ஆனால், 'படித்தது மறந்து விடுகிறதே... எப்போதும் ஒருவித சோர்வு இருப்பதால், எப்படி நம்மால் படிப்பில் கவனம் செலுத்த முடியும்' என்ற வருத்தமும் வாட்டும்.
2.உடல் மற்றும் மூளை செயல்திறனை அதிகரிக்க செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால், முழு வெற்றி சாத்தியம்.
3.நம் மூளையைப் போலவே தோற்றமளிக்கும் வால்நட், சுறுசுறுப்பைத் துாண்டுகிறது. தினமும், 20 கிராம் நட்ஸ் கலவையாகச் சாப்பிட்டு வந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதத்தில் கிடைக்கும். அதையும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் சாப்பிடலாம்.
4.நீண்ட நேரம் அமர்ந்து படிக்க உடலும், மூளையும் களைத்துப் போகாமல் ஒத்துழைக்க சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். மதிய உணவில் கண்டிப்பாக கீரை, காய், தயிர், சாதம், தலா 1 கப் போதுமானது.
தேர்வு எழுதும் வரை, தினமும் வேண்டுதல் போல, ஒரு கப் வெண்டைக்காய் சேர்த்துக் கொடுங்கள்.
5.கணிதப் பாடத்தில் மட்டும் அல்ல, எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற வெண்டை உதவும்.
மூன்று வேளை வயிறு முழுக்க சாப்பிடுவதை விட, குறுகிய இடைவெளியில் சிறு சிறு அளவில் சாப்பிடுவது நல்லது. வீட்டை தவிர வெளியில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்களுக்கு தேர்வு முடியும் வரை, 'குட்பை' சொல்லி விடுங்கள். ஆசைப்பட்டு கேட்டாலும் வாங்கி தராதீர்கள்.
6.காபி மற்றும் டீ கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இனிப்பு, உப்பு, காரம் மற்றும் அதிக ருசியான உணவுகள் கொடுப்பதும் அளவோடு இருக்கட்டும். அதிக மசாலாப் பொருட்கள் சேராத உணவையும், அதிக காரமில்லாத உணவையும் கொடுக்க வேண்டும்.
7.இரவு துாங்கும் முன், பால் அல்லது லேசான சுடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொடுக்கலாம்; தேர்வு பற்றி பதற்றம், மன அழுத்தம் குறையும். தினமும், 6 அல்லது 7 மணி நேரம் வரை துாக்கத்தைக் கட்டாயமாக்குங்கள்.
8.நிறைய நீர்ச்சத்து காய்கறிகளை உணவில் சேருங்கள்.தேர்வு என்பது பயத்தை உண்டாக்கும் விஷயமல்ல. நாம் படித்ததை சரியாகப் படித்து இருக்கிறோமா என்பதை சரி பார்க்கும் தருணமே. இதில் உடல் ஆரோக்கியம், உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்தி, அதிக மதிப்பெண்களைக் குவிக்க வைக்கும்!
No comments:
Post a Comment