வாகனங்களைப் போல அவரவர் இல்லங்களின் மீது படியும் திருஷ்டி தோஷங்கள் நிறைய உண்டு. எமது ஆஸ்ரமத்திலிருந்து பெறப்படும் கருவலரி போன்ற சங்குகள் கடுமையான கண்திருஷ்டி தோஷங்களையும் களையும் வல்லமை உடையவை.
இத்தகைய சங்குகளை இல்லங்களின் முன் வாயிலில் வைத்து உரிய வழிபாடுகளை மேற்கொள்வதால்
கண் திருஷ்டி தோஷங்களிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
பொதுவாக, வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் போன்ற பூச்சுகளைப்
பூசி எப்போதும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். எந்த அளவிற்கு
உங்கள் இல்லங்களில் தூசி, ஒட்டடை, அழுக்கு, குப்பை கூளங்கள் போன்றவை
சேராமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் இல்லங்கள் திருஷ்டி தோஷங்களால்
பாதிக்கப்படாமல் இருக்கும்.
குப்பை கூளங்களே தோஷங்களை ஈர்க்கும் பெட்டகங்கள்.
கண்ணாடி போல் உங்கள் இல்லங்கள் தூய்மையாக இருந்தால் கண்ணாடியில் விழும் சூரிய
ஒளியைப் போல் திருஷ்டி எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச்
சென்று விடும்.
வீட்டின்
முன்புறம் பாதுகாப்புச் சுவர்களில் உள்ள கதவுகளை இரும்புக் கம்பிகளால் அமைத்து
கருப்பு வண்ணங்களைப் பூசுவதால் திருஷ்டி தோஷங்கள் வீட்டின் உள்ளே புகாதவாறு
பாதுகாத்துக் கொள்ளலாம். இரும்பு உலோகத்திற்கும் கருப்பு வண்ணத்திற்கும் திருஷ்டி
சக்திகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு.
கோபுர தரிசனம் கடுமையான
திருஷ்டி
விளைவுகளையும் களையும்
இதனால் வீட்டில் வசிப்பவர்கள் மேல் படியும் தோஷங்களும் வீட்டின்
மேல் படியும் கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்பது உண்மையே. ஆனால், இவ்வாறு திருஷ்டி கழித்த
பூசனிக்காயை முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ உடைத்து விடுவதை
நடை முறையில் பலரும் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு
திருஷ்டி பூசனிக்காயை நடுரோட்டில் உடைத்தால் பரவெளியை அடைந்த திருஷ்டி தோஷங்கள்
மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும் என்பது நியதி, அதாவது எங்கிருந்து திருஷ்டி
வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்று விடும், அதனால் திருஷ்டிகள் கழியாத நிலையே உருவாகும்.
மேலும் அவ்வாறு உடைந்த
பூசனிக்காய் துண்டுகள் மீது ஏதாவது வாகனங்கள் ஏறி வழுக்கி விழுந்து, குழந்தைகளுக்கோ மக்களுக்கோ
துன்பங்கள் ஏற்பட்டால் அந்த துன்பங்களும் வேதனைகளும் பூசனிக்காயை உடைத்தவர்களைச்
சென்று சேரும் என்பது உண்மை. எனவே, இது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டு
வந்த கதையாகி விடுமல்லவா?
இத்தகைய
துன்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் திருஷ்டி கழித்த பூசனிக்காயை நடுரோட்டில்
உடைக்காமல் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் வாகனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ இடையூறு
இல்லாத வண்ணம் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வந்து விட வேண்டும்.
அந்த பூசனிக்காய்
வெயிலில் காய்ந்து உலர்ந்து விட்டாலோ அல்லது பூசனிக்காயை ஏதாவது ஆடோ, மாடோ தின்று விட்டால்
திருஷ்டி தோஷங்கள் விரைவில் கழிந்து விடும் என்பது சித்தர்கள் கூறும் அறிவுரை.
வீட்டைக்
கட்டிய பின் அதில் படியும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவது ஒரு புறம் இருக்க
வீட்டைக் கட்டும்போதே சில வாஸ்து லட்சண விதிகளைப் பின் பற்றுவதால் பெரும்பாலான
தோஷங்கள் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
இத்தகைய வாஸ்து இரகசியங்கள்
எமது ஆஸ்ரம வெளியீடுகளான ”பூமி அந்தர வாஸ்து சுந்தர
இரகசியங்கள் (இரண்டு பாகங்கள்)” என்னும் நூல்களில் காணலாம்.
பொதுவாக, நிலம் எந்த வடிவத்தில்
இருந்தாலும் அதில் சதுரம் அல்லது நீண்ட சதுரம் (செவ்வகம்) வடிவத்தில் வீடுகளைக்
கட்டுவதால் பெரும்பாலான கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.
நிறைய பணம் கொடுத்து இடத்தை வாங்கி விட்டோம் என்ன செய்வது? என்று நினைத்துக் கொண்டு
கோணல்மானலாக நிலம் முழுவதும் கட்டிடத்தைக் கட்டி வேதனையை அனுபவிப்பதை விட சரியான
வடிவத்தில் வீட்டைக் கட்டி எஞ்சிய இடத்தில் மணம் பரப்பும் மலர்ச்செடிகளை வளர்த்து, இறைவனை பூஜிப்பதால்
நிம்மதியான, அமைதியான, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
No comments:
Post a Comment