Thursday, 20 October 2016

சித்தர்களின் வயது



கோரக்கர் குண்டா சதுரகிரி


கண் திருஷ்டி



வாகனங்களைப் போல அவரவர் இல்லங்களின் மீது படியும் திருஷ்டி தோஷங்கள் நிறைய உண்டு. எமது ஆஸ்ரமத்திலிருந்து பெறப்படும் கருவலரி போன்ற சங்குகள் கடுமையான கண்திருஷ்டி தோஷங்களையும் களையும் வல்லமை உடையவை. 

இத்தகைய சங்குகளை இல்லங்களின் முன் வாயிலில் வைத்து உரிய வழிபாடுகளை மேற்கொள்வதால் கண் திருஷ்டி தோஷங்களிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம். 


பொதுவாக, வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் போன்ற பூச்சுகளைப் பூசி எப்போதும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். எந்த அளவிற்கு உங்கள் இல்லங்களில் தூசி, ஒட்டடை, அழுக்கு, குப்பை கூளங்கள் போன்றவை சேராமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் இல்லங்கள் திருஷ்டி தோஷங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும். 

குப்பை கூளங்களே தோஷங்களை ஈர்க்கும் பெட்டகங்கள். கண்ணாடி போல் உங்கள் இல்லங்கள் தூய்மையாக இருந்தால் கண்ணாடியில் விழும் சூரிய ஒளியைப் போல் திருஷ்டி எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விடும். 

வீட்டின் முன்புறம் பாதுகாப்புச் சுவர்களில் உள்ள கதவுகளை இரும்புக் கம்பிகளால் அமைத்து கருப்பு வண்ணங்களைப் பூசுவதால் திருஷ்டி தோஷங்கள் வீட்டின் உள்ளே புகாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம். இரும்பு உலோகத்திற்கும் கருப்பு வண்ணத்திற்கும் திருஷ்டி சக்திகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு.  



கோபுர தரிசனம் கடுமையான 

திருஷ்டி விளைவுகளையும் களையும்

அவ்வப்போது வீட்டில் உள்ள அனைவரையும் வீட்டின் முன் வாசலில் அமர வைத்து ஒரு பூசனிக்காய் மேல் கற்பூரத்தை ஏற்றி வைத்து திருஷ்டி கழிப்பது நலம். 

இதனால் வீட்டில் வசிப்பவர்கள் மேல் படியும் தோஷங்களும் வீட்டின் மேல் படியும் கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்பது உண்மையே. ஆனால், இவ்வாறு திருஷ்டி கழித்த பூசனிக்காயை முச்சந்தியிலோ, நாற்சந்தியிலோ உடைத்து விடுவதை நடை முறையில் பலரும் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். 


இவ்வாறு திருஷ்டி பூசனிக்காயை நடுரோட்டில் உடைத்தால் பரவெளியை அடைந்த திருஷ்டி தோஷங்கள் மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும் என்பது நியதி, அதாவது எங்கிருந்து திருஷ்டி வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்று விடும், அதனால் திருஷ்டிகள் கழியாத நிலையே உருவாகும்.  

மேலும் அவ்வாறு உடைந்த பூசனிக்காய் துண்டுகள் மீது ஏதாவது வாகனங்கள் ஏறி வழுக்கி விழுந்து, குழந்தைகளுக்கோ மக்களுக்கோ துன்பங்கள் ஏற்பட்டால் அந்த துன்பங்களும் வேதனைகளும் பூசனிக்காயை உடைத்தவர்களைச் சென்று சேரும் என்பது உண்மை. எனவே, இது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த கதையாகி விடுமல்லவா? 

இத்தகைய துன்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் திருஷ்டி கழித்த பூசனிக்காயை நடுரோட்டில் உடைக்காமல் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் வாகனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ இடையூறு இல்லாத வண்ணம் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வந்து விட வேண்டும். 

அந்த பூசனிக்காய் வெயிலில் காய்ந்து உலர்ந்து விட்டாலோ அல்லது பூசனிக்காயை ஏதாவது ஆடோ, மாடோ தின்று விட்டால் திருஷ்டி தோஷங்கள் விரைவில் கழிந்து விடும் என்பது சித்தர்கள் கூறும் அறிவுரை.

வீட்டைக் கட்டிய பின் அதில் படியும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவது ஒரு புறம் இருக்க வீட்டைக் கட்டும்போதே சில வாஸ்து லட்சண விதிகளைப் பின் பற்றுவதால் பெரும்பாலான தோஷங்கள் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ளலாம். 

இத்தகைய வாஸ்து இரகசியங்கள் எமது ஆஸ்ரம வெளியீடுகளான பூமி அந்தர வாஸ்து சுந்தர இரகசியங்கள் (இரண்டு பாகங்கள்)என்னும் நூல்களில் காணலாம். 

பொதுவாக, நிலம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் சதுரம் அல்லது நீண்ட சதுரம் (செவ்வகம்) வடிவத்தில் வீடுகளைக் கட்டுவதால் பெரும்பாலான கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம். 

நிறைய பணம் கொடுத்து இடத்தை வாங்கி விட்டோம் என்ன செய்வது? என்று நினைத்துக் கொண்டு கோணல்மானலாக நிலம் முழுவதும் கட்டிடத்தைக் கட்டி வேதனையை அனுபவிப்பதை விட சரியான வடிவத்தில் வீட்டைக் கட்டி எஞ்சிய இடத்தில் மணம் பரப்பும் மலர்ச்செடிகளை வளர்த்து, இறைவனை பூஜிப்பதால் நிம்மதியான, அமைதியான, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.

சொர்க்கம்





சொர்க்கம் ,நரகம் இருக்கிறதா..

நிச்சயம் இருக்கிறது....நம்முடைய உயர்ந்த ,நல்ல எண்ணங்கள் ,செயல்பாடுகள் பொறுத்து இறந்த பின் அந்த ஆத்மா அதாவது ஆவி உருவம்..சந்திரனை நோக்கி சென்றால் வைகுண்டம்..மறுபிறப்பு உண்டு....அப்பிறவியில் சுகமான வாழ்க்கையுண்டு 

....சூரியனை நோக்கி சென்றால் சொர்க்கம் மறுபிறவி இல்லை....

இருள் கிரகமாகிய சனியை நோக்கி சென்றால் நரகம்....!! 

பல நூறு ஆண்டுகள் கஷ்டம் உண்டு....கருட புராணம் இதை சொல்கிறது 

.இந்த சட்டங்கள் வயோதிகம்,நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு மட்டும்..விபத்து,தற்கொலை என இறப்பவர்களுக்கு அப்படி அல்ல...

அவர்கள் ஆவி,பிசாசு எனப்படுகின்றனர்...இறந்த 20 அடிக்குள் அந்த ஆவி அலையும்..உயரக்கிளம்பவும் முடியாது..வெளியே செல்லவும் இயலாது..அருளாளர்களின் ஆசி கிடைத்தால்தாம் மோட்சம்.

சனீஸ்வரன்



சனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் 

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,  நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப் படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.

 இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி , உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட, ஒரு தேவ ரகசியம் போன்ற தகவலை , உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப் பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார். 

இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி, வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும். காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா …. தெரியவில்லை!.. 

ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. 

தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி காக்கை இனம். குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். 

தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை காகா…’என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். 

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் காகா…’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப் பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. 

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு. 

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. தந்திரமான குணம் கொண்ட காக்கை காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. 

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே, காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

உப்பு மந்திரம்




உப்பு மந்திரம்

இரண்டு கைகளில் உப்பை வைத்து கொண்டு கைகளை முடி கிழே உள்ள மந்திரத்தை 10 தடவை சொல்லவும்

நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்

நான் ஆனந்தமாக இருக்கின்றேன்

நான் செல்வந்தனாக இருக்கின்றேன்

நான் அன்பானவனாக இருக்கின்றேன்

நான் சாதனையாளனாக இருக்கின்றேன்

என்னால் எனதயும் சாதிக்க முடியும்
என்னால் எனதயும் சாதிக்க முடியும்
என்னால் எனதயும் சாதிக்க முடியும்

வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம்.

எங்கும் நிறைந்த பிரபஞ்சமே எனது தேவைகளை அன்புடன் பூா்த்தி செய்வீா்களாக

இந்த செயல்கள் மூலமாக எனது அனனத்து குறைபாடுகளும் காணாமல் போகுமாக.
எனது ஆரோக்கியமும் அன்பும் ஆனந்தாமும் பெருகி கொண்டே இருக்கிறது

எனது ஆரோக்கியமும் அன்பும் ஆனந்தாமும் பெருகி கொண்டே இருக்கிறது

எனது ஆரோக்கியமும் அன்பும் ஆனந்தாமும் பெருகி கொண்டே இருக்கிறது

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்


நன்றி நன்றி நன்றி 

சித்திரகுப்தர்




           முன் ஜென்ம பாவம் போக்கும் சித்திரகுப்தர் கோவில்

                                சித்திரகுப்தர்.

இவரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். சிவன் தன் கைகளால் ஒரு அழகான சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தாள் அம்பிகை. இப்படி உயிர் பெற்ற சித்திரமே சித்திரகுப்தர். அன்னை பராசக்தி அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாள் ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் என்பதுவும் இதில் விசேஷம். அதனால் கூட அவருக்கு சித்திரகுப்தர் என பெயர் பொருந்தியது. பிறந்து வளர்ந்தவனுக்கு ஒரு வேலை வேண்டாமா?.

அதனால் சித்திரகுப்தருக்கு ஒரு வேலையும் தந்தார் இறைவன். மனிதர்கள் செய்யும் பாவ புண்ணிய கணக்கை எழுதி, மறுபிறவியில் அதற்கு ஏற்ப வாழ்க்கை நிலை அமைத்து தருவதுதான் சித்திரனின் வேலை. ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், “ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முன் ஜென்மம் இருந்ததா இல்லையா? என்றால் நிச்சயமாக நம் எல்லோருக்கும் இருந்தது. ஜடாதரராகியஎன்ற முனிவர், காட்டின் வழியாக வந்து கொண்டு இருந்தார். இருட்டிவிட்டது. இதை கண்ட ஆகுகன் ஆகுகி என்ற வேட தம்பதிகள், “இந்த இருட்டில் நடந்து சென்றால் உங்களுக்கு மிருகத்தால் ஆபத்து வரும். அதனால் எங்கள் குடிசையில் தங்கி மறுநாள் செல்லுங்கள்.என்றனர் முனிவரிடம். கனிவான பேச்சு, ஜடாதரராகி முனிவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

சரி என்று வேடனின் குடிசையில் தங்க சம்மதித்தார். மிகவும் சிறிய குடிசையாக இருப்பதால் இரண்டு பேருக்கு மேல் தூங்க கூட முடியாத அளவில் மிகச்சிறு குடிசை அது. அதனால் முனிவர், “அப்பாநான் வெளியே படுத்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் உள்ளே உறங்குகள்.என்றார். அதற்கு வேடனோ, “நீங்கள் விருந்தினர். விருந்தினரை வாசலில் படுக்கவைப்பது முறையல்ல. அதனால் நானும் என் மனைவியும் வெளியே உறங்கிக்கொள்கிறோம்.என்றார் ஆகுகன். ஒரு பெண்ணை வெளியே படுக்கவைப்பதா.? அது பாவச்செயல்.என்றார் ஜடாதரராகி முனிவர். சாமீ.. நீங்கள் என் தந்தையை போன்றவர். நான் உள்ளே உறங்குகிறேன்.என்று கூறி முனிவரும் ஆகுகியும் குடிசைக்குள் உறங்கினார்கள்.

வேடன் குடிசையின் வெளியே உறங்கினான். விடிந்தது விடிந்ததும் குடிசையைவிட்டு வெளியே வந்து பார்த்தாள் வேடனின் மனைவி ஆகுகி. அய்யோ…“ என கதறி துடித்தாள் அவள். அவள் கதறலை கேட்டு பதறிய முனிவர், வெளியே வந்து பார்த்தார். ஏதோ ஒரு கொடும் மிருகத்தால் வேடன் கொல்லப்பட்டு கிடந்தான். அவன் உடலை மிருகங்கள் குதறி துண்டாக்கி இருந்தது. தன் கணவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தாள் ஆகுகி. கணவரின் உடலுக்கு தீ மூட்டிவிட்டு முனிவர் தடுத்தும் கேளாமல் அதிலேயே அவளும் உடன்கட்டை ஏறினாள். என்னை தம் தந்தையாக கருதி உபசரித்த இப்பிள்ளைகள், என்னால்தானே இந்த கொடிய நிலையை அடைந்தனர்.

பிள்ளைகள் தம் கண் முன்னால் எரிவதை பார்ப்பவன் எத்தனை பாவம் செய்த பாவி என நினைத்து துடித்தார் முனிவர். அதனால் அவரும் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்து தன் உயிரையும் விட்டார் முனிவர். இந்த மூவரும் மறுபிறவி எடுத்தார்கள். வேடன் நிஷததேசத்தில் வீரசேன மகாராஜனின் மகனாக நளன் என்ற பெயரில் பிறந்தார். ஆகுகி, விதர்ப்ப தேசத்தில் வீமராஜன் மகளாக தமயந்தி என்ற பெயரில் பிறந்தாள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயல் பாவச்செயல்தான் என்பதால் முனிவராக இருந்து தம்பதிகளை பிரித்த பாவத்திற்காக மறுபிறவில் அன்னப்பறவையாக பிறந்து, நள தமயந்தியை சேர்த்து வைத்தார் அன்னப்பறவை வடிவில் பிறந்த முனிவர் என்கிறது நள தமயந்தி சரித்திரம். முன்ஜென்மம் இருக்கிறது என்று புராணகதைகளில் மட்டும் சொல்லவில்லை. இக்காலத்திலும் பல சம்பவங்கள் நமக்கு கிடைக்கிறது.

ஒரு செய்திதாளில் வந்த தகவல். அதில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சிறுவன் தன் பூர்வ ஜென்ம நினைவு திரும்பப் பெற்றான். போன ஜென்மத்தில் வாழ்ந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த முதிய பெண்மணியை கண்டு அழதான். தன் மகன் மகள் திருமணம் நடந்ததா

மகள் திருமணத்தில்தான் நான் இறந்தேன்.என்று பழைய சம்பவங்களை எல்லாம் சரியாக சொல்லி சுற்றி நின்ற உறவினர் நண்பர்களையும் சரியாக பெயர் சொல்லி அழைத்து அதிர வைத்தான். இப்படி போன ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் இந்த ஜென்மத்தில் பெரிய பாதகத்தை கொடுக்க கூடாது என்ற கருத்தில்தான் சிவசக்தியே சித்திரகுப்தரை உருவாக்கினர். திருமணதடை, சொத்து தகராறு, உடல் உபாதைகள் குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சனைக்களுக்கு காரணம் முன் ஜென்ம கர்மவினையே என்கிறது நம் இந்து சமயம்.


சித்திரகுப்தரை வணங்கினால் பாவங்கள் குறையும். பாவங்கள் குறைந்தால்தான் நல்ல நேரத்தில் இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்கும். காஞ்சிபுரம் பஸ் நிலையத்தின் அருகே சித்ரகுப்தரின் கோவில் இருக்கிறது. அவரின் ஒரு கையில் ஒலைச்சுவடியும் மற்றொரு கையில் எழுத்தாணியும் இருக்கும். நாம் இவரை வணங்கினால் ஞானமும் ஏற்றமும், கேதுவால் வரும் தொல்லையும் நீங்கும். அத்துடன் பாவங்களும் குறைய வாய்ப்பும் இருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்.

அகத்தியர் மூல மந்திரம்




அகத்தியர் மூல மந்திரம் 

         ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே 

        சாப பாவ விமோட்சனம்  

       ரோக அகங்கார துர் விமோட்சனம்   

        சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் 

        சதுா்யுக சற்குருவே ஓம் அகஸ்திய 

       கிரந்த கர்த்தாய  நம

ஓம் சிவ சிவ ஓம்


குபேர ஜாதகம்