அன்பே சிவம்
அன்பே சிவம்
Friday, 9 September 2022
Sunday, 1 May 2022
Saturday, 9 April 2022
ஆரோக்கியம்
ஏன் இந்த இளமையின் இத்தனை மரணங்கள்??
பார்க்கும் பக்கமெல்லாம் இள மரணங்கள் பெருகி வருகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகளற்ற அந்நியர்களையும் உலுக்கி போடுகிறது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன.
இது விதியேயல்ல. இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்......
மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...
(1) உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
(2) இரவில் கண் விழித்திருத்தல்
(3) காலை உணவை தவிர்த்தல்.
(4) ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
(5.) பணத்தை நோக்கிய ஓட்டம்
(6) பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
(7) கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள்.
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது.
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரி பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தொடர்ந்து உட்கார்வதை குறையுங்கள்.
உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி சந்தோசமாக இருங்கள். உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.
ஆளை கொல்லும் கவலைகளை புறந்தள்ளி ஆளுமையை தரும் தன்னம்பிக்கையை ஆடையாக பூணுங்கள். மிதிவண்டி பயணம் பழகுங்கள்.
என் அனுபவத்தில் சொல்கிறேன்....
வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
அவமதித்து விடாதீர்கள்.........!!
விளையாடுவதை நாம் நிறுத்திக்
கொள்ளும்போது....
நம்முடன் விளையாட ஆரம்பிக்கிறது "வாழ்க்கை"
Sunday, 27 March 2022
உப்பு புளி 8 2
#நாதம் #விந்து #பரிபாஷைகள் 🙊🙊🙊👇👇👇
நாதம்--ஒலி, உகரம், பூரகம், சத்தி, எண்ணில் 2, வங், இடகலை, குளிர்ச்சி, சுவாசம் அளவு 16.
விந்து--ஒளி, அகரம், இரேசகம், சிவம், எண்ணில் 8, சிங், பிங்கலை, வெப்பம், சுவாசம் அளவு 12.
நாதவிந்து என்ற இரு சொற்களுக்கும் எதிராக மேலே சித்தர்களால் சொல்லப்பட்டிருக்கிற பரிபாஷை சொற்கள் அனைத்தும் யோகநெறியில்
பேசப்படுபவை.
நாதம்--கந்தகம், சாரம், புளி, எண்--2.
விந்து--இரசம், காரம், உப்பு, எண்--8.
நாதவிந்து என்ற இரு சொற்களுக்கும் எதிராக இரண்டாவது முறையாக மேலே சித்தர்களால் சொல்லப்பட்டிருக்கிற பரிபாஷைச் சொற்கள் அனைத்தும் வாதமார்க்கத்தில் பேசப்படுபவை.
சித்தர்கள் நாதவிந்து என்ற இந்த இரு சொற்களில் வாதத்தில் இருப்பதை யோகத்திலும், யோகத்தில் இருப்பதை வாதத்திலும் மாற்றி மாற்றி எழுதுவார்கள். நாம் குழப்பமடையாமல் இடத்திற்குத் தகுந்தவாறு சொற்களைப் பொருத்திப் பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்.
Tuesday, 1 March 2022
Sunday, 27 February 2022
Monday, 21 February 2022
பித்ருக்கள் பூஜை
பித்ருக்கள் பூஜை
#மிகவும்_அருமையான_பதிவு.
#கற்பனை_செய்து_படிக்கவும்
மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன.
சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.
பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.
இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.
நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.
நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.
ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
(ஆதாரம்: பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம், ஸ்ரீமத் மகாபாரதம் முதலிய நூல்கள்.)🌹💐🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹💐🙏
Saturday, 19 February 2022
ஜெனன சாகரம்
சித்தர்கள் ரகசியம்
#சித்தர்களின் #ரகசியங்கள்
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத்தானே!
-திருமந்திரம் - 2882
பொருள்
கொல்லனின் பட்டறை உலையில் இட்ட இரும்பு, நெருப்போடு நெருப்பாக உருமாறிவிடுவதைப்போல், சீவன் சிவனோடு இரண்டறக் கலந்து விடுகிறது. தியானப் பயிற்சியின் உச்சத்தில் சீவன் சிவனோடு கலந்து அடையும் பேரானந்த நிலையை வர்ணிக்கிறது இந்தப் பாடல்.
'கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்!' - என்பது சித்தர் ஆய்வாளர்களிடையே புழங்கும் சொலவடை.
'பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்
பலவிதமா யகண்ட பூமியெல்லாம்
ஆரப்பா வங்குமிங்கு நிறைந்துநின்றா
ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்
சீரப்பா சித்தருட மூலங்காணச்
செகத்திலே யெவரறியப் போராரையா
நேரப்பா நாமறிந்து சிறிது சொன்னோம்
நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே'
எனச் சித்தர்களைப் பற்றி போகர் உரைக்கிறார். (ஜெனன சாகரம் - பாடல்: 314) சித்தர்கள் இந்த அகண்ட பூமியில் மலைகளிலும், குகைகளிலும், வனங்களிலும் மறைந்து நின்றனர். அவர்களின் மூலத்தைக் கண்டறிய யாருக்கும் சக்தியில்லை. என் சக்திக்கு எட்டிய சிலவற்றைச் சொன்னேன். நிறைவாவதற்கென மறைவாகவே வாழ்கின்றனர் எல்லா சித்தர்களும் என்பதே இந்தப் பாடலின் சாரம்.
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே!' - என்ற சொலவடை வந்தது இதனால்தான். அவர்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தவிர்த்து, அவர்கள் காட்டிய நெறிகளில் மனதைச் செலுத்தி உலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தம்!
முழுமை பெற்ற சித்தர்களின் அடையாளங்கள் எவை என்பதை கோரக்கர் 'பிரம்ம ஞான தரிசனம்' என்னும் பகுதியில் இப்படிப் பாடுகிறார்.
'கூரான வாசி மறித்தவனே சித்தன்
குறிகண்டு மாயை வென்றவனே முத்தன்
பூராயம் தெரிந்தவனே கிரியைப் பெற்றோன்
பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்
நேரான தீட்சை பெற்றோன் சிவமுத்தன்
நிறைசிவயோகம் புரிந்தான் ஞானியாமே'
முழுமையான சிவயோகம் புரிந்து, சித்தனாகி, குருவாகிய ஆதிசித்தனிடம் தீட்சை பெற்று சீவன் முக்தனாகி, பூவுலக இல்வாழ்வில் கடமையாற்றி, சரியை வழி அடைந்தவனாகி, மூன்று மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை வென்று, சித்தர்களின் பரம ரகசிய மையமான பிரம்ம மூப்பைக் கண்டு பேரானந்த பிரம்மானந்த நிலையில் சதாசர்வ காலமும் லயித்து இருப்பவனே பூரண சித்தன் என கோரக்கர் சித்தர்களை அடையாளப்படுத்துகிறார்.
சித்தர்களில் தனியிடம் போகருக்கு உண்டு. ஏனெனில் பல சித்தர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை அவர் இயற்றிய ஜெனன சாகரம் நூலின் வழியேதாம் அறிய முடிகிறது.
அவர் பழநிமலையில் சமாதி அடைவதற்கு முன்பாக தன் வரலாற்றை ஜெனன சாகரம் என்னும் நூலில் எழுதி வைத்தார். பிறகு கோரக்கரை அழைத்தார். தன்னை சமாதி அடக்கம் செய்துவிட்டு உரகை என அழைக்கப்படும் நாகப்பட்டினத்துக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். அங்கு சென்றபின், தான் பழநியில் அடக்கம் செய்த சமாதியிலிருந்து வெளிப்பட்டு நாகை சென்று அங்கு கோரக்கரைச் சந்திப்பதாகவும் சொன்னார். அவரின் சொற்படி பழநியில் முறையாக போகரை சமாதி நிலையில் அடக்கம் செய்துவிட்டு கோரக்கர் நாகை சென்றார்.
பழநியிலிருந்த போகர், ககனமார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார். கோரக்கரைச் சந்தித்து அவரை வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோரக்கரை அடக்கம் செய்துவிட்டு ககனவெளிப்பாதையில் கடல் தாண்டிச் சென்றார்.
இந்தச் செய்திகள் கோரக்கரின் தனிநூல் தொகுப்புகளில் காணப்படுகிறது. (நூல் எண்: 4,5,6)
ஆகிட இந்நூல்களைச் சித்தன் யானும்
அறிந்த மட்டும் காவிரியின் நதிபாங்குற்று
மோகிதமாய்ச் சோழநாட்டின் கொள்ளிட மப்பால்
முத்தாநதிதீரம் பரூர்ப்பட்டி சிற்றூர்
ஏகிநிறை சமாதியுற்றேன் அதுமுன்னால்
இயற்றும் இந்நூல் வழுத்தல் இனி உற்றேனார்
பாகிதமாய்ப் பாடியபின் பலதேசம் போய்
பரிவாய் முன்னுற்ற பொய்கையூரில் வந்தேன்.
வந்தவுடன் சடையப்பக் கவுண்டன் என்னை
வாகுடனே அனுசரித்து வாழ்த்தி நின்றான்
அந்தமுடன் பரிவிருத்தி நானூற்றெட்டு
ஐப்பசிநேர் தசமிதிதி பரணித்திங்கள்
சிந்தையுறச் சமாதிநிலை யானடைந்து
சிதறாமல் சீருலகில் வாழ்ந்து சித்தாய்க்
கந்தமணம் வீசிடவும் காட்சியாகக்
காசினியில் சாவு இவனுக்கில்லை யாமே
22-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பின் கோரக்கர் வான்வெளி வழியாக பல தேசங்களுக்கும் போய் வந்திருக்கிறார். பழனிமலைக்கு வந்த கோரக்கர், போகருடன் இணைந்து மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல அபூர்வ மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். இருவரும் நீண்ட நாள் வாழக்கூடிய கற்ப ஔடதங்களை உண்டிருக்கின்றனர். பல ஆச்சர்யமான சித்தாடல்களைப் புரிந்துள்ளனர்.
ககன மார்க்கமாக கோரக்கரும் போகரும் சீனதேசம் சென்று வந்திருக்கின்றனர். மீண்டும் நாகை வடக்குப் பொய்கை நல்லூருக்கு கோரக்கர் வருகிறார். அவரை சடையப்ப கவுண்டர் வர வேற்றிருக்கிறார். பர்விரத்தியாண்டு 408 ஐப்பசி மாதம், தசமி திதி, பரணி நட்சத்திரம் தினத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் இரண்டாம் முறையாக சமாதி எய்தி இருக்கிறார். எவ்வித உடல் சிதைவும் இன்றி நறுமணம் கமழ சமாதியிலிருந்து வெளிப்பட்டு, ''எனக்கு இந்த பூமியில் சாவு இல்லை!'' எனச் சொல்லியுள்ளார். மேற்கண்ட கோரக்கரின் பாடல்கள் வழியே நாம் இந்தச் செய்திகளை அறிய முடிகிறது.
இதேபோல் சித்தர் போகரும், தனக்கும் தன் குரு காலாங்கிநாதருக்கும் உள்ள உறவு குறித்தும் தன் சீடர் புலிப்பாணி குறித்தும் தன் சப்த காண்டம் நூலில் குறிப்பிடுகிறார். (போகர் - 7000)
தான் கற்ற மந்திரம், யந்திரம், தந்திர முறைகளில் தேர்ந்து, அதன் ஆற்றல்களால் உலகின் எட்டுதிசைகளுக்கும் சென்று வந்ததாகவும் கூறுகிறார்.
தான் கற்ற யோகக் கலையின் மூலம், மூன்று யுகங்களாக நெடுந்தவம் இயற்றி வரும் சித்தர் திருமூலரைச் சமாதி நிலையில் கண்டதாகவும் குறிப்பிடுகிறார். போகர், திருமூலரைச் சமாதி நிலையில் கண்டபோது அவர் எப்படியிருந்தார் என்பதை வர்ணிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
திருமூலரின் உடலை ஒரு ஜொலிக்கும் ஒளிப்பிழம்பாக கண்ணுற்றதாகவும், அவர் எழுந்து நின்ற சமாதியைச் சுற்றி ஒளிவட்டம் வீசியதாகவும், அவரின் உடலிலிருந்து பல அபூர்வ மலர்களின் நறுமணங்கள் வீசியதாகவும் பரவசமாகக் குறிப்பிடுகிறார்.
போகர் 7000 நூலில் இன்னும் பல ஆச்சர்யமான, அமானுஷ்யமான தகவல்களையும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜெருசலத்திற்கு தன்னுடைய புகை ரதத்தில் (Rail) சென்றதாகவும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் கண்டதாகவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்று இயேசுநாதரின் சீடர்களின் சமாதிகளைக்கண்டதாகவும் கூறியுள்ளார் (மூன்றாவது காண்டம் செய்யுள்: 215)
இம்மானுவேல் என்ற பெயரைக் குறிப்பிட்டு, இயேசுவின் சமாதியில் தான் தியானம் செய்ததையும் குறிப்பிடுகிறார் (செய்யுள் 216)
அங்கிருந்து புறப்பட்டு மெக்கா சென்றடைந்ததாகவும், முகமது நபியின் சீடர்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார் (செய்யுள் 228-230)
அங்கு யாகோபு சித்தரைக் கண்டதாகவும், அவர் தன்னிடம் தீட்சை பெற விரும்பியதாகவும் குறிப்பிடுகிறார்.
போகர் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் சார்பாளர்கள் கற்பனைக் கதை எனக் குறிப்பிடலாம். ஆனால், அவர் கூறிய இந்த அபூர்வமான தகவல்கள் எல்லாம், அவர் சமாதி நிலையில் இருந்தபோது, மெய்யுணர்வின் உச்சநிலையில் அகக் கண்ணில் கண்ட காட்சிகள்!
போகரின் க்ரியா யோகத்தினால் இறந்தவரை பிழைக்க வைக்க முடியும் என்று கூறுகின்றனர். மனதின் மீதும் மரணத்தின் மீதும் நுண்ணிய ஆதிக்கம் செலுத்தி உயிர்த்தெழும் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பது க்ரியா யோகத்தின் மகா ஆற்றல் எனச் சொல்லப்படுகிறது.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததே அவர் பயின்ற க்ரியா யோகத்தின் அற்புதம் என்றும் சில யோகிகளால் கூறப்படுகிறது.....
தினேஷ் குமார்.......
Thursday, 17 February 2022
இறைவன் எந்த நிலையில் உள்ளான்
🌹 மௌனமே இறைவனாய்👏
🙌அகில உலகை ஆளும் சொக்கநாத பெருமானே
அண்டத்தையும் பிண்டத்தையும் காக்கும்
ஆலவாய் அரசனே உம் திருவடி போற்றி போற்றி.....
ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?
நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .
உடனே புறப்பட்டான் .
போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்
அவர் கேட்டார் .
" எங்கே போகிறாய் ?"
" கடவுளை காண போகிறேன் !"
" எங்கே ? "
" கோவிலில் !"
" அங்கே போய் ........"
" அவரை வழிபட போகிறேன் ! "
" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
" தெரியாது "
" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
" அப்படியென்றால் "
" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்
ஞானி தெளிவு படுத்தினார்
" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல ....
இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் .
தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .
தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
" அதற்க்கு வழி ?"
" தியானம்"
" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"
" இல்லை " மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் ,
அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் .
தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "
அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .
தன்னுடைய தேவையை சொன்னார் :
" I WANT PEACE"
ஞானி சொன்னார்:
" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .
வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .
" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"
" எப்படி அது ?"
" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"
அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
ஞானி கேட்டார்
" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
உற்சாகமாக சொன்னான் .
" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
"இல்லை "
" அந்த வகையில் பார்த்தால்
உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
" யார் அவர் "
" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .
" சரி , சுவாமி . நான் வர்றேன் !"
சோர்வோடு நடந்து போனான் .
அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .
ஞானி கேட்டார் :
" எங்கே போகிறாய் ? "
" வீட்டுக்கு !"
" கோவிலுக்கு போகவில்லையா ?"
" இல்லை "
" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .
'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது !
எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ ,
அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
சிவ சிவ..
🙏🙏🙏🙏🙏🙏**திருச்சிற்றம்பலம்**
இல்லந்தோறும் திருமுறைகள் பாடப்படட்டும்....
உலகெங்கும் சிவசிந்தனை பரவட்டும்....,
ஆலயந்தோறும்
சிவமந்திரங்கள் ஒலிக்கட்டும்.....
அடியேன்
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை...
🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவசமயமும் சைவநெறியும் தழைத்தோங்க சிவவழிபாடு பின்பற்றுவோம்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்....
🙌🙌🙌🙌🙌🙌
🙏🙏🙏🙏🙏🙏
Monday, 14 February 2022
சித்த வித்தை பயிற்சி
சித்தவித்தை பயிற்சி நிலையங்கள் முகவரி
திருத்தனி
1) பிரம்மஸ்ரீ S. நாராயணசாமி, சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்தை அப்பியாச குடில், கார்த்திகேயபுரம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் - 631 211.
99431 49070
2) பிரம்மஸ்ரீ லோகநாதன்
சுவாமி சிவானந்த சித்த வித்தியா யோகாப்பியாச கேந்திரம். கார்த்திகேயபுரம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் - 631 211
பிரம்மஸ்ரீ K. V சின்னி கிருஷ்ணன்.
PH:9444513620
-----------------------------------------------------------------
திருவள்ளூர்
3) பிரம்மஸ்ரீ குணசேகரன், சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்யா அப்பியாச நிலையம்,
NO: 77, பெருமாள் குப்பம் ஆரணி, பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் - 601 101.
Ph:9952757170
9791293351
4) பிரம்மஸ்ரீ சத்தியமூர்த்தி
சென்னை சித்த வித்யா நிலையம் அறக்கட்டளை
சுவாமி சிவப்பிரகாசம் சாலை,
சிவானந்தபுரம்,
வடமதுரை
பெரியபாளையம் வழி,
ஊத்துக்கோட்டை தாலுக்கா,
திருவள்ளூர் மாவட்டம்-
601102
Ph:9790600015
9444437627
9677202432
7904252641
----------------------------------------------------------------
வேலூர்
5) பிரம்மஸ்ரீ R. எத்திராஜ், சித்தவித்தை பயிற்சி நிலையம், சிவானந்த மலை, கொசவன் புதூர்,
K. V குப்பம் (P.O) வேலூர் மாவட்டம் - 632201
92456 62955
6) பிரம்மஸ்ரீ A. G. பழனி
No: 70/38 பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, சத்துவாச்சாரி, வேலூர் மாநகரம், வேலூர் மாவட்டம் - 632 009
Mob - 93603 20088
7) சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்யா அப்பியாச அறக்கட்டளை,
No: 287, தானாங் குளம், வெங்கடாபுரம், பாலமதி வழி, திமிரி வட்டம், வேலூர் மாவட்டம் - 632 507
Ph:+919994068501
+919791324162
-----------------------------------------------------------------
திருவண்ணாமலை
8) ஆத்ம ஞான பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை பயிற்சி குடில்,
ஸ்தாபகர்:பிரம்மஸ்ரீ மணியம்மை அம்மாள்,
V.நம்மியந்தல் கிராமம்
கானாலாபாடி அஞ்சல்
திருவண்ணாமலை மாவட்டம் -606611.
பிரம்மஸ்ரீ சம்பத்
பிரம்மஸ்ரீ பிரகாஷ்
பிரம்மஸ்ரீ விவேகானந்தன்
Ph:9345476445
9629401491
9943297758
9) பிரம்மஸ்ரீ விஜயசாரதி- சித்தவித்தை பயிற்சி நிலையம் தெள்ளார் சமத்துவபுரம், வந்தவாசி தாலுகா, திருவண்ணாமலை
மாவட்டம்.mob-8668050883,9841358333
10) சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை அப்பியாச நிலையம்
No.379. Kodayampakkam koot Road.
அயவிடயந்தாங்கி அஞ்சல் ,வெம்பாக்கம் வட்டம் .திருவண்ணமலை .604402
9381596999
-----------------------------------------------------------------
கிருஷ்ணகிரி
11) பிரம்மஸ்ரீ M. ராஜ் கண்ணா, நிறுவனர்.
சுவாமி சிவானந்த பரமஹம்சர்
உலகசேம சித்தவித்யா அன்பாலயம்
PLOT NO : 265, PHASE - V,
A. V. S OZONE VALLY,
DENKANIKOTTAI,
KRISHNAGIRI DISTRICT - 635 107.
செயலாளர் பிரம்மஸ்ரீ சுபாஷ்
Ph:9962119381
12) உலக ஷேம சித்த வித்தை அன்பாலயம்
கிருஷ்ணகிரி,
தேன்கனிகோட்டை,
செயலாளர்.சுபாஷ்.9962119381
-----------------------------------------------------------------
Bangalore
13) Br Sri N.Ramakrishna
S.S.P.SIDDHA FOUNDATION TRUST
Address: No.58, West Anjaneya Temple Street, Basavanagudi, Bangalore 560004
Mob: 8310650269
9449522011
080-26610688
-----------------------------------------------------------------
சென்னை
14) பிரம்மஸ்ரீ பா. பத்மநாபன், சென்னை சித்த வித்தை டிரஸ்ட்,
No: 15 திருவேங்கடம் தெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092.
Mob - 93817 96999.
15) மனமே குரு சித்தவித்தை பயிற்சி அரங்கம்,
Plot no: S4 & S5 அரவிந்த் டவர்,
No:603A, சென்ட்ரல் அவன்யூ, கொரட்டூர், சென்னை - 600 080
Mob - 95661 22661.
16) பிரம்மஸ்ரீ மோகன்
சென்னை சித்த வித்யார்த்தி அப்பியாச நிலையம்
எண்:154, R.N.Nagar,
முதல் பிரதான சாலை
கிழக்கு அண்ணா நகர்
சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் எதிரில்
சென்னை.
Ph:9884200477
9841313228
8248239336
17) பிரம்மஸ்ரீ ரமேஷ் ஏழுமலை
சித்தவித்தை பயிற்சி நிலையம்.
விலாசம் 44/94.A. காலடிப்பேட்டை, திருவெற்றியூர் டோல்கேட், சென்னை 19.
பதிவு எண்: 1157
Ph: 9841989534
9884155594
18) பிரம்மஸ்ரீ விஜயசாரதி
சித்தவித்தை பயிற்சி நிலையம்
தெள்ளார்,
வந்தவாசி தாலுகா,
அருணகிரி யோகாலயம்,
வினாயகபுரம், சென்னை-99.
Ph:9841358333
19) சென்னை சித்தவித்தை அறக்கட்டளை
No:15, திருவேங்கடம் தெரு,
விருகம்பாக்கம்,
சென்னை 600092
பிரம்மஸ்ரீ தனலட்சுமி
Ph:8838006909
20) சென்னை சித்த வித்தியார்திகள் அப்பியாச அறக்கட்டளை
No:10.கன்னியப்பன் தெரு
வெற்றிநகர்,
கொளத்தூர்,
சென்னை.600099.
செயலாளர்:
பிரம்மஸ்ரீ பத்மநாபன்
Ph:9381796999
-----------------------------------------------------------------
கூடுவாஞ்சேரி
21) பிரம்மஸ்ரீ புஷ்பராஜ்
வடகரை வள்ளல்
சுவாமி சிவானந்த பரமஹம்சர்
சித்தவித்தை அப்பியாச நிலையம்
1/25,மாடம்பாக்கம் சந்திப்பு,
கூடுவாஞ்சேரி,
சென்னை 603202.
Ph: 9940298954
9171944166
9566953559
9841593987
-----------------------------------------------------------------
காஞ்சிபுரம்
22) பிரம்மஸ்ரீ V. ராமையா நிறுவனர் அவர்கள்,
சிவானந்த ஞான வாசல் சித்த வித்தை அப்பியாச நிலையம்,
No:26 புத்தேரி கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 502.
Mob - 94441 34343
23) பிரம்மஸ்ரீ ரா.பாஸ்கரசிவதாசன்
சித்தவித்தை அப்பியாச நிலையம். அகரம் தூளி கிராமம்.உத்திரமேரூர் தாலுக்கா. காஞ்சிபுரம் மாவட்டம். கைபேசி
8870716119.
-----------------------------------------------------------------
செங்கல்பட்டு
24) பிரம்மஸ்ரீ R. பாஸ்கர் சிவதாசன்,
சுவாமி சிவானந்தர் சித்தவித்தை அப்பியாச நிலையம்,
No: A16 முதல் தளம்,
வில்லா சகுந்தலா, சத்தியம் ஹோம்ஸ், நெல்லிகுப்பம் ரோடு, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம் - 603 202
25) பிரம்மஸ்ரீ பீரோ அன்பழகன் அவர்கள்,
அன்புச்செல்வி ஸ்டோர்ஸ்,
No: 4/18 மகாத்மா காந்தி ரோடு, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு மாவட்டம் - 603 204.
Mob - 94431 29203
-----------------------------------------------------------------
புதுச்சேரி
26) பிரம்மஸ்ரீ V. முத்து,
சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்தை அப்பியாச நிலையம்,
ஆரோசன் சிட்டி, சின்ன கோட்டகுப்பம், ஆரோவில் வழி, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 605 104
Mob 98438 47885
-----------------------------------------------------------------
கடலூர்
27) பிரம்மஸ்ரீ
R.K. சிவானந்தன்,
சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்தை நிலைய அறக்கட்டளை
எண்:100,101.சீத்தா
லட்சுமி நகர்,
வில்லுப் பாளையம்,
மதலபட்டு( மதுரா)
கடலூர் மாவட்டம்
PIN 605007.
Ph: 9944272926.
-----------------------------------------------------------------
தா்மபுாி
28) பிரம்மஸ்ரீ சென்னப்பன்
சுவாமி சிவானந்தபரமஹம்சா் வழிவந்த சாக்கு சுவாமி அப்பியாச பயிற்சிநிலையம்
மாக்கனுா் (அஞ்சல் ),
சஞ்சய்புரம், பென்னகரம்(வட்டம்)
தா்மபுாி.
Ph:8248488797
பிரம்மஶ்ரீ ராம்ராஜ்
செயலாளர்
Ph:9443037466
-----------------------------------------------------------------
சேலம்
29) ஆத்மஜோதி சிவானந்த பரமஹம்சர் தவக்குடில்
உத்தமசோழபுரம், மலங்காடு கஞ்ச மலை அடிவாரம் ,சேலம் 10,
பிரம்மஸ்ரீ சிவா
பிரம்மஸ்ரீ காவேரி
Ph:6379253155
9597288806
30) பிரம்மஸ்ரீ தங்கராஜ்
சித்தவித்தை அப்பியாச ஆலயம்
மாரியம்மன் கோயில் வீதி
சஞ்சீவிராயன் பேட்டை,
குகை, சேலம்-6
Ph:9976929903
9865129124
9443207050
----------------------------------------------------------------
திருச்சி
31) பிரம்மஸ்ரீ. Hr. R. பாலசுப்பிரமணியன்,
சித்த வித்தை அப்பியாச நிலையம்,
3/27 வயலூர் மெயின் ரோடு,
யூகோ பேங்க் எதிரில், சோமரசம்பேட்டை, திருச்சி=620 102.
98658 51934.
32) திருச்சி சித்த வித்தை பயிற்சி நிலையம்
இடம்:- கி.ஆ.பெ. விஸ்வநாதன் தொடக்கப்பள்ளி
5 வது கிராஸ்
தில்லைநகர்
திருச்சி 620018
செயலாளர்
V.தேவதாஸ்
வாட்ஸ் ஆப்
9677858580
33) சித்தவித்தை தியான பயிலரங்கம்
18/43A, Shriram Nagar, கருமண்டபம், Thiruchy-620001. phone 0431-2480206
----------------------------------------------------------------
கும்பகோணம்
34) பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்
சித்தவித்தை பயிலகம்
இரயிவே நிலையம் எதிரில்
கும்பகோணம்.
Ph:9171668386
பிரம்மஸ்ரீ முத்தையன்
Ph:9842540068
----------------------------------------------------------------
தஞ்சாவூர்
35) பிரம்ம ஸ்ரீ கோவிந்தராஜன்
சித்தவித்தை அப்பியாச நிலையம்
No:112/154, ரயில்வே ரோடு, ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்
612101
Ph:9043746966
7867959500
----------------------------------------------------------------
சிதம்பரம்
36) தலைவர்...
பிரம்ம ஶ்ரீ ராமலிங்கம் ஐயா.
செயலாளர்:
பிரம்ம ஶ்ரீ ஜானகிராமன்.
தொடர்பு எண். 9042224721
வாட்சப் எண்.
9843520941.
இடம்..
சித்த வித்தை அப்பியாச நிலையம்,
சிதம்பரம் சீர்காழி பைபாஸ் ரோடு,
(இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு அருகில்)
அம்மன் கோவில் பஸ்டாப்.,
சிதம்பரம். 608001.
----------------------------------------------------------------
திண்டிவனம்
37) பிரம்மஸ்ரீ
T.E.கிருஷ்ணமூர்த்தி.
நிறுவனர், சித்த வித்தை அப்பியாச நிலையம் திண்டிவனம்.
No:12, ஸ்ரீ மூகாம்பிகை நகர்,
பெலா குப்பம் ரோடு,
திண்டிவனம்.
விழுப்புரம் மாவட்டம்
604001....
Cell no. 9443047182
----------------------------------------------------------------
கரூர்
38) பிரம்மஸ்ரீ Dr. K. M. முருகன் தலைவர் அவர்கள்,
சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை அப்பியாச ஆலயம்
வெள்ளியணை வடபாகம், கரூர் மாவட்டம்.639 118
Ph:94437 67148
6380 222 764
----------------------------------------------------------------
திண்டுக்கல்
39) பிரம்மஸ்ரீ விஜயகுமார் செயலாளர்
சித்த வித்தை தவ மையம் சித்தர் வழிசாலை, சிவானந்த கிரி, மல்லையாபுரம், பாறைப்பட்டி கிராமம்,
ஆத்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டம்=624 301
8122500817
----------------------------------------------------------------
பழனி
40) பிரம்மஸ்ரீ.R.ஆனந்த குமார்
அகில உலக சித்த வித்யா அபிவிருத்தி சங்கம்
(ஞானபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் ஜீவ ஐக்கிய நிலையம்)
பைப் ரோடு,
வரட்டாறு,
அடிவாரம்.
பழனி 624601
திண்டுக்கல் மாவட்டம்
Ph:9443301615
----------------------------------------------------------------
மதுரை
41) பிரம்மஸ்ரீ பாண்டியராஜன்
சித்தவித்தை அப்பியாச நிலையம்
மேலமாசி வீதி,
சூடன் சாமியார் சந்து
மதுரை
Ph:6380007147
42) பிரம்மஸ்ரீ சொக்கலிங்கம் சுவாமி சிவானந்த பரமஹம்சர் ஆன்மீக தோட்டம், சுடுகாட்டுப் பாதை, அ. கோவில்பட்டி அலங்காநல்லூர்,(P.O),
மதுரை மாவட்டம் - 625 501
43) பிரம்மஸ்ரீ C. சிவஞான ஈஸ்வரி,
சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்தை அப்பியாச ஆலயம்
No: 8 புதுத்தெரு,
1வது சந்து, செல்லூர்,
மதுரை - 625 002.
+91 93617 33782
44) பிரம்மஸ்ரீ சிவா,
ஞானபிதா தவகுடில்
குட்லாடம்பட்டி
மதுரை
Ph:+91 98421 75058
45) பிரம்மஸ்ரீ பிரபு நிர்வாகி,
பிரம்ம ஸ்ரீ மனோன்மணி சிவ செல்வம் ஜீவ சமாதி,
வைகாசி பட்டி கிராமம்,
வாடிப்பட்டி தாலுகா மதுரை மாவட்டம்
90926 51878
46) பிரம்மஸ்ரீ ராதாகிருஷ்ணன்
*ஜீவ ஐக்கிய நிலையம்*
ராஜபாளையம் கிராமம்,
திருமங்கலம் தாலுகா,
மதுரை மாவட்டம்.
PIN:625706
Ph:9489940215
47) பிரம்மஸ்ரீ ஜான்சிராணி நிறுவனர் அவர்கள், ஜீவேஸ்வரன் சித்த வித்தை அப்பியாச நிலையம்,
No: 46 கிருஷ்ணா நகர், தனக்கன்குளம், திருநகர் (post )
மதுரை - 625 006.
பிரம்மஸ்ரீ ஜான்சிராணி 999 4517 999,
பிரம்மஸ்ரீ பிரபு
7010 633 573.
48) பிரம்மஸ்ரீ மணிகண்டன்,
ஜெகத் ஜோதி சித்த வித்தை தவ குடில்,
குட்லாடம்பட்டி, வாடிப்பட்டி தாலுகா,
மதுரை மாவட்டம் - 625 218
42A C.பாக்கியம் தெரு, அனுப்பானடி. ரோடு மதுரை 625 009.
Mob 88388 43438
9942506071
49) பிரம்மஸ்ரீ திருப்பதி பாலாஜி
சித்த வித்யார்த்திகள் அப்பியாச ஆலயம்
சுவாமி சங்கரானந்தாஜி இல்லம்,
அச்சம்பட்டி (அஞ்சல்),
திருமங்கலம் (தாலுகா),
மதுரை-625706.
Ph:9865744455
:9842175058
----------------------------------------------------------------
கோவை
50) சுவாமி சிவானந்த பரமஹம்சர் தவ நிலையம் நீலாம்பூர் கோவை* தபால் முகவரி
கே.வி.கே டைம்ஸ்
151 சாஸ்திரி சாலை
ராம்நகர்
கோவை 641009
Pream ayya
Ph:+919443911151
babu ayya
+919894338664
51) வசிஷ்டன் சுவாமி சிவானந்த பரமஹம்சர் சித்த வித்தை தவ நிலையம் வெள்ளாடை சித்தர் தவோபனம் வேடபட்டி ரோடு பேரூர் கோவை. 26. Oh. 9443305549
52) பிரம்மஸ்ரீ கே. பாலன் ,
ஸ்ரீ மஹா குருபரானந்த சுவாமி பேரின்ப தபோவனம்,
குளத்தூர்,
வெங்கிட்டாபுரம் (Post), கோவை - 641062
Ph:9486207916
53) பிரம்மஸ்ரீ வே.சண்முகப்பாண்டி
சிவானந்தா சேரிட்டபிள் டிரஸ்ட்
மாரியம்மன் கோவில் அருகில்
கலங்கல் பாதை,சூலூர்,
கோவை-641402
Ph:9843082488
9843012441
54) சித்தயோகி சாமையா ஜீவஐக்கிய நிலையம்.
பிரம்மஸ்ரீ சாமையா சாலை, பன்னிமடை,கோவை,641017
cell-9994039086
----------------------------------------------------------------
திருநெல்வேலி
55) ஸ்ரீமாதவனந்தா தவக்குடில் அறக்கட்டளை
வெள்ளை மடம், பாம்புகோவில்சந்தை, கடயநல்லூர் தாலுக்கா, திருநெல்வேலி .627862
----------------------------------------------------------------
(குற்றாலம் )
56) சங்கரானந்தா அறக்கட்டளை, சங்கராஸ்ரமம், ஐந்தருவி , குற்றாலம்-627802,தென்காசிதாலுக்கா. 04633 283166
----------------------------------------------------------------
தென்காசி
57) பிரம்மஸ்ரீ S. ராமபாண்டியன், சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த வழி சித்த வித்யாலயம், நெற்கட்டான்செவல், (மேற்கு),
சிவகிரி வட்டம், தென்காசி மாவட்டம், 627 758.
Mob 99436 39651.
58) பிரம்மஸ்ரீ மணி அண்ணா
சுவாமி மாதவானந்த ஆசிரமம்
வெள்ளைமடம் பாம்பக்கோவில் சந்தை கடையநல்லூர் தாலுகா தென்காசி மாவட்டம் 627862
Ph:9385729125
9442899125
59) பி.பெரிய ராஜ் சித்த வித்தை தவ மையம் சாய மலை ஆராய்ச்சி பட்டி மேலநீலிதநல்லூர் (Post) திருவேங்டம் (Taluk) தென்காசி மாவட்டம் பின்கோடு : 627956
செல் : 9498192895
----------------------------------------------------------------
சிவகங்கை
60) பிரம்மஸ்ரீ முத்துகிருஷ்ணன், காரைக்குடி= தேவகோட்டை சித்தவித்தை அப்பியாச நிலையம்,
No 4/32 வடக்குத்தெரு, கண்டதேவி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம் - 630 314.
95007 61284.
Velmurugan: cell 8072159595
பிரம்மஸ்ரீ சண்முகசுந்தரம்
சார்பு ஆய்வாளர் காரைக்குடி
Ph:+91 83000 00749
பிரம்மஸ்ரீ ராமநாதன்
Ph:94426 76111
61) பிரம்மஸ்ரீ S. சேவுகமூர்த்தி,
சிவானந்த நிலையம்,
சித்தர் முத்துவடுகு சுவாமி நகர், சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம் - 630 502.
Mob : 97887 86661
62) பிரம்மஸ்ரீ நாகராஜன்,
உலக சாந்தி சித்த வித்தை தவ குடில் 2/420 முத்து காம்ப்ளக்ஸ், சிவகங்கை ரோடு, திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்-630 211
94877 57654
----------------------------------------------------------------
திருவனந்தபுரம்
63) சித்த வித்யா அபியசலாயம்
அரையூர் நெய்யட்டிங்கரா திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளா - 695122
தலைவர் பிரம்மஸ்ரீ
T. பிரபா
செயலாளர் பிரம்மஸ்ரீ எஸ் வி பி ஜிதேந்திரியன்
Ph: + 919496202096
Ph: + 919496445835
----------------------------------------------------------------
பாலக்காடு
64) Siddha vithiya appiyasa alayam
odanoor, kottayam. Alanthur. Palakkad, kerala-678572
----------------------------------------------------------------
மலேசியா
65) பிரம்மஸ்ரீ வேதமூர்த்தி அண்ணா
Pertubuhan Penganut Siddha Vithai
No 1 Jalan Mohd Tahir 26A, Taman Saujana 41200,Klang Selango, Malaysia
Ph:+60 19-728 7919
66) பிரம்மஸ்ரீ அறிவழகன்
சுவாமி சிவானந்த பரமஹம்சர்
தியான மன்றம், பாகன் செராய், பேரா, மலேசியா
Ph:+60 18-968 2300
----------------------------------------------------------------
ஆஸ்திரேலியா
67) பிரம்மஸ்ரீ கிருஷ்ணராஜ்
ஆஸ்திரேலியா சித்தவித்தை அப்பியாச நிலையம்
ஆஸ்திரேலியா
4/10 Reilly avunue benalla Victoria Benalla, 3672 Australia
Ph:+91 94441 64626
--------------------------------------------------------------------
68) பிரம்மஸ்ரீ கருணாநிதி ஐயா*
*சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்தவித்தை பயிற்சி தவமனை*
சுவாமி சிவானந்தர் ஜீவ சமாதி தோட்டம் (டிரஸ்ட்)
மஞ்சங்குளம் - சிறுவயல் ஊராட்சி
இராமநாதபுரம் மாவட்டம்.
எண்:+91 98654 82579
69) பிரம்மஸ்ரீ சுப்பிரமணியம்
*மடிப்பாக்கம் சித்த வித்தை நிலையம்*
எண்:
36 மணி மேகலை தெரு,
ராஜ சுலேசான பள்ளி ஏதிரில்,
மடிப்பாக்கம்
சென்னை-600 091
Ph:8248184436
Friday, 28 January 2022
மரணம் பற்றிய புரிதல்
உன்னுடைய மரணம்.... (சிறப்பு பதிவு)
இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.
உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள்.
1. உனது ஆடைகளை களைவர்.
2. குளிப்பாட்டுவர்.
3. புது துணி அணிவிப்பர்.
4. உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5. அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச் செல்வார்கள்.
6. உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான் என்பதை நினைவுகொள்.
7. உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
8. நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள், பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.
உன்னை விட்டு நீங்குவது...
1. உன் உயிர்
2. உனது அழகு
3. சொத்துக்கள்.
4. பிள்ளைகள்
5. வீடு, மாளிகைகள்
6. மனைவி மற்றும் பிள்ளைகள்.....
இதில் உனக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்......?
உறுதியாக விளங்கிக்கொள்..
* உனது பிரிவால் இந்த
உலகம் கவலைப்படாது.
* பொருளாதாரம் தடைப்படாது.
* உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்.
* உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.
* எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும் வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய்.....
நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே....!!
(பிணம் அல்லது பாடி என்று மாறும்.....)
உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்.
உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்
1. உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று....
2. நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்...
3. உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவார்கள்....அவ்வளவுதான்.
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.
மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.
மனிதா....உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று வாழும் போதே ''வாழாமல்'' உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.
உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சேர்த்துவை.
அதிகமாக உழைத்து உன் வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே...
இறுதியில் உன்னுடன் வருவது...
நீ செய்த நற்காரியங்கள்..
நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்...
நீ செய்த உதவியும் மற்றும் தர்மங்கள்....
இதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் இந்த உலகத்திலும், இறந்த பின்னும் நன்மையடைவாய்.....
நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை,
கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் - களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.
எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்...
இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்...
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி...
அன்பை தூவி வாழு.
பணத்தை கட்டி கொண்டு அழதே....
மற்றவர் மனம் நோகும்படி வாழாதே....
வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல....
நடை பழகும் நடைவண்டி....
அழகாய் வழி நடத்திடு!
உயிர் ஞான
உணர்வை
அடைந்திடு!!
Tuesday, 25 January 2022
சிவன் மேல் பக்தியாய் இருந்த மன்னன்
வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்
இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்
உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார்.
அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.
ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.
ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.
அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.
நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.
அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?
பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.
மன்னா ! நான் ஒரு சிவபக்தன்.
பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.
பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.
ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.
இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.
அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!
அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.
அவ்வளவு தான்
வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார்.
அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.
இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான்.
மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .
என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.
அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?
ஜோடி மாடு வேண்டாமா ?
அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.
திருச்சிற்றம்பலம்!!
சிவ சிவ!!
Wednesday, 19 January 2022
விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்
விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,
5 வருடங்களுக்குப்
பின்பே தொழில் கிடைக்கிறது...!
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.
90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை.
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்
கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..
அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
இறைவா.!
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.!
உன்னிடமே நாங்கள் உதவியும்
தேடுகிறோம்..
ஓம் சிவாய நமக.....
திருச்சிற்றமபலம்............
Friday, 26 November 2021
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
*"மன்னித்தல்" என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது* என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
*கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்*
*கசிந்து உருகி நில்லாப்பிழையும்*
*நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும்*
*துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும்* *பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.*
-- *பட்டினத்தார்*
இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம். அதுவும் பக்தி மனநிலையில் பாடி இருப்போம்.
ஆனால் ஒருநாள் ஈஸ்வரன் என்னை பார்த்து திட்டுவது போல் உணர்ந்தேன்.
*ஈஸ்வரன் கேட்கிறார் :-*
நான் ஏன்டா *கல்லா பிழையை பொருத்துக்கனும் ?*
*நீ உண்மையையும், நீதியையும், ஆன்மாவை பற்றியும் கற்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் உன்னை பூமிக்கே அனுப்பினேன்.*
நீ என்னடான்னா இங்கு வந்து ஒழுங்காக குருவை நாடி தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் என் கோவிலுக்கு வந்து
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் ... பொருத்து அருள்வாய்"*
என்று பிரார்த்தனை செய்கிறாய்.
*ஒரு உண்மையை சொல்கிறேன் : -*
*தானமும், தவமும், பூமியில் மட்டும்தான் செய்யமுடியும்.*
*பூமியில் வாழும் காலத்தில் நீ தானம், தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில் இருக்கும்போது "தானம், தர்மம்" செய்யவேண்டும் கடவுளே என்று என்னிடம் பிரார்த்தனை செய்தால்;*
*நான் என்ன சொல்வேன்;*
*அடப்பாவி அதற்கு தானே உனக்கு "ஸ்தூல தேகம்" கொடுத்து பூமிக்கு அனுப்பினேன்.*
*நீ என்னடா என்றால் அங்கு ஒழுங்கா எதையும் கற்காமல், தானமும், தவமும் செய்யாமல் வாழ்ந்துவிட்டு இப்பவந்து கேட்கிற.*
*சரி என்ன பன்றது மறுபடியும் பூமியில் போய் பிறந்து முறையாக குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும், தானம் தவமும் செய்து வாழ்ந்துவிட்டு வா என்றுதான் சொல்வேன்.*
*மேல் உலக வாழ்கை என்பது பூலோக வாழ்க்கையின் போது செய்த தானம், தவம், மற்றும் பெற்ற ஞானம் போன்றவற்றிற்கான பலனை அனுபவிக்கிற வாழ்கை ஆகும்.*
*"பதவி பூர்வ புண்ணியானாம்"*
பூமியில் வாழம்போது *100 அஸ்வமேத யாகம் செய்தால்,* இறந்த பிறகு சொர்க்கத்திற்கு சென்றால் அங்கு இந்திர பதவியே கொடுக்கப்படும் என்பது தான் சாஸ்திரம் ஆகும்.
அதனால் தான் *மகாபலி அரசன்100 அஸ்வமேத யாகம் செய்தான்* என்பது உனக்கு தெரியாதா ?
ஒருவேளை உனக்கு சொர்க்கம் போன்ற மகிழ்ச்சி மற்றும் பதவிகள் மீது எல்லாம் பற்று இல்லை என்றால் முக்தி அடையவேண்டும் என்பது தான் விருப்பம் என்றால் ;
*நீ ஒரு குருவை சரண் அடைந்து*
*"ஸ்தூல தேகம்",*
*"சூட்சும தேகம்",*
*"காரண தேகம்",*
*"மகா காரண தேகம்",*
*போன்ற உண்மைகளையும், பசு, பதி, பாசம் போதிக்கிற சைவசித்தாந்த கல்வியை கற்கவேண்டும்.*
*96 தத்துவங்கள் பற்றியும், தசகாரியம் பற்றியும் கற்கவேண்டும்.*
அப்படி கற்றால் தான், அதன் படி வாழ்ந்து *ஸ்தூல தேகம், மனோதேகம்* போன்றவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டுத்தான் ஜீவன் *முக்தி நிலையை* அடையமுடியும்.
*இந்த சைவசித்தாந்தம் கல்வியை கற்பது என்பது முக்தி பிராப்தத்தை விரும்பும் மனிதனுக்கு இன்றியமையாதது ஆகும்.*
*இந்த சைவசித்தாந்தம் கல்வியை கற்பதற்காக ஒருவன் பிச்சை எடுத்தாலும் தவறு இல்லை என்று "வெற்றி வேற்கை" என்ற நூலின் மூலம் உலகுக்கு சொன்னேன்.*
" *கற்கை நன்றே* *கற்கை நன்றே*
*பிச்சை புகினும்* *கற்கை நன்றே "*
*பிச்சை எடுத்தாவது சைவசித்தாந்தம் கல்வியை படிடா என்று சொன்னல் ; நீ என்னடா என்றால்*
*"கல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய்"*
என்று பிரார்திக்கிறாய்.
*சொல் பேச்சை கொஞ்சம் கூட கேட்க மாட்டுங்கிற !!*
*நீ அப்படி குருவை நாடி சென்று கல்வி கற்றாலும் அந்த கல்வி அவ்வளவு லேசில் உன் மனதில் தங்கிவிடாது. அது உலக மயக்கங்களால் மறைந்து மறந்து போய்விடும்.*
*அதனால் தான் "சிவ தீட்சை" பெற்று சைவசித்தாந்தம் கற்க வேண்டும், தினமும் கற்ற கல்வியை அசை போடவேண்டும் என்று அறிவுருத்தினேன்.*
*"காலையும் மாலையும் நான்மறை ஓதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே"*
-- வெற்றி வேற்கை
மேலும் *ஒளவையார்* வாக்கின் வழியாகவும் *கல்வி என்பது மனப்பழக்கம்* என்று அறிவுருத்தினேன்.
*"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,*
*வைத்ததொரு கல்வி மனபழக்கம்"*
*கற்ற சைவசித்தாந்தம் உண்மைகளை அவ்வப்போது படித்து வரவேண்டும். அதை நன்றாக மனதிற்கு பழக்கப்படுத்திவிட வேண்டும்.*
*அப்போது தான் அதன்படி நடக்க, வாழ, உன் மனம் ஆயத்தம் ஆகும்.*
அதனால் தான் *"ஓதா கல்வி கெடும்"* என்றேன்.
*ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் உன் மனம் சைவசித்தாந்தம் நெறிப்படி வாழ தயாராகிவிடாது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து கற்று அதனுடனேயே பயணித்து அதனுடனேயே கலந்து அதுவாகவே உன் மனம் மாறிவிட வேண்டும்.*
*அப்படிபட்ட நிலையை அடைந்த பிறகுதான் ஸ்தூல தேகம், மனோதேகத்தை எல்லாம் விட்டு விலகிசென்று, சத்தான ஆத்மாவை மகா காரண தேகத்தை அடையமுடியும்.*
இப்படி இருக்க நீ என்னடா என்றால் இந்த பட்டினத்தாரின் ஒரு பாடலை பிடித்துக்கொண்டு அடிக்கடி என் முன் வந்து
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.."*
என்று வேண்டுகிறாய்.
*கல்லாப் பிழையை எல்லாம் ஈஸ்வரனாகிய நான் பொறுத்துக் கொண்டு திடீர் என்று உனக்கு முக்தி நிலையை கொடுத்தாலும், அது முக்தி என்று உனக்கு தெரியாது. உன்னால் அதை உணரமுடியாது.*
அதனால் முட்டாள் தனமாக என் முன் வந்து
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்.. பொறுத்து அருள்வாய்"*
என்று வேண்டாதே.
*2010ம் ஆண்டு* என் கோவிலுக்கு வந்து
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"*
என்று பிரார்த்தனை செய்தாய்.
சரி காலம் போக போக நீ கல்வி கற்றுக்கொள்ளலில் ஆர்வம் செலுத்துவாய் என்று பார்த்தேன்;
ஆனால் நீயோ *2015ம் ஆண்டும்* கோவிலுக்கு வந்து மறுபடியும்
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"*
என்று பிரார்த்தனை செய்தாய்.
சரி போகட்டும் இனியாவது சைவசித்தாந்தம் உண்மைகளை கற்பதில் கவனம் செலுத்துவாய் என்று பார்த்தால் நீயோ *2021 ம் ஆண்டும்* என் கோவிலுக்கு வந்து மறுபடியும்
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"*
என்று பிரார்த்தனை செய்கிறாய்.
*ஒரே பல்லவியையே ஆயுள் முழுவதும் பாடுகிறாய். அதனையும் உன்னை போல் அறிவிலியாட்டம் என்னையும் கேட்க சொல்கிறாய். இது நியாயமா என்று சற்று யோசித்துப் பார்.*
*இந்த ஆண்டு கற்க வில்லையா என் கோவிலில் வந்து இந்த பாடலை பாடிவிட்டு அடுத்தமுறை வரும்போது கற்றுகொண்டு வருகிறேன் இறைவா என்று நீ சொன்னால் அது நல்ல பிள்ளைக்கு அழகு.*
*அதனால சும்மா ஓப்பி அடிச்சு, இந்த பாடலை பாடியே பஜனை பண்ணிட்டு போய்டலாம் கடவுள் நமக்கு முக்தி கொடுத்துவிடுவார் என்று என்னுகிறாயா !!*
*நாட்டில் நிறைய அடியார்கள் இப்படித்தான் திரிகிறார்கள்.*
நீயாவது பரவாயில்லை வேறு ஒரு முருகன் அடியார் இருக்கிறான். அவன் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று
*"ஏது பிழை செய்தாலும் ஏழையனுக்கு இறங்கி தீது புரியாத தெய்வமே"*
என்று பாடுகிறான்.
பக்தர்களாகிய உங்களுக்கு எல்லாம் ஒன்றை தெளிவாக சொல்லி கொள்கிறேன்.
*ஏது பிழை செய்தாலும் பொருத்துகொண்டு தீது செய்யாதவர்கள் மூவர் மட்டும் தான்.*
1. *அம்மா*
2. *அப்பா*
3. *குரு*
*இந்த மூவர் மட்டும் தான் தீது புரிய மாட்டர்கள்.*
*மற்றபடி தெய்வங்கள் எல்லாம் நீதி பரிபாலனம் செய்யும் அதிதேவதைகள் ஆகும்.*
*அந்த நீதி படி அவரவர்களுக்கு தண்டனையும் நன்மையும் கிடைக்கும் படி நவகிரகங்களுக்கு கட்டளை இட்டு உலகை பரிபாலனம் செய்து வருகிறோம்.*
*எனவே ஏது பிழை செய்தாலும் எல்லாம் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட முடியாது.*
*சிவ பக்தனான "ராவணன்" நிறைய பிழைகள் செய்தான். தேவர்களோ சிவனான என்னிடம் வந்து முறையிட்டனர்.*
நானோ என் பக்தனை நானே தண்டித்தல் முறையாகாது. அதனால் விஷ்ணு விடம் சென்று பிராத்தியுங்கள். அவரால் *ராவணனை* தண்டிக்கமுடியும் என்று நான் ஐடியா கொடுத்தேன்.
*ராவணன்* என் பக்தன் என்பதற்காக அவனை தண்டிக்காமலா விட்டேன் !!
சற்று யோசித்துப் பாருங்கள்.
*நாளாயினி* போன ஜென்மத்தில் சூரியனையே உதிக்காதபடி செய்தால் ; !
அதற்கு தண்டனையாக மறுஜென்மத்தில் பாஞ்சாலியாக பிறந்து கஷ்டப்பட்டால், அவள் என்னை கும்பிட்டால் என்பதற்காக அவளது தவறை மூடி மறைத்து தண்டிக்காமல் விட்டேனா என்ன !
*திருதிராஷ்டிரன்* போன ஜென்மத்தில் 100 அன்ன பறவைகள் கறியை சாப்பிட்டான் அந்த பாவம் பலனாக அடுத்த ஜென்மத்தில் கண் தெரியாத திருதிராஷ்டிரனாக பிறந்தான். அவன் என்னை கும்பிட்டான் என்பதற்காக அவனை தண்டிக்காமலா விட்டேன்.
*தசரதன்* ஒரு அப்பாவி மனிதனை கொன்றான். அந்த பாவத்துக்கு தண்டனையாக தான் சாபம் பெற்று மாண்டான். என் பக்தன் என்பதற்காக அவனது சாபம் பலிக்காமல் போகும் படியா செய்தேன்; இல்லையே.
*இதில் இருந்து எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன ?*
*சர்வேஸ்வரனாகிய நான் நீதி தவறாதவன் ஆவேன். என் பக்தனே ஆனாலும் தண்டிப்பேன்.*
அதனால் மனிதர்களாகிய நீங்கள் தெய்வங்களாகிய எங்களிடம் வந்து
*"ஏது பிழை செய்தாலும் தீது புரியாத தெய்வம்"*
என்று சொல்லி எங்களுக்கு ஐஸ் வைக்காதீர்கள்.
இதற்கு எல்லாம் மயங்குகிறவர்கள் அல்ல தெய்வங்கள்.
*"எல்லா பிழையும் பொருத்து அருள்வாய்"*
என்று பிழை செய்யும் மனிதர்களாகவே இருப்போம் *நீ தான் பிழையை பொருத்து அருளவேண்டும் என்பது போல பிரார்த்தனை செய்யாதீர்கள்.*
*தெய்வங்களின் இயல்புகளையும், அவர்களின் கடமைகளையும் புரிந்துகொள்ளுங்கள். அப்போது தான் சரியான முறையில் நியாயமான முறையில் பிரார்த்தனை செய்வீர்கள்.*
*எப்போதும் தெய்வங்களிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் :-*
*"பிழை செய்யாமல் தடுத்தருள்வாய்"*
என்று பிரார்த்தனை செய்யுங்கள்...
*"நண்பனாய் இருந்து பிழைகளை சுட்டி காட்டி திருத்துவாய்"*
என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
*"அகத்தூய்மை செய்வதில் பேர் உதவி புரிவாய்"* என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
*இவ்வாறு ஈஸ்வரன் என்னுள் இருந்து எனக்கு உணர்த்தினார்.*
*ஆன்மீகவாதிகளான, பக்தர்களான, நாம் உண்மையான பக்தி கொண்டு இந்த புரிதல் உடன் இருந்தால் தான் வருங்காலத்தில் நாம் பிறருக்கு உபதேசிக்கும் போது சரியான பாதையை காட்டமுடியும்.*
எனவே *இதனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமாக பிரார்த்தனையை செய்து இறை அருளை பெற முயலவேண்டும்.*
*கல்லாப் பிழையும் என்று இருக்கிறதா*?
*இனி மேலாவது சைவசித்தாந்தம் கல்வியை படிக்க முயலவேண்டும்.*
*அதனால் இனி "கல்லா பிழையும்" என்ற பேச்சே நம் வாழ்வில் இருக்ககூடாது.*
*கருதா பிழையும் என்று இருக்கிறதா*?
*நம்முள்ளே ஆன்மாவான 'சத்து சித்து ஆனந்தமான' "சச்சிதானந்தம்" இருக்கிறது.*
*அதனை அடிக்கடி கருதவேண்டும்.*
*நினைக்கவேண்டும்.*
அதற்கு வழி என்ன என்றால் ; ,
*ஆன்மீகவாதிகள் அடிக்கடி "சச்சிதானந்தம்" என்று சொல்லுங்கள்.*
*இப்படி "சச்சிதானந்தம்" என்று சொல்லி சிந்தித்து கொள்கிற முறையை கடைபிடித்தோம் என்றால் தானாக ஆன்மாவானது ஈஸ்வரனை கருத ஆரம்பித்துவிடுவோம்.*
*இதனால் "கருதா பிழை" நம் வாழ்வில் செய்யமாட்டோம்.*
*ஐந்து எழத்தை சொல்லா பிழையும் என்று இருக்கிறதா*?
உணவு சாப்பிடும் போதும்
*"நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க"*
என்று சொல்லிவிட்டு சாப்பிடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்ற அடியார்களிடம் பேசும்போதும் *நமசிவாய வாழ்க* என்று சொல்லிவிட்டு பேசுங்கள்
*இதனால் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தை சொல்லாத பிழை நம் வாழ்வில் செய்யமாட்டோம்.*
*துதியா பிழையும் என்று இருக்கிறதா*?
*சர்வேஸ்வரனை துதிக்க நமக்கு தெரியவில்லையா அல்லது துதிக்க நேரம் இல்லையா இதற்கு தீர்வாக நமது செல்போனில் சர்வேஸ்வரனை துதிக்கின்ற பாடலை பதிவேற்றிக் கொள்ளவேண்டும். அதனை அலாரம் டோனாக வைத்து கொள்ளவேண்டும்.*
*காலையில் எழும் போது இந்த அலாரம் டோனை கேட்டுகொண்டே எழுந்து கொள்ளவேண்டும்.*
*இதனால் தானாக நமது உள்மனது ஆனது துதியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையை பெற்றுவிடும்.*
*இதனால் துதியா பிழை என்ற தவறு நம் வாழ்வில் நடக்காது.*
*தொழா பிழை என்று இருக்கிறதா*?
*நமது வீட்டு வாசலின் மேல் பகுதியில் "ஜோதிர் லிங்கம்" புகைப்படத்தை மாட்டி வைத்துவிடுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்த "சதாசிவ மூர்த்தி" புகைப்படத்தை மாட்டி வைத்துவிடுங்கள்.*
*தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது வாசலுக்கு மேல் உள்ள "சதாசிவ மூர்த்தி" படத்தை தொட்டு தலைக்கு மேல் கை வைத்து தொழுதுவிட்டு செல்லுங்கள். இதனை ஒரு பழக்கமாக வைத்துகொள்ளுங்கள்.*
*இதனால் நமது கைகள் தலைக்கு மேல் தூக்கி சாமியை தொழுத பலன் கிடைக்கும். இதனை கடைபிடிப்பதால் தொழா பிழை என்ற தவறில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.*
*இப்படியாக ஆன்மீகவாதிகளான, பக்தர்களான நாம் அனைவரும் இனி*
1. *கல்லா பிழை*
2. *கருதா பிழை,*
3. *ஐந்து எழத்தை சொல்லா பிழை,*
4. *துதியா பிழை,*
5. *தொழா பிழை.*
*ஆகிய ஐந்து பிழைகளை செய்யாது வாழ்ந்து சிறந்த பக்தர்களாக திகழ்ந்து இறையருளை பூரணமாக பெற்று வாழ்வோம்.*
*சர்வேஸ்வரன் எதிர்பார்ப்பதும் இதைத்தான். ஏதாவது ஒருவகையில் இந்த பிழைகளை செய்யாது வாழ முயற்சி எடுத்து கொள்கிறானா என்று தான் பார்க்கிறார்.*
*ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!*
*ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!*
*ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!*
Friday, 17 September 2021
தொட்டா சினுங்கி
✍🏻 *இயற்கை வாழ்வியல் முறை*
🫑🫑🫑🫑🫑
*தொட்டா சிணுங்கியின் நன்மைகள்*
🫑🫑🫑🫑🫑
*தொட்டால் சிணுங்கி, தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் அதே சமயம் இது 60 செ.மீ. உயரமும் இருக்கும். சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும்.*
*பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும்.*
🫑🫑🫑🫑🫑
*தொட்டாசினிங்கி காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.*
🫑🫑🫑🫑🫑
*சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும்.* *சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.*
🫑🫑🫑🫑🫑
*பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.*
🫑🫑🫑🫑🫑
*குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.*
🫑🫑🫑🫑🫑
*மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.*
🫑🫑🫑🫑🫑
*தொட்டால் சிணுங்கி செடியின் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்*
🫑🫑🫑🫑🫑
*உடல் சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.*
🫑🫑🫑🫑🫑
*தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.*
🫑🫑🫑🫑🫑
*பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.*
🫑🫑🫑🫑🫑
*குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.*
🫑🫑🫑🫑🫑
*தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும்.*
*சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று வேலை கொடுக்கவும்.*
*அல்லது ஒரு பங்கு தொட்டால் சுருங்கி இலைக்கு பத்து மடங்கு கொதிக்கின்ற தண்ணீர்விட்டு ஆறின பின் வடிகட்டி வேலைக்கு ஒரு அவன்ஸ் வீதம் தினம் இரண்டு மூன்று வேலை கொடுக்கவும்.*
*இவற்றால் நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்*
🫑🫑🫑🫑🫑
🌷🌷🌷🌷🌷
*மிகினும் குறையினும் நோய்செய்யும்*
*அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்*
🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🦚🦚🦚🦚🦚
*உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🦚🦚🦚🦚🦚
Wednesday, 15 April 2020
மனித பிறவி
மனிதர்கள் தன் உடன் வாழும் உயிரினங்களை துன்புறுத்தாமல் அவர்களையும் தன்னை போல் இந்த பூமியில் வாழ தகுதி உண்டு என்று உணர வேண்டும்
மற்ற உயிரினங்கள் மனிதர்களுக்கு உணவாக படைக்கப்படவில்லை
மனிதா மாறு அல்லது இந்த பூமியில் இருந்து நீக்க படுவீர்கள்
Friday, 21 February 2020
Friday, 5 July 2019
Friday, 4 January 2019
சுக்கு என்ற மாமருந்து
1. பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் போக்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை நீக்கும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
5. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
6. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
7. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
8. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
9. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
10. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.
Sunday, 30 December 2018
குண்டலினி சக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம்
குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடுவினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது.இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்உடலின் வெப்பத்தை உண்மையில்மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்தவெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலேஎழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை மேலும் அதிகரித்து
அனாகதத்தை அடைகின்றது.அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன் எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும். எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து விசுத்தியை அடைகின்றது. ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது. அடுத்ததாக உள்ள சக்கரத்தின் பெயர் ஆக்கினை.
அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால்விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
“சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்”
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ “U”
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.
குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீ
ங்கள் அறியமாட்டீர்கள்.
ங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது.
Share this:
Subscribe to:
Posts (Atom)