🌹 மௌனமே இறைவனாய்👏
🙌அகில உலகை ஆளும் சொக்கநாத பெருமானே
அண்டத்தையும் பிண்டத்தையும் காக்கும்
ஆலவாய் அரசனே உம் திருவடி போற்றி போற்றி.....
ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?
நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .
உடனே புறப்பட்டான் .
போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்
அவர் கேட்டார் .
" எங்கே போகிறாய் ?"
" கடவுளை காண போகிறேன் !"
" எங்கே ? "
" கோவிலில் !"
" அங்கே போய் ........"
" அவரை வழிபட போகிறேன் ! "
" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
" தெரியாது "
" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
" அப்படியென்றால் "
" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்
ஞானி தெளிவு படுத்தினார்
" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல ....
இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் .
தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .
தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
" அதற்க்கு வழி ?"
" தியானம்"
" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"
" இல்லை " மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் ,
அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் .
தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "
அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .
தன்னுடைய தேவையை சொன்னார் :
" I WANT PEACE"
ஞானி சொன்னார்:
" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .
வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .
" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"
" எப்படி அது ?"
" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"
அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
ஞானி கேட்டார்
" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
உற்சாகமாக சொன்னான் .
" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
"இல்லை "
" அந்த வகையில் பார்த்தால்
உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
" யார் அவர் "
" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .
" சரி , சுவாமி . நான் வர்றேன் !"
சோர்வோடு நடந்து போனான் .
அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .
ஞானி கேட்டார் :
" எங்கே போகிறாய் ? "
" வீட்டுக்கு !"
" கோவிலுக்கு போகவில்லையா ?"
" இல்லை "
" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .
'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது !
எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ ,
அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
சிவ சிவ..
🙏🙏🙏🙏🙏🙏**திருச்சிற்றம்பலம்**
இல்லந்தோறும் திருமுறைகள் பாடப்படட்டும்....
உலகெங்கும் சிவசிந்தனை பரவட்டும்....,
ஆலயந்தோறும்
சிவமந்திரங்கள் ஒலிக்கட்டும்.....
அடியேன்
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை...
🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவசமயமும் சைவநெறியும் தழைத்தோங்க சிவவழிபாடு பின்பற்றுவோம்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்....
🙌🙌🙌🙌🙌🙌
🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment