Sunday, 12 February 2017

காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரம்.
ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க மந்திரம் இருக்கிறது.
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

இதன் பொருள் என்ன?

எல்லா பாவங்களையும், அறியாமையும் போக்குகிரவரும், வணங்குவதிகுரியவரும், இவ்வுலகத்தை படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழி நடத்துவாராக.

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலைவிட சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விச்வாமித்திரரே ரிஷி. அதிகாலை பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஜபிக்கவேண்டும். நீராடியபின் ஜபிப்பது சிறந்தது. முடியாவிட்டால் பல் தேய்தவுடன், கால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்குங்கள். மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும்,
உச்சரிக்க பழகுங்கள். முடியாவிட்டால் பொருளை மனப்பாடம் செய்துக்கொண்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள். 
இந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை பெருகும். மனம் வலிமை பெரும். ஞாபகசக்தி அபரிதமாக உண்டாகும். உங்களுக்கு பிடித்தமான எந்த தெய்வத்தையும் நாணத்தில் தியானிக்கவும். காயத்ரி பெண் தேவதை என்பதனால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் நம்பிக்கையோஎடு இம்மந்திரத்தை ஜபித்து நன்மை பெறலாம்

கடல் நீர்



கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது காரணம் கண்திருஷ்டி.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நன்மை ஏற்படும்.
மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் "கடல் தண்ணீர்".

கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.
எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள "சப்த சக்கரங்களை" பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்."ஸ்ரீராமர்" பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, "கடல் நீரே விசேஷமானது" என்றாராம் ஸ்ரீராம பிரபு.

Thursday, 9 February 2017

கருட புராணம்


பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம் !!!
1 யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர். மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்.

2 எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.

3 வுpஷம் கலந்து யாரையும் கொலை செய்தால் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்.

4 கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு சுயரோகத்தால் துன்பப்படுவார்.

5 விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார்.

6 தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர் கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்

7 பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர் நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்.

8 மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர் உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்.


9 பொருள்களில் கலப்படம் செய்தவர்கள் வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்.

10 மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர் சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்.

11 ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை நோய்க்கு ஆட்படுபவர்.

12 பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர் பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால் துன்புறுவர்.

13 வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்.

14 இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள் பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்

15 வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர் பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.

16 சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர் மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்.

17 சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர் அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண்
உடையவராகவும் பிறப்பார்.

18 சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர்
வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்.

19 தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர்
ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய் உள்ளவராகிறார்.

20 ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்.

21 புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர் வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.

22 உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர் மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்

23 வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர் ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்

24 காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள் பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.

25 கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர் உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்

26 பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர் வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்.

27 தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்

28 பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள் தொற்று நோய்க்குள்ளாவார்கள்.

29 காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்.

30 ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர் சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவர்
############################################################
நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம்!!!
1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்
3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு
4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்
5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்
6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்
7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்
8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்
9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்
10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்
12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை
13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்
14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது
15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்
16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்
18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்
20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்
21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்
23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்
24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்
25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்
26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்
27 வுpரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்
28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.
எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்
#####################################################


பாபங்களுக்கான பிறவிகள் !!!
தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.
1 உத்தமனாய் இருப்பவர் தேவனாகிறார்
2 உத்தமனாய் இல்லையெனில் முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்
3 தருமவான் தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன். மூலிகைச் செடியாவான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.
4 வலையில் சிக்கிய மீன் எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;
5 கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம் பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது
6 மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன் விருச்சிகப் பிறவி அடைகிறான்
7 தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன் நண்டாக பிறக்கிறான்
8 குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர் வெளவாலாக தொங்குகின்றான்
9 தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள் மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்
10 கூர்மையான நோக்குள்ளவர் வல்லூராக பிறப்பார்
11 பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர் பருந்துப் பிறவி வாய்க்கும்
12 மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர் கொக்காக பிறக்கிறார்
13 குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர் புலியாக பிறக்கிறார்
14 நண்பனுக்கு துரோகம் செய்தவர் நரியாக, கழுதையாக பிறக்கிறார்
15 காது கேளாதவரை இகழ்பவர் அங்கஹீனனாக பிறக்கிறார்
16 தாகத்துக்கு தண்ணீர் தராதவர் காக்கையாக பிறக்கிறார்
17 பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர் புழுவாகப் பிறக்கிறார்
18 விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர் புpசாசாக அலைய நேரிடும்
19 பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர் ஆவியாக அல்லாடுவர்
20 கொலை, கொள்ளை, செய்பவர் 100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்
21 தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்
22 மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர் திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்
23 தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர் மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்
24 விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர் பன்றியாக, கோழியாக பிறக்கிறார்
25 கோள் சொல்பவர் பல்லியாக, தவளையாக பிறக்கிறார்
26 உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர் அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்
27 மாமிசம் புசிக்கின்றவருக்கு சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன
28 அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர் கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்
29 தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர் ஊமையாக பிறக்கிறார்
30 தெய்வ நம்பிக்கை இல்லாதவர் பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது
ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.

Monday, 6 February 2017

வெள்ளை அணுக்களும் ஆன்மிகமும்


நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும்.நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.

நமது உடலுக்கு எடையைத் தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;

இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல்,தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி,அழிக்கிறது.



அழித்து நமது உடலில் இருந்து கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.

நமது முகத்தில் தேஜஸ்ஸைத் தருகிறது. நமது இளமையைப் பாதுகாக்கிறது;

நமது ஆரோக்கியத்தோடு, செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.

இப்பேர்ப்பட்ட இந்த விந்தின் புராதன இந்துப் பெயர்கள் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகும்.

இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்;
அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;


மன நலம் சிறப்பாக இருப்பின்,நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;

குடும்ப நலம் சிறப்பாகஇருந்தால்,
நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.

இப்படியே சங்கிலித் தொடராக வளர்ந்து நமது நாட்டின் நலனும் உயரும்.

அளவுக்கு மீறி நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை வீணாக்கினால்,முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்

இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்



மேலும் நமது உடலின் ஆதாரசக்தியான இந்த வெள்ளை அணுக்களில் தான் நாம் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் சேமிப்பாகி வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம்(அல்லது 10 நிமிடம்) ஜபித்துவருகிறீர்கள் எனில்,அந்த மந்திரஜபத்தின் சக்தியானது இந்த வெள்ளை அணுக்களில் சேமிப்பாகிவரும்;

இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள், நவக்கிரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.

அப்பேர்ப்பட்ட வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணடித்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தியும் நமக்குள் செயல்படமுடியாமல் போய்விடும்.



இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் பல ஆண்டுகளாக நமது ஆன்மீக குருபரம்பரையினர் ஆராய்ந்து கண்டுபிடித்த வியக்கத்தக்க உண்மை ஆகும்.

உடல்நலம் பேணுவோம், அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறுவோம்; இதைத்தான் திருமூலர்
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் னே என்று கூறினார்........ நன்றி

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் எலுமிச்சைபழம்

வீட்டில் உள்ள தீய சக்திகளை காட்டிகொடுக்கும் 3 எலுமிச்சைபழம்
ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
எனவே ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு, மூன்று பச்சை எலுமிச்சைப் பழங்கள் மட்டும் போதும்.
எலுமிச்சைப் பழத்தை வைத்து தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி?
மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும்.
அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் மாறினால், அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.
தூய்மையான மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும்.
இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும்.
இப்படி செய்தால், நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
நாம் அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
அதிலும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.
நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, 1 பச்சை எலுமிச்சையை பாக்கெட் பையில் வைத்துக் கொண்டு சென்று வந்ததும் அந்த எலுமிச்சையை பார்க்கும் போது, அது எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும்.
நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்து விட வேண்டும்.

உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!



உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.
அசுவினி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்டநிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில்
வைடூர்யத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.
பரணி, பூரம், பூராடம்
சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்டக்கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்டக்கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த
ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி
ராசியினரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும். அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்டக்கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.
திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகுதிசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது. அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திராதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்டதெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழனன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் துவங்குவது நன்மை தரும். அதிர்ஷ்டக்கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
உங்களின் நட்சத்திராதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்டநிறம் கருநீலம். அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் நீலம். ரிஷபம், மிதுனராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திராதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை. அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்.

பக்தியால் சாய்ந்து நிமிர்ந்த சிவலிங்கம்


பக்தியால் சாய்ந்து நிமிர்ந்த சிவலிங்கம் !
திருப்பனந்தாள் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருணஜடேஸ்வரர் என்னும் செஞ் சடையப்பர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் சக்தியாக பெரியநாயகி அம்மன் அருள்பாலிக்கிறாள்.
இந்த அம்மனுக்கு சிவபெருமான் ஞானோபதேசம் செய்த தலம் இது என்று கூறப்படுகிறது.
ஆலயத்தின் மேற்கு நோக்கிய ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுரம், ஈசனை தரிசிக்க நம்மை சுண்டி இழுக்கிறது.
கருவறையில் சுயம்புவாக தோன்றிய ஈசன், கம்பீரமாய் காட்சியளிக்கிறார்.
சாய்ந்த லிங்கம்🌹🌿
தாடகை (ராமாயணத்தில் வருபவள் அல்ல) என்ற பெண், புத்திர பாக்கியம் வேண்டி இத்தல ஈசனை தினமும் மாலை சூட்டி வேண்டி வந்தாள்.
அன்றும் அவ்வாறுதான் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும் பணியை செய்வதற்காக கோவிலுக்கு வந்திருந்தாள்.
மாலையை எடுத்து சிவலிங்கத்துக்கு சூடப்போகும்போது, எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது.
அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே, சிவலிங்கத்துக்கு மாலை சூட்ட முயன்றாள்.
ஆனால் முடியவில்லை.
சேலையைப் பற்றியபடியே கையை உயர்த்தி, சிவலிங்கத்திற்கு மாலை சூட்ட இயலவில்லை.
இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள்.
அவளுக்காக இரங்கிய ஈசன், தனது சிவலிங்க மேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார்.
இதனால் மனம் மகிழ்ந்து போன தாடகை, சிவபெருமானை துதித்து வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்றாள்.
அதன்பின்னரும் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது.

குங்குலியக் கலய நாயனார்🌿🌹
ஒரு நாள் இவ்வாலயத்தில் இறைவனை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான்.
தனது படை வீரர்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும், அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் திருக்கடையூரில் அவதரித்த, 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார்.
இறைவனை தரிசிப்பதற்காக கருவறைக்கு சென்ற நாயனாருக்கு, சிவலிங்கம் தலை சாய்ந்திருப்பதைக் கண்டு கலக்கமுற்றார்.
பின்னர் சாய்ந்திருந்த சிவலிங்கத்தை தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு, அந்த கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார். முதலில் சிவலிங்கம் நிமிரவில்லை.
பக்திக்காக நிமிர்ந்தது🌿🌹
ஆனால் குங்குலியக் கலய நாயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக் கொண்டே வந்தது.
சிவலிங்கம் நிமிரவில்லை என்றால், கயிறு இறுகி, நாயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது.
குங்குலியக் கலய நாயனார் விடவில்லை.‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே தன் பலம் கொண்ட மட்டும், அந்த சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார்.என்ன ஆச்சரியம்! அதுவரை நிமிராத சிவலிங்கம், நிமிர்ந்தது நாயனாரின் பலத்துக்காக, சிவலிங்கம் நிமிர்ந்ததா?
இல்லை அவரது பக்தியால் அல்லவா! நேர் நோக்கி நின்றார் அந்த ஈசன்.
இந்த சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாளில் என்று கூறப்படுகிறது.
தாடகைக்காக ஈசன், சிவலிங்கத்தை சாய்த்துக் கொடுத்ததும், குங்குலியக் கலய நாயனாருக்காக சாய்ந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் ஆலயத்தின் பதினாறு கால் மண்டபத்தில் உள்ளன.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மேற்கு கோபுரத்தின் தெற்கே, குங்குலியக் கலய நாயனாரின் சன்னிதி அமைந்துள்ளது.
ஒரு முறை பசியோடு இத்தலத்திற்கு வந்த காளமேகப் புலவருக்கு ஈசன், சிவாச்சாரியார் வடிவில் வந்து அன்னம் அளித்துப் பசி ஆற்றியுள்ளார்.
இதனை கவி காளமேகம் தனது பாடலில் போற்றிக் கூறியுள்ளார்.
எனவே இத்தல ஈசனை வழிபட்டால் வறுமை, பஞ்சம் அகலும். நம் வாழ்வில் அன்னத்திற்கு குறை வராது.
நன்றி :- சிவனடியான் வடிவேலன்

வில்வ மரம் -சாபம் நிவர்த்தி


தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தலைத்தோங்க பரிகாரம்:
தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தழைத்தோங்க வில்வ விதைகளை நல்ல சுப நாளில் வாங்கி மண்தொட்டியில் போட்டு தண்ணீர் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வில்வ கன்று விதையிலிருந்து துளிர்க்கும்.
தினசரி பஞ்சாட்சரம் செபித்து வர வேண்டும் . ஒரு அடி வளர்ந்தவுடன் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் எதாவது ஒரு சிவன் கோவிலில் நட்டு வைத்து அதை நன்கு பராமரிக்க ஆட்களை நியமிக்கவும். அருகில் இருந்தால் தினசரி தண்ணீர் விட்டு , வேலி அமைத்து கவனிக்கவும் 6 அடிக்கு மேல் வளர்ந்தவுடன் அது தானாகவே தழைக்கும்.
அந்த வில்வ இலைகளை சிவபெருமானுக்கு பயன்படும் பொழுது அனைத்து தீய கர்மாக்களும் விலகும். பெரும் புகழ் பாக்கியம் உண்டாகும்.ஈசன் அருளால் நன்மைகள் பல உண்டாகும்.பரம்பரை தரித்திரம், அடிமை வாழ்வு நீங்கும்.
சிவன் கோவிலில் வைக்க முடியாவிட்டால் கோவில் அருகில் வளர்க்கலாம். அதே பயன் கிடைக்கும். வில்வ மரத்தை வலம் வருவது மகாலெட்சுமியை வலம் வருவதற்கு சமம்.
ஓம் நமச்சிவாய.

Friday, 3 February 2017

கோமாதா

  • இந்துக்களின் கலாச்சாரப்படி மாதா என்று அழைக்கப்படக்கூடியவைகள், 

  • பெற்ற தாய், 
  • பெண் தெய்வங்கள், 
  • பசுமாடு 

  • ஆகிய மூன்று மட்டுமேயாகும்...பசுமாடு குறுக்கமாக கோ எனப்பட்டதால் மாதா என்னும் சொல்லும் சேர்த்து கோமாதா எனப்பட்டது...வளர்ப்புத்தாய், தாய்முறை உறவுகள், நாடு, மொழி போன்றவைகளும் மாதா எனக்குறிப்பிடப்பட்டு பின்னாட்களில் வழக்கில் வந்ததாகச் சொல்வர்...


பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்...

முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். 
பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.
பசுவும் புண்ணியங்களும்……..
*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
*`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.
*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
கோமாதாவை காப்போம்….!

ஸ்ரீ ஹரியும் கங்கை தீர்த்தமும்


விஷ்ணு கதை கேட்டால் கங்கை தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவ வினைகளை போக்க ஒரு முறையேனும் காசி சென்று கங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்று கூறுவார்கள். அதன் மூலமாக அனைத்து பாவங்களும் அகன்று விடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
கங்கையில் நீராட முடியாதவர்கள் காலம் முழுவதும், தங்களையும் அறியாமல் செய்த ஒரு பிழையால், அதற்குண்டான பாவ வினைகளை நீக்க வழி உள்ளது. அந்த வழியை கூறும் கதையை இங்கு காணலாம்.
கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார்.
அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு, பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது நூறாண்டு கால வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை.
அன்றாட பணிகளை முடிப்பது, ஹரி கதையை கேட்பது, உணவு கேட்டு, தங்க இடம் கேட்டு வரும் அதிதிகளை உபசரிப்பது என்பவையே அவரது தலைசிறந்த பணியாக இருந்தது.

கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை.
அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.

ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர்.
அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர்.
அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். 
இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.
அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர்.
அதற்கு புண்ணியதாமா, ‘நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையை கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார்.
ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர்.
‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும்.
இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.


அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.
ஆனால் அந்த இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.
கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது.
அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர் அவர்கள். 
ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை.
‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று புலம்பத் தொடங்கி விட்டனர்.
பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர்.
அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி, ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்.
மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள்.
ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன.
அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள்.
அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன்.
நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள்.
அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது’ என்று கூறி மறைந்து விட்டாள்.
தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.
அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார்.
பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.
கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாதது.
ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்து முடிக்கக் கூடிய விஷயம்தான்.
ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும்.
அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும்.
ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை என்பதை உணருங்கள்.
"ஸ்ரீமன் நாராயண உன் திருவடிகளே சரணம் "