*"மன்னித்தல்" என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது* என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
*கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்*
*கசிந்து உருகி நில்லாப்பிழையும்*
*நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும்*
*துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும்* *பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.*
-- *பட்டினத்தார்*
இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம். அதுவும் பக்தி மனநிலையில் பாடி இருப்போம்.
ஆனால் ஒருநாள் ஈஸ்வரன் என்னை பார்த்து திட்டுவது போல் உணர்ந்தேன்.
*ஈஸ்வரன் கேட்கிறார் :-*
நான் ஏன்டா *கல்லா பிழையை பொருத்துக்கனும் ?*
*நீ உண்மையையும், நீதியையும், ஆன்மாவை பற்றியும் கற்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் உன்னை பூமிக்கே அனுப்பினேன்.*
நீ என்னடான்னா இங்கு வந்து ஒழுங்காக குருவை நாடி தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் என் கோவிலுக்கு வந்து
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் ... பொருத்து அருள்வாய்"*
என்று பிரார்த்தனை செய்கிறாய்.
*ஒரு உண்மையை சொல்கிறேன் : -*
*தானமும், தவமும், பூமியில் மட்டும்தான் செய்யமுடியும்.*
*பூமியில் வாழும் காலத்தில் நீ தானம், தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில் இருக்கும்போது "தானம், தர்மம்" செய்யவேண்டும் கடவுளே என்று என்னிடம் பிரார்த்தனை செய்தால்;*
*நான் என்ன சொல்வேன்;*
*அடப்பாவி அதற்கு தானே உனக்கு "ஸ்தூல தேகம்" கொடுத்து பூமிக்கு அனுப்பினேன்.*
*நீ என்னடா என்றால் அங்கு ஒழுங்கா எதையும் கற்காமல், தானமும், தவமும் செய்யாமல் வாழ்ந்துவிட்டு இப்பவந்து கேட்கிற.*
*சரி என்ன பன்றது மறுபடியும் பூமியில் போய் பிறந்து முறையாக குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும், தானம் தவமும் செய்து வாழ்ந்துவிட்டு வா என்றுதான் சொல்வேன்.*
*மேல் உலக வாழ்கை என்பது பூலோக வாழ்க்கையின் போது செய்த தானம், தவம், மற்றும் பெற்ற ஞானம் போன்றவற்றிற்கான பலனை அனுபவிக்கிற வாழ்கை ஆகும்.*
*"பதவி பூர்வ புண்ணியானாம்"*
பூமியில் வாழம்போது *100 அஸ்வமேத யாகம் செய்தால்,* இறந்த பிறகு சொர்க்கத்திற்கு சென்றால் அங்கு இந்திர பதவியே கொடுக்கப்படும் என்பது தான் சாஸ்திரம் ஆகும்.
அதனால் தான் *மகாபலி அரசன்100 அஸ்வமேத யாகம் செய்தான்* என்பது உனக்கு தெரியாதா ?
ஒருவேளை உனக்கு சொர்க்கம் போன்ற மகிழ்ச்சி மற்றும் பதவிகள் மீது எல்லாம் பற்று இல்லை என்றால் முக்தி அடையவேண்டும் என்பது தான் விருப்பம் என்றால் ;
*நீ ஒரு குருவை சரண் அடைந்து*
*"ஸ்தூல தேகம்",*
*"சூட்சும தேகம்",*
*"காரண தேகம்",*
*"மகா காரண தேகம்",*
*போன்ற உண்மைகளையும், பசு, பதி, பாசம் போதிக்கிற சைவசித்தாந்த கல்வியை கற்கவேண்டும்.*
*96 தத்துவங்கள் பற்றியும், தசகாரியம் பற்றியும் கற்கவேண்டும்.*
அப்படி கற்றால் தான், அதன் படி வாழ்ந்து *ஸ்தூல தேகம், மனோதேகம்* போன்றவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டுத்தான் ஜீவன் *முக்தி நிலையை* அடையமுடியும்.
*இந்த சைவசித்தாந்தம் கல்வியை கற்பது என்பது முக்தி பிராப்தத்தை விரும்பும் மனிதனுக்கு இன்றியமையாதது ஆகும்.*
*இந்த சைவசித்தாந்தம் கல்வியை கற்பதற்காக ஒருவன் பிச்சை எடுத்தாலும் தவறு இல்லை என்று "வெற்றி வேற்கை" என்ற நூலின் மூலம் உலகுக்கு சொன்னேன்.*
" *கற்கை நன்றே* *கற்கை நன்றே*
*பிச்சை புகினும்* *கற்கை நன்றே "*
*பிச்சை எடுத்தாவது சைவசித்தாந்தம் கல்வியை படிடா என்று சொன்னல் ; நீ என்னடா என்றால்*
*"கல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய்"*
என்று பிரார்திக்கிறாய்.
*சொல் பேச்சை கொஞ்சம் கூட கேட்க மாட்டுங்கிற !!*
*நீ அப்படி குருவை நாடி சென்று கல்வி கற்றாலும் அந்த கல்வி அவ்வளவு லேசில் உன் மனதில் தங்கிவிடாது. அது உலக மயக்கங்களால் மறைந்து மறந்து போய்விடும்.*
*அதனால் தான் "சிவ தீட்சை" பெற்று சைவசித்தாந்தம் கற்க வேண்டும், தினமும் கற்ற கல்வியை அசை போடவேண்டும் என்று அறிவுருத்தினேன்.*
*"காலையும் மாலையும் நான்மறை ஓதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே"*
-- வெற்றி வேற்கை
மேலும் *ஒளவையார்* வாக்கின் வழியாகவும் *கல்வி என்பது மனப்பழக்கம்* என்று அறிவுருத்தினேன்.
*"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,*
*வைத்ததொரு கல்வி மனபழக்கம்"*
*கற்ற சைவசித்தாந்தம் உண்மைகளை அவ்வப்போது படித்து வரவேண்டும். அதை நன்றாக மனதிற்கு பழக்கப்படுத்திவிட வேண்டும்.*
*அப்போது தான் அதன்படி நடக்க, வாழ, உன் மனம் ஆயத்தம் ஆகும்.*
அதனால் தான் *"ஓதா கல்வி கெடும்"* என்றேன்.
*ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் உன் மனம் சைவசித்தாந்தம் நெறிப்படி வாழ தயாராகிவிடாது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து கற்று அதனுடனேயே பயணித்து அதனுடனேயே கலந்து அதுவாகவே உன் மனம் மாறிவிட வேண்டும்.*
*அப்படிபட்ட நிலையை அடைந்த பிறகுதான் ஸ்தூல தேகம், மனோதேகத்தை எல்லாம் விட்டு விலகிசென்று, சத்தான ஆத்மாவை மகா காரண தேகத்தை அடையமுடியும்.*
இப்படி இருக்க நீ என்னடா என்றால் இந்த பட்டினத்தாரின் ஒரு பாடலை பிடித்துக்கொண்டு அடிக்கடி என் முன் வந்து
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.."*
என்று வேண்டுகிறாய்.
*கல்லாப் பிழையை எல்லாம் ஈஸ்வரனாகிய நான் பொறுத்துக் கொண்டு திடீர் என்று உனக்கு முக்தி நிலையை கொடுத்தாலும், அது முக்தி என்று உனக்கு தெரியாது. உன்னால் அதை உணரமுடியாது.*
அதனால் முட்டாள் தனமாக என் முன் வந்து
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்.. பொறுத்து அருள்வாய்"*
என்று வேண்டாதே.
*2010ம் ஆண்டு* என் கோவிலுக்கு வந்து
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"*
என்று பிரார்த்தனை செய்தாய்.
சரி காலம் போக போக நீ கல்வி கற்றுக்கொள்ளலில் ஆர்வம் செலுத்துவாய் என்று பார்த்தேன்;
ஆனால் நீயோ *2015ம் ஆண்டும்* கோவிலுக்கு வந்து மறுபடியும்
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"*
என்று பிரார்த்தனை செய்தாய்.
சரி போகட்டும் இனியாவது சைவசித்தாந்தம் உண்மைகளை கற்பதில் கவனம் செலுத்துவாய் என்று பார்த்தால் நீயோ *2021 ம் ஆண்டும்* என் கோவிலுக்கு வந்து மறுபடியும்
*"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"*
என்று பிரார்த்தனை செய்கிறாய்.
*ஒரே பல்லவியையே ஆயுள் முழுவதும் பாடுகிறாய். அதனையும் உன்னை போல் அறிவிலியாட்டம் என்னையும் கேட்க சொல்கிறாய். இது நியாயமா என்று சற்று யோசித்துப் பார்.*
*இந்த ஆண்டு கற்க வில்லையா என் கோவிலில் வந்து இந்த பாடலை பாடிவிட்டு அடுத்தமுறை வரும்போது கற்றுகொண்டு வருகிறேன் இறைவா என்று நீ சொன்னால் அது நல்ல பிள்ளைக்கு அழகு.*
*அதனால சும்மா ஓப்பி அடிச்சு, இந்த பாடலை பாடியே பஜனை பண்ணிட்டு போய்டலாம் கடவுள் நமக்கு முக்தி கொடுத்துவிடுவார் என்று என்னுகிறாயா !!*
*நாட்டில் நிறைய அடியார்கள் இப்படித்தான் திரிகிறார்கள்.*
நீயாவது பரவாயில்லை வேறு ஒரு முருகன் அடியார் இருக்கிறான். அவன் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று
*"ஏது பிழை செய்தாலும் ஏழையனுக்கு இறங்கி தீது புரியாத தெய்வமே"*
என்று பாடுகிறான்.
பக்தர்களாகிய உங்களுக்கு எல்லாம் ஒன்றை தெளிவாக சொல்லி கொள்கிறேன்.
*ஏது பிழை செய்தாலும் பொருத்துகொண்டு தீது செய்யாதவர்கள் மூவர் மட்டும் தான்.*
1. *அம்மா*
2. *அப்பா*
3. *குரு*
*இந்த மூவர் மட்டும் தான் தீது புரிய மாட்டர்கள்.*
*மற்றபடி தெய்வங்கள் எல்லாம் நீதி பரிபாலனம் செய்யும் அதிதேவதைகள் ஆகும்.*
*அந்த நீதி படி அவரவர்களுக்கு தண்டனையும் நன்மையும் கிடைக்கும் படி நவகிரகங்களுக்கு கட்டளை இட்டு உலகை பரிபாலனம் செய்து வருகிறோம்.*
*எனவே ஏது பிழை செய்தாலும் எல்லாம் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட முடியாது.*
*சிவ பக்தனான "ராவணன்" நிறைய பிழைகள் செய்தான். தேவர்களோ சிவனான என்னிடம் வந்து முறையிட்டனர்.*
நானோ என் பக்தனை நானே தண்டித்தல் முறையாகாது. அதனால் விஷ்ணு விடம் சென்று பிராத்தியுங்கள். அவரால் *ராவணனை* தண்டிக்கமுடியும் என்று நான் ஐடியா கொடுத்தேன்.
*ராவணன்* என் பக்தன் என்பதற்காக அவனை தண்டிக்காமலா விட்டேன் !!
சற்று யோசித்துப் பாருங்கள்.
*நாளாயினி* போன ஜென்மத்தில் சூரியனையே உதிக்காதபடி செய்தால் ; !
அதற்கு தண்டனையாக மறுஜென்மத்தில் பாஞ்சாலியாக பிறந்து கஷ்டப்பட்டால், அவள் என்னை கும்பிட்டால் என்பதற்காக அவளது தவறை மூடி மறைத்து தண்டிக்காமல் விட்டேனா என்ன !
*திருதிராஷ்டிரன்* போன ஜென்மத்தில் 100 அன்ன பறவைகள் கறியை சாப்பிட்டான் அந்த பாவம் பலனாக அடுத்த ஜென்மத்தில் கண் தெரியாத திருதிராஷ்டிரனாக பிறந்தான். அவன் என்னை கும்பிட்டான் என்பதற்காக அவனை தண்டிக்காமலா விட்டேன்.
*தசரதன்* ஒரு அப்பாவி மனிதனை கொன்றான். அந்த பாவத்துக்கு தண்டனையாக தான் சாபம் பெற்று மாண்டான். என் பக்தன் என்பதற்காக அவனது சாபம் பலிக்காமல் போகும் படியா செய்தேன்; இல்லையே.
*இதில் இருந்து எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன ?*
*சர்வேஸ்வரனாகிய நான் நீதி தவறாதவன் ஆவேன். என் பக்தனே ஆனாலும் தண்டிப்பேன்.*
அதனால் மனிதர்களாகிய நீங்கள் தெய்வங்களாகிய எங்களிடம் வந்து
*"ஏது பிழை செய்தாலும் தீது புரியாத தெய்வம்"*
என்று சொல்லி எங்களுக்கு ஐஸ் வைக்காதீர்கள்.
இதற்கு எல்லாம் மயங்குகிறவர்கள் அல்ல தெய்வங்கள்.
*"எல்லா பிழையும் பொருத்து அருள்வாய்"*
என்று பிழை செய்யும் மனிதர்களாகவே இருப்போம் *நீ தான் பிழையை பொருத்து அருளவேண்டும் என்பது போல பிரார்த்தனை செய்யாதீர்கள்.*
*தெய்வங்களின் இயல்புகளையும், அவர்களின் கடமைகளையும் புரிந்துகொள்ளுங்கள். அப்போது தான் சரியான முறையில் நியாயமான முறையில் பிரார்த்தனை செய்வீர்கள்.*
*எப்போதும் தெய்வங்களிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் :-*
*"பிழை செய்யாமல் தடுத்தருள்வாய்"*
என்று பிரார்த்தனை செய்யுங்கள்...
*"நண்பனாய் இருந்து பிழைகளை சுட்டி காட்டி திருத்துவாய்"*
என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
*"அகத்தூய்மை செய்வதில் பேர் உதவி புரிவாய்"* என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
*இவ்வாறு ஈஸ்வரன் என்னுள் இருந்து எனக்கு உணர்த்தினார்.*
*ஆன்மீகவாதிகளான, பக்தர்களான, நாம் உண்மையான பக்தி கொண்டு இந்த புரிதல் உடன் இருந்தால் தான் வருங்காலத்தில் நாம் பிறருக்கு உபதேசிக்கும் போது சரியான பாதையை காட்டமுடியும்.*
எனவே *இதனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமாக பிரார்த்தனையை செய்து இறை அருளை பெற முயலவேண்டும்.*
*கல்லாப் பிழையும் என்று இருக்கிறதா*?
*இனி மேலாவது சைவசித்தாந்தம் கல்வியை படிக்க முயலவேண்டும்.*
*அதனால் இனி "கல்லா பிழையும்" என்ற பேச்சே நம் வாழ்வில் இருக்ககூடாது.*
*கருதா பிழையும் என்று இருக்கிறதா*?
*நம்முள்ளே ஆன்மாவான 'சத்து சித்து ஆனந்தமான' "சச்சிதானந்தம்" இருக்கிறது.*
*அதனை அடிக்கடி கருதவேண்டும்.*
*நினைக்கவேண்டும்.*
அதற்கு வழி என்ன என்றால் ; ,
*ஆன்மீகவாதிகள் அடிக்கடி "சச்சிதானந்தம்" என்று சொல்லுங்கள்.*
*இப்படி "சச்சிதானந்தம்" என்று சொல்லி சிந்தித்து கொள்கிற முறையை கடைபிடித்தோம் என்றால் தானாக ஆன்மாவானது ஈஸ்வரனை கருத ஆரம்பித்துவிடுவோம்.*
*இதனால் "கருதா பிழை" நம் வாழ்வில் செய்யமாட்டோம்.*
*ஐந்து எழத்தை சொல்லா பிழையும் என்று இருக்கிறதா*?
உணவு சாப்பிடும் போதும்
*"நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க"*
என்று சொல்லிவிட்டு சாப்பிடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்ற அடியார்களிடம் பேசும்போதும் *நமசிவாய வாழ்க* என்று சொல்லிவிட்டு பேசுங்கள்
*இதனால் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தை சொல்லாத பிழை நம் வாழ்வில் செய்யமாட்டோம்.*
*துதியா பிழையும் என்று இருக்கிறதா*?
*சர்வேஸ்வரனை துதிக்க நமக்கு தெரியவில்லையா அல்லது துதிக்க நேரம் இல்லையா இதற்கு தீர்வாக நமது செல்போனில் சர்வேஸ்வரனை துதிக்கின்ற பாடலை பதிவேற்றிக் கொள்ளவேண்டும். அதனை அலாரம் டோனாக வைத்து கொள்ளவேண்டும்.*
*காலையில் எழும் போது இந்த அலாரம் டோனை கேட்டுகொண்டே எழுந்து கொள்ளவேண்டும்.*
*இதனால் தானாக நமது உள்மனது ஆனது துதியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையை பெற்றுவிடும்.*
*இதனால் துதியா பிழை என்ற தவறு நம் வாழ்வில் நடக்காது.*
*தொழா பிழை என்று இருக்கிறதா*?
*நமது வீட்டு வாசலின் மேல் பகுதியில் "ஜோதிர் லிங்கம்" புகைப்படத்தை மாட்டி வைத்துவிடுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்த "சதாசிவ மூர்த்தி" புகைப்படத்தை மாட்டி வைத்துவிடுங்கள்.*
*தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது வாசலுக்கு மேல் உள்ள "சதாசிவ மூர்த்தி" படத்தை தொட்டு தலைக்கு மேல் கை வைத்து தொழுதுவிட்டு செல்லுங்கள். இதனை ஒரு பழக்கமாக வைத்துகொள்ளுங்கள்.*
*இதனால் நமது கைகள் தலைக்கு மேல் தூக்கி சாமியை தொழுத பலன் கிடைக்கும். இதனை கடைபிடிப்பதால் தொழா பிழை என்ற தவறில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.*
*இப்படியாக ஆன்மீகவாதிகளான, பக்தர்களான நாம் அனைவரும் இனி*
1. *கல்லா பிழை*
2. *கருதா பிழை,*
3. *ஐந்து எழத்தை சொல்லா பிழை,*
4. *துதியா பிழை,*
5. *தொழா பிழை.*
*ஆகிய ஐந்து பிழைகளை செய்யாது வாழ்ந்து சிறந்த பக்தர்களாக திகழ்ந்து இறையருளை பூரணமாக பெற்று வாழ்வோம்.*
*சர்வேஸ்வரன் எதிர்பார்ப்பதும் இதைத்தான். ஏதாவது ஒருவகையில் இந்த பிழைகளை செய்யாது வாழ முயற்சி எடுத்து கொள்கிறானா என்று தான் பார்க்கிறார்.*
*ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!*
*ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!*
*ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!*
1 comment:
மிக நீண்ட பதிவு.. சிறப்பான விளக்கங்கள்.. மற்றும்.. மேற்கோள்கள்.. மொத்தத்தில்.. ஒரு புதிய பார்வை.. பட்டினத்தார்.. பாடலுக்கு.. சிறப்பு..
Post a Comment