அகத்தியரின் அருள் உபதேசம்
கும்பமுனி, அகத்தியரின் தவவலிமையால் பிறந்தவர். அந்த கும்பமுனி அகத்தியரின் தவவலிமையால் பிறந்தாலும் அகத்தியரை மிஞ்சிய சீடன் என்று முக்கண்ணனால் போற்றப் படுபவர். ஏனென்றால் கும்பமுனி தனது மூன்று வயது முதல் 12 வயது வரை முக்கண்ணனை நோக்கி கடும் தவம் தவ லோகத்தில் அல்லது தவ உலகத்தில் செய்தவர். தவ லோகத்தில் அல்லது தவ உலகத்தில் யாரும் 3 வயது முதல் தவம் செய்ததில்லை. அச்சரித்திரத்தை உண்டாக்கியவர்தான் கும்பமுனி.
இறைவனை நோக்கிய பயணத்தில் மனிதர்கள் பல படிகள் ஏறிதான் செல்லவேண்டும். அவ்வாறு ஏறிச்செல்லும்போது ஏதாவது ஒரு ஊர் வரும். அந்த ஊரில் இறங்கி, அங்கு தங்கி வாழ்ந்து வருகின்றேன் என்றால் அது இறைவனை நோக்கிய பயணமாகாது. அது ஊர் நோக்கிய அல்லது உலகத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கும். எனவே மனிதர்கள், இறைவனை நோக்கி பயணம் செய்ய வேண்டுமென்று அந்த படியில் ஏறிவிட்டால் அந்த படிதான் இறைவன், இறைவன்தான் அந்த படி.
இன்னும் சொல்லப்போனால் அந்த படிதான் இறைவனின் தவஒளி, அந்த அந்த படிதான் இறைவனின் பாதம், அந்த படிதான் இறைவனின் திருவடி, அந்த படிதான் இறைவனின் ஜோதிர்லிங்கம், அந்த படிதான் இறைவனின் ஓம்காரம் மௌனம், அந்த படிதான் இறைவனின் உபதேசம், அந்த படிதான் இறைவனின் ஆன்மா என்று அந்த படியிலே நின்று கொண்டு, தியானித்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டு மனிதர்கள் பழகி விட்டால், அந்த படியில் சார்ந்த ஊர், பிறவி ஊர், அந்த படியில் சார்ந்த பிறவிபிணி நீங்கிவிடும்.
தவம் செய்பவர் யார் என்றால் இறைவன் என்கின்ற அந்த அட்சரத்தை கண் இமைக்காமல், குண்டலினியிலுள்ள அனைத்து கண்களையும் திறந்து குறைந்த பட்சம் இரண்டு லட்சம் கண்கள், உற்றுநோக்குவதுதான் தவசிகளின் நிலையாகும்.
இரண்டு லட்சம் கண்கள் எங்கிருந்து வந்து என்பது மனிதர்களுக்கு வியப்பான விஷயமாக இருக்கும். குண்டலினி என்பது மனிதனுக்கு கொடுக்கும்போது பத்து தலை நாகமாக இருக்கும். பாலக பருவத்தில் இருக்கும்போது 5 தலை நாகமாகவும்,வயோதிக பருவத்தில் 10 தலை நாகமாக இருக்கும். ஆனால் அவன் சித்த வித்தை என்கின்ற கலையை கற்று அந்நிலையை அடையும் போது 50 தலை நாகமாக மாறுகின்றது.
ஒரு நாகத்திற்கு 2 கண்கள் என்றால் சித்தவித்தை முடித்தவனிடம் 100 கண்கள் இருக்கின்றது என்பதுதானே அர்த்தம். அவ்வாறு அகத்தியரிடம் ஒரு லட்சம் தலை நாகம் கொண்ட குண்டலினி உள்ளதப்பா. எனவே குண்டலினியின் 2 லட்சம் கண்களும், அகத்தியரின் 2 கண்களும் ஆகமொத்தம் 2 லட்சத்திரண்டு கண்களும் அந்த இறைவனின் அட்சரத்தை உற்றுப் பார்த்து, கடும்தவத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.
அச்சமயத்தில் தன்னை நாடி வருபவர்களின் பிரச்சனை தீர வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்டு, அந்த இறைவன் கூறக்கூடிய அருள் வாக்கை உனக்கு வேத வாக்காக நாங்கள் கூறுவதை நீ துட்சமாக மதித்து உன்னுடைய மனத்திற்கு எவ்வாறு தோன்றுகின்றதோ? அதை செய்துவிட்டு, அகத்தியர் அதை செய்யச் சொன்னார், இதை செய்ய சொன்னார் என்றால் எங்கே பிரச்சனை தீரும். அகத்தியராகிய நான் எந்த அருள்வாக்கு சொல்வதுமில்லை எந்த அருள்வாக்கு ஜீவ ஓலை சுவடியும் இயக்குவதில்லை. அனைத்துமே இறைவனின் அனுமதியோடு, இறைவனின் செயலால்தான் இந்த பூமியில் இயக்கப்பட்டு வருகின்றது என்பதை அகத்தியராகிய யாம் உணர்வோம். அதை நீங்களும் உணரவேண்டும்.
No comments:
Post a Comment