Thursday, 17 November 2016

அமாவசை




“அமாவசை தினம்”

அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.

சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா். அனேகா் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம். அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும். 

பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். வள்ளலார் வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்!
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்

குலதெய்வம்


குலதெய்வம்


வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 
சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு விசேஷங்களை முதலில் குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள். நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 
காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள் தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள். 
ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. 
திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நமது இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி. அதுபோல குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலில் பொங்கல் படைத்து வணங்கினால், அந்த பொங்கல் பொங்குவது போல வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். 
தடைகள் விலக பரிகாரம் :
எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள். 
குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது? :
ஒருவேலை தமது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எப்படி தங்களின் தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளிகிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, “எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும். உன்னை நாங்கள் அறிய வேண்டும். 
எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா.” என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குலதெய்வத்தை பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. பொதுவாக யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவர்கள் நம்மை ஒருநாள் தேடி வருவார்கள். டெலிபதி என்று கூறுவார்களே… 
அந்த டெலிபதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வ செயலுக்கும் இது பொருந்தும். தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சல் – குங்கமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம்தான்.

கலியுகம்

கலியுகம்
                           

உத்தவ கீதையில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்குகலியுகம் எப்படி இருக்கும் என்று மிக அழகாக தெரிவிக்கிறார்.
உத்தவர் கிருஷ்ணரிடம் கலியுகம் பற்றிய கேள்வியை எழுப்பினார். அப்போது கிருஷ்ணர் ”உத்தவா, இதே கேள்வியை பாண்டவர்களில் நால்வர் எம்மிடம் கேட்டனர். அவர்களுக்கு யான் சொன்ன பதிலை உனக்கும் சொல்கிறேன், அதை நீ கவனமாக கேட்ப்பாயாக” என்று பதிலை கூறலானார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தந்த பதில் பின்வருமாறு (உத்தவ கீதையிலிருந்து எடுக்கப்பட்டது)


ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன்,அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.
முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்திதின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.


சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டுதிரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியைஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.


நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டுதிரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,


இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும்,ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர்.
கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.


”அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.” –குயிலை போல.
”பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவமாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்றுநினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.” – வற்றிய கிணற்றுக்குஅருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.
சகாதேவா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில்சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.” -பசுவை போல்.


”நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.” பாறையை தடுத்த சிறுசெடியை போல்.

தஞ்சை பிரகதீஸ்வரர்


தஞ்சை பிரகதீஸ்வரர்

தஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்கள்.

தஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்கள்.

எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும், எப்படி அங்கே இருந்து தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ? 

எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.

எண்பது ஆயிரம் கிலோ எடையுள்ள கல்லை, தற்போது உள்ள எந்த தொழில் நுட்பமும் இருந்து இருக்க வாய்ப்பில்லாத அந்த காலத்தில் , எப்படி கோபுரத்தின் உச்சியில் வைத்து இருக்க கூடும்? அதை தாங்கும் அளவுக்கு கோபுரம் வடிவமைக்கப்பட்டது? இவையெல்லாம், தற்போது இருக்கும் பொறியியல் வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்...
கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒன்றுகூடி - உடல் உழைப்பு , பொருள் உதவி எல்லாம் செய்து எழுப்பிய மகத்தான ஆலயம் இது. ராஜ ராஜ சோழன் என்னும் அரசன், ஒரு தனிமனிதன் தன் பெருமையை காலம் காலமாக நிலைக்க செய்த ஒரு செயல் , என்று நினைத்து , இங்கு நிலவும் தெய்வ சாந்நித்தியத்தை மறந்துவிட போகிறீர்கள்...
இங்கு உள்ள வராஹி - ஒரு மாபெரும் வரப்பிரசாதி. சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனுக்கு போர்படைத் தளபதி. கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு இங்கு இவளுக்கே என்னும்போது - நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது. அடுத்து நந்தி எம்பெருமான். பிரதோஷ நேரத்தில் , ஒருமுறை சென்று பாருங்கள்...
பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000 கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!
அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.

மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...
புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால் கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ‘ஹரதத்தர்’ ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சொந்த வீடு, கடை, நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கிய சொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசை திதியில் உச்சி வேளையில் நந்தியின் வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம் சொல்ல சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.

பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம். சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனைத் தொழச் சென்றார். 


அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது: ‘‘ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை.” இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது.
அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர். நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு ‘பெருவுடையார்’ என்ற பெயர் வழங்கி வருகிறது. 

கோபுரத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலேயரின் உருவம் காணலாம். இது பின்னர் இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆள்வர் என்பதன் குறிப்பாகும். மேலும் பற்பல ரகசிய கல்வெட்டுக்கள் தேசத்தை ஆள்பவரின் பெயரையும் காட்டுகின்றன. ராஜராஜ சோழ மன்னரின் படமும், அவரது குரு ஹரி தத்தர் ஓவியமும் உள்ளது உள்ளபடியே வரையப்பட்டுள்ளன. நாடிச் சுவடிகளை படித்த முனிவர், ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர், காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க, ‘‘திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு” என்ற யாகத்தை செய்யச் சொன்னார். 
இந்த யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம் நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், 


ஔரங்கசீப் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். 
இங்கே, அஷ்டதிக் பாலகர்கள் அமர்ந்து வழிபாடு செய்கின்றனர். ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்களைக் காணலாம். 

இவை ஜீவன் உடையவை. கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி. 
வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. 


நாடியும் இதைத்தான் சொல்கிறது:‘‘பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே. மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும். விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை, சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால் சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல. தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி,நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர். 
நடந்தவை எல்லாம், கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்ட ராஜ ராஜ சோழன் திரைப்படம் போன்று இருக்கிறது என்று சாதாரணமாக நினைத்துவிடப் போகிறீர்கள். நம் கண் முன்னே நிகழ்ந்த நிஜம் என்பதற்கு - கம்பீரமாக நிற்கும் இந்த பிரகதீஸ்வரர் சாட்சியாக நிற்கிறார்

Tuesday, 15 November 2016

அகத்தியரின் அருள் உபதேசம்

அகத்தியரின் அருள் உபதேசம்





கும்பமுனி, அகத்தியரின் தவவலிமையால் பிறந்தவர்அந்த கும்பமுனி அகத்தியரின் தவவலிமையால் பிறந்தாலும் அகத்தியரை மிஞ்சிய சீடன் என்று முக்கண்ணனால் போற்றப் படுபவர்ஏனென்றால் கும்பமுனி தனது மூன்று வயது முதல் 12 வயது வரை முக்கண்ணனை நோக்கி கடும் தவம் தவ லோகத்தில் அல்லது தவ உலகத்தில் செய்தவர்தவ லோகத்தில் அல்லது தவ உலகத்தில் யாரும் வயது முதல் தவம் செய்ததில்லைஅச்சரித்திரத்தை உண்டாக்கியவர்தான் கும்பமுனி

    இறைவனை நோக்கிய பயணத்தில் மனிதர்கள் பல படிகள் ஏறிதான் செல்லவேண்டும்அவ்வாறு ஏறிச்செல்லும்போது ஏதாவது ஒரு ஊர் வரும்அந்த ஊரில் இறங்கிஅங்கு தங்கி வாழ்ந்து வருகின்றேன் என்றால் அது இறைவனை நோக்கிய பயணமாகாதுஅது ஊர் நோக்கிய அல்லது உலகத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கும்எனவே மனிதர்கள், இறைவனை நோக்கி பயணம் செய்ய வேண்டுமென்று அந்த படியில் ஏறிவிட்டால் அந்த படிதான் இறைவன்இறைவன்தான் அந்த படி. 

     இன்னும் சொல்லப்போனால் அந்த படிதான் இறைவனின் தவஒளிஅந்த அந்த படிதான் இறைவனின் பாதம்அந்த படிதான் இறைவனின் திருவடிஅந்த படிதான் இறைவனின் ஜோதிர்லிங்கம்அந்த படிதான் இறைவனின் ஓம்காரம் மௌனம்அந்த படிதான் இறைவனின் உபதேசம்அந்த படிதான் இறைவனின் ஆன்மா என்று அந்த படியிலே நின்று கொண்டுதியானித்துக் கொண்டுசிந்தித்துக் கொண்டு மனிதர்கள் பழகி விட்டால்அந்த படியில் சார்ந்த ஊர்பிறவி ஊர்அந்த படியில் சார்ந்த பிறவிபிணி நீங்கிவிடும்.

 தவசிகளின் நிலை
         தவம் செய்பவர் யார் என்றால் இறைவன் என்கின்ற அந்த அட்சரத்தை கண் இமைக்காமல், குண்டலினியிலுள்ள அனைத்து கண்களையும் திறந்து குறைந்த பட்சம் இரண்டு லட்சம் கண்கள்உற்றுநோக்குவதுதான் தவசிகளின் நிலையாகும் 

     இரண்டு லட்சம் கண்கள் எங்கிருந்து வந்து என்பது மனிதர்களுக்கு வியப்பான விஷயமாக இருக்கும்குண்டலினி என்பது மனிதனுக்கு கொடுக்கும்போது பத்து தலை நாகமாக இருக்கும். பாலக பருவத்தில் இருக்கும்போது 5 தலை நாகமாகவும்,வயோதிக பருவத்தில் 10 தலை நாகமாக இருக்கும்ஆனால் அவன் சித்த வித்தை என்கின்ற கலையை கற்று அந்நிலையை அடையும் போது 50 தலை நாகமாக மாறுகின்றது 

     ஒரு நாகத்திற்கு 2 கண்கள் என்றால் சித்தவித்தை முடித்தவனிடம் 100 கண்கள் இருக்கின்றது என்பதுதானே அர்த்தம்அவ்வாறு அகத்தியரிடம் ஒரு லட்சம் தலை நாகம் கொண்ட குண்டலினி உள்ளதப்பாஎனவே குண்டலினியின் 2 லட்சம் கண்களும்அகத்தியரின் 2 கண்களும் ஆகமொத்தம் 2 லட்சத்திரண்டு கண்களும் அந்த இறைவனின் அட்சரத்தை உற்றுப் பார்த்துகடும்தவத்தில் இருந்துகொண்டிருக்கின்றது.

     அச்சமயத்தில் தன்னை நாடி வருபவர்களின் பிரச்சனை தீர வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்டுஅந்த இறைவன் கூறக்கூடிய அருள் வாக்கை உனக்கு வேத வாக்காக நாங்கள் கூறுவதை நீ துட்சமாக மதித்து உன்னுடைய மனத்திற்கு எவ்வாறு தோன்றுகின்றதோஅதை செய்துவிட்டுஅகத்தியர் அதை செய்யச் சொன்னார்இதை செய்ய சொன்னார் என்றால் எங்கே பிரச்சனை தீரும்அகத்தியராகிய நான் எந்த அருள்வாக்கு சொல்வதுமில்லை எந்த அருள்வாக்கு ஜீவ ஓலை சுவடியும் இயக்குவதில்லைஅனைத்துமே இறைவனின் அனுமதியோடுஇறைவனின் செயலால்தான் இந்த பூமியில் இயக்கப்பட்டு வருகின்றது என்பதை அகத்தியராகிய யாம் உணர்வோம்அதை நீங்களும் உணரவேண்டும்.

சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்



சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்


சதுரகிரி மலை - சித்தவித்தை - சித்தர்கள் உள்ள தொடர்பு           
                                   
   சதுரகிரி என்ற மலையில் பல யுகங்களுக்கு முன்னர் அதாவது இராமாயணம் கால கட்டத்திற்கு முன்பாக அகத்தியர்கோரக்கர்சட்டைமுனி நாதர் இந்த மூன்று சித்தர்களும் ஒன்றாக இணைந்து சதுரிகிரி மலையின் வெவ்வேறு பகுதிகளில் கடும் தவத்தை மேற்கொண்டிருந்தார்கள் 
     
   அவர்கள் தவமிருந்த இடம்தான் இன்று இன்னும் சொல்லப்போனால் சட்டைமுனி நாதர் கடும் தவமிருந்த இடம்தான் இரட்டை லிங்கமாகவும்அகத்தியர் கடும் தவமிருந்த இடம்தான் நாவல் ஊற்றாகாவும்கோரக்கர்கடும் தவமிருந்த இடம்தான் தவசி பாறையாகவும் காட்சி கொடுத்து வருகிறதுஇந்த மூன்று இடங்களுக்கு ஓர் ஒற்றுமை உள்ளதப்பா
  
    அது என்னவென்று கேட்டால்இரட்டை லிங்கம் என்பது மனிதனின் இரண்டு கண்களை குறிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது மனிதனின் விந்துவை வாசி என்கின்ற கண்ணிற்கும்வாசி என்கின்ற கண்ணிலிருந்து பிரம்ம ரந்திரம் என்கின்ற கண்ணிற்கும் எடுத்து செல்லும் இரகசியம்தான் இரட்டை லிங்கமாகும்இன்னும் சொல்லப்போனால் ஜீவசமாதியின் இரகசியம்தான் இரட்டை லிங்கமாகும் 

    அதில் ஒன்று ஜீவன் என்றும்மற்றொன்று பிரம்ம ரந்திரம் என்றும் வைத்துக் கொள்ளலாம்ஜீவனை பிரம்ம ரந்திரத்துக்குள் செலுத்துவதுதான் இரட்டை லிங்கத்தின் மகிமையாகும்எனவே சித்த வித்தை வித்யாதிரிகள் என்று சொல்பவர்கள் இரட்டைலிங்கம் முன் அமர்ந்து ஓம்கார மௌனம் தவத்தை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் அல்லது பல வருடங்கள் கடைபிடித்து வந்தால் சட்டைமுனி நாதரின் அருளால் அவனுக்கு ஜீவசமாதி நிலை கொடுக்கப்படும் என்பது சட்டைமுனி நாதரின் சத்தியவாக்காகும் 
 
    அகத்தியரின் தவபீடமான நாவல் ஊற்று என்கின்ற நாவல் கிணறு என்பது விந்துவை மணியாக மாற்றும் இடமாகும்நா என்ற அட்சரம் நாதத்தைக் குறிக்கும் என்ற அட்சரம் விந்துவை குறிக்கும்ல் என்றால் நாதத்தை விந்துவாக மாற்றும் அட்சரத்தைக் குறிக்கும்.

    கி என்றால் விந்துவை ரசத்துடன் இணைத்து  என்கின்ற சகஸ்ர லிங்கத்தில் மணியாக மாற்றிறு என்கின்ற பிரம்ம ரந்திரத்தின் ரசமணி கதவை திறந்துஅந்த விந்தானது, பிரம்ம ரந்திரத்திற்குள் ரசமணியாக மாறும் இரகசியம்தான் நாவல் கிணறு என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும்எனவே அந்த இடத்தில் ஒருவன் தொடர்ந்து அமர்ந்து அகத்தியரை மானசீக குருவாக பாவித்து என்னுடைய விந்துவை பிரம்ம ரந்திரத்தில் ரசமாகமாற்றிவிடுங்கள் என்று தொடர்ந்து ஒரு மண்டலமாவது தவம் செய்தால்அவனுடைய விந்தானது ரசமணியாக மாறிவிடும்இதுவும் ஜீவசமாதி நிலையை கொடுக்கக்கூடிய ஒரு நிலைதான் என்றாலும் அதன்பிறகு அகத்தியர் அவனுக்கு வழி காட்டுவார்.  

   தவசிப் பாறை என்பதில்  என்பது விந்து என்பது ரசம்விந்துவையும் ரசத்தையும் இணைத்து சி என்கின்ற ஜீவனின் விந்து கதவைத் திறந்து, அதனைமுப்புவாக  மாற்றிப் என்கின்ற ஜீவனின் துருசு கதவைத் திறந்து, அதை முப்பு முடிக்கும் துருசுவாக மாற்றிபா என்கின்ற சகஸ்ரலிங்கத்தின் நாதம் கதவு திறந்து, துருசுவாகிய விந்துவை அதனுடன் இணைத்து நாதமணியாக்கிறைஎன்கின்ற பிரம்ம ரந்திரத்தின் நாதமணி கதவு திறந்து பரிபூரண யோக தன்மைக்கு கொண்டு செல்வதே தவசிப்பாறை என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும்.

    எனவே ஒருவன் சித்தர் மார்க்கத்தில்  சித்தராகவும் மாறலாம்மேலும்சித்தர் நிலை கடந்து யோகி நிலையையும் அடையலாம் என்பது சதுரகிரிமலையின் இரகசியமாகும்

ஆயினும் இந்த மலை பகுதியில் இந்த மூன்று இடங்கள்தான் சித்த வித்தை குறிக்கும் இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளோம்ஆனாலும் இந்த மலையில் பல இடங்கள் அட்சர உபதேசம் இடங்களாக உள்ளதுஇன்னும் சொல்லப்போனால் இறைவன் மார்கத்தில் அல்லது சித்தர் மார்கத்தில் இன்னும் பல மார்க்கத்தில் செல்ல எண்ணுபவர்களுக்கு பல இடங்கள் இந்த மலையில் உள்ளது.


சதுரகிரி மலைபயணத்தின்போது சித்தன் அருள்கிடைக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

1-மாவூத்து குளத்தில் நீராடி அங்குஉள்ள உதயகிரிநாதரை வணங்கவேண்டும்.

2-குடும்பபந்தத்தில்உள்ளவர்கள் கட்டாயம் காவிஅணியக்கூடாது.

3-ஆணகள் மேல்சட்டை அணிவதைதவிர்கவேண்டும்.முடிந்தால் செருப்பு அணிவதை அனைவரும் தவிர்க்கவேணடும்.

4-மலைபயணத்திக்கு ஐந்து நாட்குக்கு முன்மாமிசம் உண்பதை கட்டாயம்தவிர்கவேண்டும்.

5.இரவு அபிசேகம் பார்த்து மனம்குளிர மூன்று மூர்த்திகளையும் தரிசனம் செய்து, மீண்டும் அதிகாலை மூன்று மூர்திகளையும் தரிசனம்செய்துவிட்டு, மாவூத்து குளத்தில் மீண்டும் குளித்து உதயகிரிநாதர், 

நந்தி,ஆஞ்சநேயர்,சப்தகன்னிகள், அருகில்உள்ள சடாதாரி அம்மணையும் தரிசனம் செய்துவிட்டு, சித்தன் அருள்கிடைத்த சித்ததெளிவோடு இன்பச்சிந்தனையோடு, இனிதே நம்  இல்லம் திரும்புவோம். 

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?




சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

சிதம்பர ரகசியம்
                                               
     இறைவனின் கருணையால் இறைவனின் லோகத்தில் இருக்கக்கூடிய இறைவனின் ரகசிய ஓலைச் சுவடி கதவு திறந்து, இந்த தமிழ்நாட்டில் பிரதான சிவன் ஆலயங்கள் என்று பல ஆலயங்கள் உண்டு. ஆயினும் இந்த அண்ட சராசரத்தைக் காக்கும் ஆலயமாக இறைவனால் நிர்ணயக்கப்பட்டு விளங்குவது சிதம்பரம் நடராஜர் ஆலயமாகும்.

    இந்த ஆலயத்தினுள்ளே சிதம்பர ரகசியம் என்று சொல்கின்ற ஒரு கருப்பு நிற இயந்திரத்தை மக்கள் கண்டிருப்பார்கள். ஆனால் அது சிதம்பர ரகசியம் இயந்திரம் இல்லை. அது காலபோக்கில் அங்கு ஒரு செப்பு தகடு, சிவாச்சாரியர்களால் எழுதப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளன. உண்மையான சிதம்பர ரகசியம் என்பது இறைவனின் அருளால் இப்போது நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் அல்லது அதற்கான காலகட்டம் வந்துவிட்டது என்பதால் இறைவன் அருளால் அந்த இரகசியத்தை வெளிபடுத்துகிறோம்.

   இன்றைக்கு இருக்கக் கூடிய மானிடர்கள் நம்புவார்களா?  மாட்டார்களா? என்றால் அது இறைவனுக்கே வெளிச்சம். நடராஜர் சந்நிதி எங்கு கண்டுகொண்டிருக்கின்றீர்களோ அதற்கு நேர் கீழாக 27 அடி ஆழத்தில் ஸ்படிகத்தால் ஆன பல ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் வைக்கப் பட்டுள்ளது. அந்த ஜோதி ஒளி மின்காந்தம் கல்லைச் சுற்றி ஒளி அலைகளை தாங்கிப்பிடிக்கக் கூடிய சில கற்களும் வைக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டும் இல்லாமல் ஒளி அலைகளை தாங்கி பிடிக்கக் கூடிய அந்த கற்கள், எவ்வாறு வேலை செய்யவேண்டும் என்றும் சில ரகசிய கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. அந்த ரகசிய கருவிகளின் வேலை என்னென்றால் அது ஒவ்வொரு கோள்களையும் அதன் வட்டப்பாதையில் இருந்து கீழே விழாதபடி, மேலே செல்லாதபடி, ஒரே சீராக இயங்கும்படி கட்டளை தருவதுதான் அதன் சிறப்பு அம்சமாகும்.

    அவ்வாறிருக்க அந்த பூமியை தாங்கிபிடிக்கக் கூடிய மற்றொரு ஸ்படிக ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் மற்றும் அதனின் ரகசிய கருவிகள் சிவகாமி அம்மையின் பாதத்தில் இருந்து 27 அடிக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதை குறிக்கத்தான் அங்கே சில வடிவங்கள் அதாவது கோலங்கள் நடராஜர் சந்நிதியின் எதிர்புறமும், சிவகாமி அம்மையின் நுழைவாயிலிலும் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனின் அர்த்தம் புரியாமல் போனதால்தான் தமிழ்நாட்டில் உள்ள இந்த சிறப்பை மனிதர்கள் மறந்து, மேற்கத்திய கலாச்சாரம்தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகின்றார்கள்.

மேலும் புவியின் காந்த புலத்தின் மையம் நடராஜரின் கால் பாதத்தின் கீழ் அமைந்துள்ளதாக சமீபத்தில் நாசா அறிவித்தது. அந்த சிதம்பர ரகசியத்தை அவர்கள் அறிய லட்சம் வருடங்களாவது ஆகும். அதாவது மனிதன் இதை அறிய லட்சம் வருடங்கள் ஆனாலும் ஆகலாம்.