Friday, 21 February 2020

மகா சிவராத்திரி 2020

21.2.2020 சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தேன்.

Friday, 4 January 2019

சுக்கு என்ற மாமருந்து



1. பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் போக்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை நீக்கும்.
 
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
 
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
 
4. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
 
5. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
 
6. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
 
7. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
 
8. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
 
9. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
 
10. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

Sunday, 30 December 2018

குண்டலினி சக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம்


குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.


ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடுவினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது.இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்உடலின் வெப்பத்தை உண்மையில்மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்தவெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலேஎழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை மேலும் அதிகரித்து 
அனாகதத்தை அடைகின்றது.அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன் எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும். எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து விசுத்தியை அடைகின்றது. ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது. அடுத்ததாக உள்ள சக்கரத்தின் பெயர் ஆக்கினை
அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால்விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

“சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்”
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ “U”
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.
குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீ
ங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது.

Friday, 5 October 2018

மிருகங்கள் வாழும் உலகம்


இறைவா மணிதனுக்கு நல்ல புத்தியை கொடப்பா

"செய்நன்றி மறந்தார்க்கு உய்வில்லை " - திருக்குறள்

இறைச்சிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் இரவில் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக அவற்றின் கண்களில் பச்சை மிளகாயை சொருகி எடுத்துச்செல்லப்படும் புகைப்படங்கள் இவை.

கொண்டு செல்வது இறைச்சிக்காகத்தான் என்றாலும் கூட அவற்றைக் கொல்லும் வரையாவது அவைகளை ஒரு உயிராக நினைத்துக் கருணை காட்டலாம்.

ஆனால் அவற்றை வண்டியில் ஏற்றும்போதே, இறைச்சியை ஏற்றுகின்ற மனநிலையில் மூட்டையைப் போல் அடித்து நசுக்கி ஏற்றுவதும், இறங்கும் போது தடுமாறும் மாடுகளை மேலிருந்து தள்ளிவிட்டு கால்களை உடைப்பதும், அப்படி உடைந்தாலும் கூட கொஞ்சநேரத்தில் வெட்டப்போறதுதானே என்ற மனநிலையில் சித்தரவதைகளைக் கொடுப்பதும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

அவைகளை கொல்லும் வரையாவது நம்மைப் போன்ற யாரோ ஒரு மனிதருக்காக, உழைத்த கால்நடைகள் அவை, நம்முடைய உணவுக்காக விவசாயியோடு சேர்த்து இந்த மாடுகளும்தான் நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறது என்ற நன்றியுடன் துன்புறுத்தாமல் நடத்துவது தான் குறைந்தபட்ச இரக்கம்.

"மற்ற உயிர்களும் உங்கள் மாதிரி சமூகமே"- திருக்குரான்

"Thou shalt not kill." - Bible

"எல்லா உயிரகளும்
இன்புற்று வாழ்க!
கொல்லா விரதம்
இக்குவலயமெல்லாம் ஓங்குக"
-வள்ளல்பெருமானார்

"எல்லோரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே"
-தாயுமானவர்

Sunday, 30 September 2018

குழந்தையை காணாமல் தவிக்கும் பெற்றோர்

காணாமல் போன குழந்தை பெயர்      ஹரினி.

                                          தந்தை பெயர்       வெந்கடேசன்
                                            தாயர் பெயர்        காளியம்மா
                                              தேதி                      15.9.2018

https://draft.blogger.com/blogger.g?blogID=2290804982277448969#editor/target=post;postID=6681365875519696266

“புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர்!

"ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம்!"


“அன்னிக்கு நானும் எம்பொஞ்சாதியும் வழக்கம்போல புள்ளய தூக்கிக்கிட்டு வெளியூர் திருவிழாவுக்கு ஊசி, பாசி விக்க போயிருந்தோம். ராவு இருட்டுறதுக்குள்ள வூடு திரும்பிடணும்னு கிளம்பினப்போதான் ஆட்டோ ரிப்பேர் ஆகிடுச்சு. இனிமே ரிப்பேர் பண்ணிட்டுக் கௌம்புறதுக்கு நேரமாகிடும். அதனால, இங்கேயே எங்கயாவது படுத்து எந்திரிச்சு வெள்ளன கௌம்பிப் போகலாம்னு நினைச்சோம்ங்க. 

பகல்முழுக்க வேல பாத்த அலுப்புல அசந்து தூங்கிட்டோம். நடுராத்தியில கண் முழிச்சுப் பாத்தப்பதான் பக்கத்துல படுத்திருந்த ரெண்டு வயசு புள்ளயக் காணோம்ங்கிற உணர்வே வந்துச்சு. அய்யா சாமி எம்புள்ள எங்கய்யா இருக்கும். என்னய்யா பண்ணிட்டு இருக்கும். 

பச்சப்புள்ளைங்கய்யா அது. ஆத்தா, அப்பன் மொகத்தத் தவிர வேற யாரு மொகமும் அதுக்குத் தெரியாதுங்களே. அய்யா எம்புள்ளயக் காப்பாத்துங்கய்யா. நீங்க எல்லாருமா சேந்து மனசு வெச்சா எம்புள்ளய சீக்கிரமே கொண்டு வந்து சேத்துடலாம்யா. தயவு செஞ்சு கருண காட்டுங்கய்யா” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார்; வாய்விட்டுக் கதறுகிறார் வெங்கடேசன். நாடோடி இனத்தைச் சேர்ந்தவர். இவரின் இரண்டு வயது மகள் ஹரிணி கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போய்விட்டார். இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. குழந்தை கிடைத்தபாடில்லை.

சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு தெரியாத ஊர், பழக்கப்படாத மனிதர்கள் என்பதால் அனைக்கட்டு காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள உதவிக் காவல் ஆய்வாளர் வீட்டின் வாசலிலேயே படுத்து உறங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பான இடம் என்று நம்பி அந்த இரவை அங்கே கழித்தவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட துயரம் நேர்ந்திருக்கிறது. 
“நாங்க நாடோடி இனத்தைச் சேர்ந்தவங்க. உத்திரமேரூர் பக்கத்துல இருக்கிற மானாமதி கிராமம்தான் எங்க சொந்த ஊரு.  காலங்காலமா இப்படித்தான் ஊரு ஊரா போய் பொம்ம, வளையலுலாம் வித்துட்டு வருவோம். எனக்கும் காளியம்மாவுக்கும் 2015 லதான் கல்யாணம் நடந்துச்சு. ஒரு வருஷம் புள்ளயே இல்லைங்க. மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற கடம்பாடி கோவில்ல மண் சோறு சாப்பிட்டதுக்கு அப்பறம்தான் காளியம்மா வயித்துல புள்ள உண்டாச்சு. முத்து கணக்கா பொம்பளைப் புள்ள பொறந்துச்சுங்கய்யா. ஆசை ஆசையா தோளுலயும் மாருலயும் தூக்கி வளத்தோம். காளியம்மா இப்போ ரெண்டாவது உண்டாகியிருக்கா. அஞ்சு மாசம் ஆகுது. ஹரிணி பாப்பா உன்கூட வெளையாட இன்னொரு குட்டி பாப்பா வரப்போகுதுன்னு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டோம். ஆசை ஆசையா வளத்தப் புள்ளயத் தொலைச்சிட்டு இப்போ அனாதை கணக்கா போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே கெடக்குறோம். எங்க மணியே, பவளமே, குலத்தக் காக்க வந்தவளே எங்க இருந்தாலும் அப்பாக்கிட்ட ஓடி வந்துடுடா பட்டு” எனக் கத்திக்கொண்டே தலையில் அடித்து அழுகிறார். 
"சார், தெனமும் நூறுக்கும் எறநூறுக்கும் ஊரு ஊரா அலையிற அன்னாடங்காச்சிங்க நாங்க. படிக்கத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனா, மனுசங்ககூட நல்ல விதமா பழகத்தெரியும். நமக்கு மனுசங்கதான் துணைனு நினைச்சிக்கிட்டு கிடைக்கிற எடத்துல தூங்கி எழுந்துப்போம். அன்னிக்கு ராத்திரி நாங்க இங்க தங்காம ஆட்டோவுலயே ஊருக்குப் போயிருந்தா வழியில போலீஸ்காரங்க இந்த ராத்திரியில எங்க போறீங்க என்ன ஏதுன்னு கேட்டு தொல்லை பண்ணியிருப்பாங்க. கைப்புள்ளய வெச்சிக்கிட்டு எதுக்கு ஒவ்வொரு இடமா நின்னு நின்னு போகணும். சிவனேன்னு தூங்கி எழுந்து போலாம்னுதான் இங்க தங்கினோம். பாவிங்க கொசு வலைக்குள்ள தூங்கிட்டு இருந்த எங்க குல சாமிய தூக்கிட்டு போயிட்டானுங்களே. பெத்த வயிறு கெடந்து துடிக்கிது சார். 
என் குழந்தை சாப்பிட்டுச்சோ தெரியலயே, தூங்குச்சோன்னு தெரியலயே. போலீஸ் ஸ்டேஷன் வழியா போறவங்க எல்லாரும் எங்கள ஒரு மாதிரி பார்த்துட்டுப் போறாங்க சார். ஒரு சிலர் என்கிட்ட வந்து 'உங்க புள்ள செத்துப் போயிடுச்சாம். அதான் வெளியில சொல்லாம மறைச்சிட்டாங்க'ன்னு சொல்லுறாங்க. யார் என்ன வேணா சொல்லட்டும் சார். எனக்கு நம்பிக்கை இருக்கு. எம்புள்ள உசுரோடதான் இருக்கு. அவ எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம் சார்” என்றபடியே வெடித்து அழுகிறார். அவர் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல வழியின்றி தவித்து நிற்கிறோம். 

Wednesday, 15 August 2018

மகான் வேதாத்திரி மகரிஷி தத்துவங்கள்


1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.

3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.

8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.

9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

10. உண்மை எது,  பொய் எது  என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.

11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.

12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.

13.  அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது
எல்லாவற்றிலும் மிக முக்கியம்.

14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை
விடுங்கள்.

15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.

16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை
மனதார உணருங்கள்.

17. 'நானே பெரியவன் நானே சிறந்தவன்' என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.

18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.

Wednesday, 1 August 2018

வாழ்க வளமுடன்


கிரிவலத்தின் மகிமை



திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அறிந்து கொள்ள சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும் பரப்பியவருமான அகத்திய மகரிஷி விரும்பினார்;
எனவே,அவர் திருக்கையிலாய மலையில் இருக்கும் நந்தி பகவானிடம் சென்று கேட்டார்;
திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை கூற இயலுமா? என்று கேட்கின்றார்;
இந்த கேள்வியை கேட்டதும் நந்திபகவானுக்கு கண்ணீர் வருகின்றது;அழுகின்றார்;அழுகின்றார்; அழுதுகொண்டே இருக்கின்றார்;எவ்வளவு காலம் தெரியுமா?
2000 பிரம்மாக்களுடைய ஆயுள் காலம் வரை!
பூமியில் 432 கோடி ஆண்டுகள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள்! அப்படி 100 வருடங்கள் ஆகி விட்டால் ஒரு பிரம்ம பதவி நிறைவடைந்துவிடும்;இன்னொருவர் பிரம்மா பதவிக்கு வந்துவிடுவார்;இப்படி 2000 பிரம்மாக்களின் ஆயுள் காலம் வரை நந்தி பகவான் அழுகின்றார்;அது ஆனந்த கண்ணீர்!
அகத்திய மகரிஷிக்கு வருத்தமாகிவிட்டது;ஏதும் தெரியாமல் கேட்டுவிட்டோமோ? என்று மனம் வருத்தப்பட்டுவிட்டார்;
அப்புறம் தான் தெரிகின்றது;
திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அதுவரை யாருமே கேட்கவில்லை;அகத்திய மகரிஷி முதன் முதலில் கேட்டதால் உண்டான பூரிப்பால் அத்தனை காலம் நந்தி பகவான் அழுதிருக்கின்றார் என்று;
குருவி மூளை கொண்ட நம்மால் இச்சம்பவத்தை ஓரளவுக்கு மேல் ஜீரணிக்க முடியுமா? ஓவர் பில்ட் அப் என்றுதான் எண்ணுவோம்;ஆனால்,நாம் இயல்பாக யாராவது ஒரு ஆன்மீக உண்மையை சொன்னால் பின்பற்றுகின்றோமா?


அதன் பிறகு,நந்திபகவான் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அகத்திய மகரிஷியிடம் சொல்ல ஆரம்பிக்கின்றார்;இன்று வரையிலும் பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்;அவரது உபதேசத்தை அகத்திய மகரிஷி கேட்டுக் கொண்டே இருக்கின்றார்;அதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் படம்!!!
பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாக இருப்பது அண்ணாமலை!
யார் ஒரே பிறவியில் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடய அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன;அதனால், அவர்களுடைய சத்குருவை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கின்றது;அதன் பிறகு,மீண்டும் இந்த பூமியில் பிறவாத வரம் அண்ணாமலையாரால் கிடைக்கின்றது;
இந்த பிறவியிலேயே அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வரவே பிறவி எடுத்திருக்கின்றோம்;நமது 7 வது வயது நிறைவடையும் வரை மட்டுமே இந்த ஆன்மீக லட்சியம் நினைவில் இருக்கின்றது;அதன் பிறகு,இதை மட்டும் மறந்துவிடுகின்றோம்;
இன்றைய கால கட்டத்தில் யாரெல்லாம் அகில இந்திய அளவில் ஆன்மீக அமைப்புகளை நடத்திவருகின்றார்களோ,அவர்கள் அனைவருமே தமது 20 அல்லது 30 வது வயதிற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்தவர்கள் தான்!

இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்;வாரம் ஒரு நாள் அல்லது 15 நாட்கள் ஒருமுறை என்று அண்ணாமலையாரை கிரிவலம் வர திட்டமிடவேண்டும்;இந்த 5 ஆண்டுகள் வரை அசைவம்,மது இரண்டை மட்டும் தவிர்த்தால் போதும்;வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது;
அப்படி 1008 முறை அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவின் தரிசனம் கிடைக்கும்;அவரது அருளால்,அடுத்த மூன்று உலகங்களிலும் அவரது ஆன்மீக வழிகாட்டுதல் கிடைக்கும்;
ஒரே ஒருமுறை "அண்ணாமலை" என்றோ "அருணாச்சலம்" என்றோ "சோணாச்சலம்" என்றோ சொன்னால் 3 கோடி முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அருணாச்சலேஸ்வரர் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;
கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அண்ணாமலையில் "பவுர்ணமி கிரிவலம்" பிரபலம் ஆகியிருக்கின்றது;
பவுர்ணமி அன்று மட்டும் தான் அண்ணாமலை கிரிவலம் செல்வார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்;இது தவறு;
ஒவ்வொரு தமிழ் மாதம் 1 ஆம் தேதி அன்றும் கிரிவலம் செல்வது சைவர்களின் வழக்கமாக இருக்கின்றது;
முதன் முதலில் அண்ணாமலையை கிரிவலமாக வலம் வந்தது நம் அனைவருக்கும் தாயாக இருக்கும் பார்வதி தேவி;தேய்பிறை சிவராத்திரி திதி அன்றுதான் அன்னை கிரிவலம் வந்தாள்;நமது அன்னைக்கு பக்கபலமாக வந்தது நம் அனைவருக்கும் முதல் குருவாக இருக்கும் அகத்திய மகரிஷி தான் கிரிவலம் வந்தார்;
காஷ்மீர் முதல் கண்டி வரையிலும்,குஜராத் முதல் வியட்னாம் வரையிலும் வாழ்ந்து வரும் ஒவ்வொரு இந்துக்குடும்பத்திலும் திருமணம் ஆன தம்பதியர்கள் மணமான மறுநாளே குடும்பமாக வாழ மாட்டார்கள்;
மணமான ஓராண்டுக்குள் மணமகனின் பெற்றோர்+உடன் பிறந்தோரும்;மணமகளின் பெற்றோர்+உடன் பிறந்தோரும் அண்ணாமலைக்கு வருவர்;வந்து தம்பதியாக கிரிவலம் வருவார்கள்;கிரிவலம் நிறைவடைந்த பிறகு,அண்ணாமலையாரையும்,
உண்ணாமுலையையும் வழிபட்டுவிட்டு அவர்களுடைய ஊருக்கு திரும்புவர்;அதன் பிறகுதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்!!! இந்த நடைமுறையை இன்றும் சில சமுதாய மக்கள் மட்டும் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகின்றார்கள்;
கணபதி லோகம், இந்திர லோகம்,எம லோகம்,பைரவ லோகம்,ஸ்ரீசக்கர லோகம், ஸ்ரீவைகுண்டம்,சத்திய லோகம்,
கந்தர்வ லோகம்,நாக லோகம்,வாயு லோகம்,அக்நி லோகம்,முனி லோகம் என்று ஏராளமான உலகங்கள் இருக்கின்றன;இங்கே வாழ்பவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய்ய்ய்ய்ய தெரியும்;ஆனால்,அங்கே இருந்து அண்ணாமலை கிரிவலம் செல்ல அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைக்காது;
நமக்கோ நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமைகின்றது;சரியாக பயன்படுத்திக் கொள்வோம்;
விண்ணுலகங்களில் பித்ருக்கள் உலகம் என்ற ஒன்று இருக்கின்றது;அங்கே நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் பல லட்சம் ஆண்டுகள் தவம் இருந்தால்,இங்கே அவர்களுடைய பேரன்/பேத்தியாகிய நமக்கு ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று நாடிக்கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;
கிரிவலம் செல்லும் முறைகள் மட்டும் 1,00,008 விதங்கள் இருக்கின்றன;
ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் கணபதி கிரிவலம் வருகின்றார்;கண்பதியின் அருளைப் பெற ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் நாம் கிரிவலம் வரலாம்;
ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வராகி அன்னை கிரிவலம் வருகின்றாள்;
ஒவ்வொரு அஷ்டமி அன்றும் பைரவர் கிரிவலம் வருகின்றார்;பைரவ சித்தர்களும் கிரிவலம் வருகின்றார்கள்;கடுமையான கஷ்டங்கள் உள்ளவர்கள் ஒவ்வொரு அஷ்டமி அன்றும் கிரிவலம் வர நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்;
ஒவ்வொரு திருவாதிரை அன்றும் முனி கிரிவலம் வருகின்றார்;முனி கணங்கள் கிரிவலம் வருகின்றன;
ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் ஈசனின் துணைவியும்,நம் அனைவருக்கும் அன்னையாக இருக்கும் பார்வதி தேவி கிரிவலம் வருகின்றாள்;
அருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறுவோம்;
கீழே தாங்கள் பார்ப்பது நந்தி பகவான்,அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை அகத்திய மகரிஷிக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றார்;
அண்ணாமலைக்கு அருகில் (விழுப்புரம், திண்டிவனம்,செங்கல்பட்டு,கிருஷ்ணகிரி,
பாண்டிச்சேரி,கடலூர்,விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி,திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை மற்றும் பல ஊர்களில்) வாழ்ந்து வரும் சிவ பக்தர்கள் இந்த பொன்னான வாயப்பினை பயன்படுத்தி இப்பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்;
அடுத்த 5 ஆண்டுகள் எல்லாவிதமான பொழுதுபோக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய முயற்சி செய்யலாம்;
இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் அண்ணாமலையைச் சென்றடையும் வாய்ப்பு இயல்பாகவே கிட்டியிருக்கின்றது;
மற்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம்+நேரம் அதிகமாக தேவைப்படும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ