ஏன் இந்த இளமையின் இத்தனை மரணங்கள்??
பார்க்கும் பக்கமெல்லாம் இள மரணங்கள் பெருகி வருகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகளற்ற அந்நியர்களையும் உலுக்கி போடுகிறது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன.
இது விதியேயல்ல. இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்......
மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...
(1) உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
(2) இரவில் கண் விழித்திருத்தல்
(3) காலை உணவை தவிர்த்தல்.
(4) ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
(5.) பணத்தை நோக்கிய ஓட்டம்
(6) பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
(7) கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள்.
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது.
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரி பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தொடர்ந்து உட்கார்வதை குறையுங்கள்.
உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி சந்தோசமாக இருங்கள். உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.
ஆளை கொல்லும் கவலைகளை புறந்தள்ளி ஆளுமையை தரும் தன்னம்பிக்கையை ஆடையாக பூணுங்கள். மிதிவண்டி பயணம் பழகுங்கள்.
என் அனுபவத்தில் சொல்கிறேன்....
வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
அவமதித்து விடாதீர்கள்.........!!
விளையாடுவதை நாம் நிறுத்திக்
கொள்ளும்போது....
நம்முடன் விளையாட ஆரம்பிக்கிறது "வாழ்க்கை"