#நாதம் #விந்து #பரிபாஷைகள் 🙊🙊🙊👇👇👇
நாதம்--ஒலி, உகரம், பூரகம், சத்தி, எண்ணில் 2, வங், இடகலை, குளிர்ச்சி, சுவாசம் அளவு 16.
விந்து--ஒளி, அகரம், இரேசகம், சிவம், எண்ணில் 8, சிங், பிங்கலை, வெப்பம், சுவாசம் அளவு 12.
நாதவிந்து என்ற இரு சொற்களுக்கும் எதிராக மேலே சித்தர்களால் சொல்லப்பட்டிருக்கிற பரிபாஷை சொற்கள் அனைத்தும் யோகநெறியில்
பேசப்படுபவை.
நாதம்--கந்தகம், சாரம், புளி, எண்--2.
விந்து--இரசம், காரம், உப்பு, எண்--8.
நாதவிந்து என்ற இரு சொற்களுக்கும் எதிராக இரண்டாவது முறையாக மேலே சித்தர்களால் சொல்லப்பட்டிருக்கிற பரிபாஷைச் சொற்கள் அனைத்தும் வாதமார்க்கத்தில் பேசப்படுபவை.
சித்தர்கள் நாதவிந்து என்ற இந்த இரு சொற்களில் வாதத்தில் இருப்பதை யோகத்திலும், யோகத்தில் இருப்பதை வாதத்திலும் மாற்றி மாற்றி எழுதுவார்கள். நாம் குழப்பமடையாமல் இடத்திற்குத் தகுந்தவாறு சொற்களைப் பொருத்திப் பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்.