Friday, 28 January 2022

மரணம் பற்றிய புரிதல்


உன்னுடைய மரணம்.... (சிறப்பு பதிவு)

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள்.
1. உனது ஆடைகளை களைவர்.

2. குளிப்பாட்டுவர்.

3. புது துணி அணிவிப்பர்.

4. உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.

5. அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச் செல்வார்கள்.

6. உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள்  தவறாக நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான் என்பதை நினைவுகொள்.

7. உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

8. நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள், பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.

உன்னை விட்டு நீங்குவது...
1. உன் உயிர்  
2. உனது அழகு
3. சொத்துக்கள்.
4. பிள்ளைகள்
5. வீடு, மாளிகைகள்
6. மனைவி மற்றும் பிள்ளைகள்.....

இதில் உனக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்......?

உறுதியாக விளங்கிக்கொள்..

* உனது பிரிவால் இந்த
உலகம் கவலைப்படாது.

* பொருளாதாரம் தடைப்படாது.

* உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்.

* உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.

* எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும் வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய்.....

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே....!! 
(பிணம்  அல்லது பாடி என்று மாறும்.....)  

உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்
1. உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று....

2. நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்...

3. உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவார்கள்....அவ்வளவுதான். 
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.

மனிதா....உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று வாழும் போதே ''வாழாமல்'' உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சேர்த்துவை. 

அதிகமாக உழைத்து உன் வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே...

இறுதியில் உன்னுடன் வருவது...

நீ செய்த நற்காரியங்கள்..

நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்...

நீ செய்த உதவியும் மற்றும் தர்மங்கள்....

இதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் இந்த உலகத்திலும், இறந்த பின்னும் நன்மையடைவாய்.....

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை,
கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் - களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித  உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.

எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்...

இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்...

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி...
அன்பை தூவி வாழு.

பணத்தை கட்டி கொண்டு அழதே....

மற்றவர் மனம்  நோகும்படி வாழாதே....

வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல....
நடை பழகும் நடைவண்டி....

அழகாய் வழி நடத்திடு!

உயிர் ஞான
உணர்வை
அடைந்திடு!!

Tuesday, 25 January 2022

எத்தனுக்கு எத்தன்


எத்தனுக்கு எத்தன்

என்றாவது ஒரு நாள் அவனிடம்

 நீ விழ்ந்தாக வேண்டும்

வேறு வழியில்லை

சரணடைந்த விடு

சிவன் மேல் பக்தியாய் இருந்த மன்னன்


வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்

இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்

உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார். 

அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.

ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.

ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.

நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

 பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன். 

பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

 பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன். 

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!

அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

அவ்வளவு தான்

 வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார். 

அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான். 

மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .

என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.

அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?

 ஜோடி மாடு வேண்டாமா ? 

அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.

திருச்சிற்றம்பலம்!!
சிவ சிவ!!

Wednesday, 19 January 2022

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்



விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!

இன்னொருவன் 
30 வயதில் திருமணம் செய்கிறான். 
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!

ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 
5 வருடங்களுக்குப்
பின்பே தொழில் கிடைக்கிறது...!

இன்னொருவன் 
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!

ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!

இன்னொருவர் 
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 
90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!

நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை. 

எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!

அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில், 
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்
கொண்டிருப்பான்.

உனக்கு விதிக்கப்பட்டது வேறு..
அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..

ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, 
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!

நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!

அந்த இறைவன் உனக்கென  குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!

ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...!

இறைவா.!
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.!
உன்னிடமே நாங்கள் உதவியும்
தேடுகிறோம்..

ஓம் சிவாய நமக.....
திருச்சிற்றமபலம்............