- வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும் …. ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும்,
- முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது,
- ஜாதி முல்லை ,மல்லிகை ,பாதிரி ,தாமரை ,தும்பை ,பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும்,
- தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது ,தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும்,
- நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால்
அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும், - துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது,
- ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது,
- வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது,
- அசைவ கழிவுகள் ,மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது,
- சந்தன முல்லை ,துளசி ,பவளமல்லி ,பன்னிர் செடி ,திருநீர்பத்திரி ,கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும்,
- கோபுரம் நிழல் ,அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும் .மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது
Tuesday, 16 January 2018
வாஸ்து தகவல்
Thursday, 4 January 2018
மந்திரம் யார் கூறினால் சித்தியாகும்
"ஒரு அரசவைக்கு சித்த முனிவர் ஒருவர் பாடி பொருள் பெற வந்திருந்தார். அவர் எந்த மந்திரங்களை கூறினாலும் அது அப்படியே பலித்தாகும்.
அவரிடம் அரசர் எனக்கும் சில மந்திரங்களை சொல்லித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த முனிவர் மறுத்துவிட்டார். அரசர் மேலும் மேலும் கட்டாயப்படுத்தவே முனிவரோ அரசருக்கு சில மந்திரங்களை கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மீண்டும் சில காலம் கழித்து அந்த முனிவர் அரசவைக்கு வந்தார். அப்போது அரசர், ‘தாங்கள் கற்று கொடுத்த மந்திரம் ஏதும் பலிக்கவில்லை. என்னை நன்கு ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று முனிவரிடம் கூறினார். உடனே அந்த முனிவரோ அரசரின் தலையை துண்டியுங்கள் என அங்கிருந்த காவலாளிகளிடம் கூறினார். அனைவரும் வியப்புக்குள்ளாகினர்.
அரசர், ‘என் தலையைவா துண்டிக்க சொன்னீர்’ என்று கோபத்துடன் முனிவரை தூக்கி சிறையில் அடையுங்கள் என்றார். உடனே காவலாளிகள் முனிவரை சிறையில் அடைக்க முயன்றனர்.
அப்போது முனிவர், ‘அரசே! நான் கூறிய போது அசையாமல் நின்ற காவலர்கள் நீர் சொன்னதும் என்னை சிறையில் அடைக்க முற்பட்டனர். இப்போது புரிகின்றதா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அந்த சொற்களை கூறவேண்டியவர்கள் கூறினால் தான் அது பலித்தாகும்’ என்று கூறினார்.
Tuesday, 2 January 2018
2018-ம் ஆண்டின் திருவண்ணாமலை கிரிவல நாட்கள்
இந்த ஆண்டு மொத்தம் 13 பவுர்ணமி வருகிறது.
2018-ம் ஆண்டின் கிரிவல நாட்கள் விவரம் வருமாறு:-
ஜனவரி 1-ந்தேதி
திங்கட்கிழமை காலை 10.30 மணி முதல் 2-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை.
ஜனவரி 30-ந்தேதி
செவ்வாய்க்கிழமை இரவு 9.36 மணி முதல் 31-ந்தேதி புதன்கிழமை இரவு 7.26 மணி வரை.
மார்ச் மாதம் 1-ந்தேதி
வியாழக்கிழமை காலை 8.13 மணி முதல் 2-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி வரை.
மார்ச் 30-ந்தேதி
வெள்ளிக்கிழமை இரவு 7.16 மணி முதல் 31-ந்தேதி சனிக்கிழமை மாலை 6.19 மணி வரை.
ஏப்ரல் 29-ந்தேதி
ஞாயிற்றுக்கிழமை காலை 7.05 மணி முதல் 30-ந்தேதி திங்கட்கிழமை காலை 6.50 மணி வரை.
மே மாதம் 28-ந்தேதி
திங்கட்கிழமை இரவு 7.37 மணி முதல் 29-ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி வரை.
ஜூன் மாதம் 27-ந்தேதி
புதன்கிழமை காலை 9.35 மணி முதல் 28-ந்தேதி வியாழக்கிழமை காலை 10.20 மணி வரை.
ஜூலை மாதம் 26-ந்தேதி
வியாழக்கிழமை இரவு 12.20 மணி முதல் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 2.25 மணி வரை.
ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி
சனிக்கிழமை மாலை 4.05 முதல் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணி வரை.
செப்டம்பர் மாதம் 24-ந்தேதி
திங்கட்கிழமை காலை 8.02 மணி முதல் 25-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி வரை.
அக்டோபர் மாதம் 23-ந்தேதி
செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணி முதல் 24-ந்தேதி புதன்கிழமை இரவு 10.50 மணி வரை.
நவம்பர் மாதம் 22-ந்தேதி
வியாழக்கிழமை பகல் 12.45 மணி முதல் 23-ந்தேதி வெள்ளிக்கிழமை பகல் 12.02 மணி வரை.
டிசம்பர் மாதம் 22-ந்தேதி
சனிக்கிழமை காலை 10.45 மணி முதல் 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Monday, 1 January 2018
தியானத்தின் தீவிரம் - ஒரு குட்டி கதை
குரங்குகளின் உண்ணா விரதம்!
ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.
எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.
அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.
அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.
உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.
சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.
நம்மில் பெரும்பாலானவர்கள் தியான முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.
உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது. ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது. மாறாக, பரம்பொருள் நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.
Subscribe to:
Posts (Atom)