Thursday, 24 August 2017

கண் திருஷ்டி


கண் திருஷ்டியில் இருந்து காக்கும் தர்மம்!

எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங் களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.
அதனால்தான் ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, ‘திருஷ்டி’யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.
இதனை முற்காலத்தில் உணர்ந்த நம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு பொட்டு வைக்கும் பொழுது திருஷ்டி பொட்டு என்று ஒன்றைக் கன்னத்தில் வைப்பார்கள். அதே போல் நன்கு ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு இரவு திருஷ்டி சுற்றித்தீபம் ஏற்றி வைப்பார்கள்.
ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வாயிற்படியின் நிலையில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக கட்ட வேண்டும். மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதனால் எதிர்மறைச் சக்திகள் மாறி, நேர்மறை சக்திகள் வீட்டில் வியாபிக்கத் தொடங்குகின்றது. வழிகாட்டும் காலடி மண், மிளகாய், உப்பு போன்றவற்றை சுற்றி நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் நெடியைப் பொறுத்து நமது கண் திருஷ்டியை அறிந்து கொள்ளலாம். எலுமிச்சை, படிகாரம், குங்குமம், கற்றாழை, பூசணிக்காய் போன்றவை எல்லாம் திருஷ்டியைப் போக்கும் பொருட்களாகும்.
வீட்டில் எப்பொழுதும் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண்திருஷ்டியைப் போக்கும். அதே போல இல்லத்தில் நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதும் நல்லது. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் எதிரிகளின் தொல்லை குறையும். சிலர் வீட்டில் படிகாரத்தைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த படிகார உப்பு கரைவது போல, நமது துன்பங்களும் கரையும் என்பது நம்பிக்கை.
கிராமங்களில் உள்ள பெரியவர்கள் கல் உப்பை திருஷ்டி சுற்றி தண்ணீரில் கரைய வைப்பர். இல்லத்தில் கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். வீட்டின் நுழைவு வாசலில் நந்தி வீதியைப் பார்க்கும் படி வைக்கலாம். அதனால் நமது தடைகள் அகலும். தனவரவு கூடும். வீடுகட்டும் பொழுது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி மாறும் என்பது நம்பிக்கை.
வீட்டில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை வளர்க்கலாம். இவை இல்லத்தை மட்டுமல்ல நமது உள்ளத்தையும் புனிதமாக்கும் மூலிகைகளாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு கண் திருஷ்டி இருந்தாலும் தீபத்திற்கு அதை மாற்றும் ஆற்றல் உண்டு. வீடு எப்பொழுதும் லட்சுமிகரமாக இருந்தாலே நம்மை எந்த எதிர்ப்பு சக்தியும் அணுகாது.
பூஜை அறைக்குள் தேவையில்லாத நபர்களை அனுமதிக்கக் கூடாது. சிலர் படங்களை மாற்றி அமைக்க யோசனை சொல்வார்கள். யாருக்காகவும், எதற்காகவும் அதையெல்லாம் மாற்றியமைக்கக் கூடாது. நம் வீட்டு பாரம்பரியப்படி தான் படங்களை வைத்து வழிபட வேண்டும்.
பெரிய இல்லங்கள் கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் எல்லாம், பாதிவேலை முடிந்த உடனேயே பால் காய்ச்சி விடுகின்றனர்.


பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவர். கிரகப் பிரவேசத்திற்கு வருபவர்களின் எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஹோமங்கள் வைப்பதெல்லாம் நேர்மறை சக்தி, நம் வீட்டில் நிலைத் திருப்பதற்காகத்தான் செய்கின்றோம். மணமக்களுக்கு மஞ்சு நீராடல் என்ற ஒரு சடங்கு இருக் கிறது. இது மணமகன், மண மகளுக்கு இருக்கும் திருஷ்டியைப்போக்குவதற்காக வைத்ததாகும். மஞ்சளுக்கு திருஷ்டி தோஷம் போக்கக்கூடிய ஆற்றல் இருக் கிறது. அழகான தம்பதியர் திருஷ்டி தோஷத்தால் உடல்நலம் பாதிக்காமல் இருக்க இந்த சம்பிரதாயம் நடத்துவர்.
வீட்டில் எல்லா அறைகளையும் திறந்து வைக்கக்கூடாது. சரியான முறையைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் எப்படிப்பட்டவர்கள் பார்வை நம்மீது பட்டாலும் அது நம்மை பாதிக்காது. முருகப்பெருமானைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வழிபடுவது, எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும். மேலும் கணபதி ஹோமத்திலிருந்து கிடைக்கும் சாம்பலை வீட்டு பூஜையறையில் வைக்கலாம்.
எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் ஏழைகளுக்கு உதவுதல், முதியோர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தல், வறுமையில் வாடுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தாலே, அவை நமக்கு நல்ல வழிகாட்டும். அதனால் தான் ‘தர்மம் தலைகாக்கும்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருஷ்டி தோஷம் போக்கும் வல்லமை, முதியோர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசிகளுக்கும், வாழ்த்துக் களுக்கும் உண்டு.
நன்றி:- தினத்தந்தி

Thursday, 10 August 2017

குருபகவான் & தட்சிணாமூர்த்தி



குருபகவான் & தட்சிணாமூர்த்தி.
===================
சிவஸ்ரீ TSR. சிவம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்.*
குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள்.
குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.
*குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது?*
*நவக்கிரக குருவையா,*
*ஞான குருவையா?*
சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
*குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா?*
*இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?*
*தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.*
*அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.*
*நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.*
திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.
*அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை.*
*தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.*
‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம்.
*ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.*
உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள்,
ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.
*இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.*
ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை.
வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
*தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை*
*சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி.*
*கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.*
*இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்.*
*அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.*
ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.
ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.
*வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.*
*எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.*
*இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்?*
ஞான குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:
*குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:*
*குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம* *தஸ்மைஸீ*
*குருவே நம:*
இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் *‘குரு’* என்ற வார்த்தையை வைத்து *குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம்.*
குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.
*இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள்.*
ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு.
*இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான்.*
*குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி.*
*ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.*
இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் *குரு பகவான்.*
*குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும்.*
*குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.*
*திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.*
அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,
*இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.*
கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
வியாழக்கிழமைதான் என்றில்லை,
எந்த நாளிலும் அவரை வழிபடலாம்.
மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும்.
*ஞான குரு வேறு,*
*நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம்.*

ஸ்ரீ நாகத்தம்மன் குலதெய்வ வழிபாடு


சுமார் 100 வருடம் கழித்து முதல் குலதெய்வ வழிபாடு 28.7.2017,கரிச்காடு கிராமம் புதுக்கோட்டை மாவட்டம்.
























Monday, 7 August 2017

உத்தரகோசமங்கை ஸ்ரீ வாராஹி அம்மன்

                 உத்தரகோசமங்கை ஸ்ரீ வாராஹி அம்மன்