Thursday, 15 June 2017

ஹரா விழிப்பு


தயவு கூர்ந்து இப்பதிவை தவறவிடாதீர்கள்.
ஓஷோவின் தீர்க்க தரிசனம்...……..
ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 9-புயலின் கண்கள்

பகுதி-3 ஹரா விழிப்பு.....

எப்போதெல்லாம் உங்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் மெளனமாக அமர்ந்து, உள்ளுக்குள் நகர்ந்து, வயிற்றில் விழுங்கள் – தொப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீழே இருக்கும் அந்த மையம்தான் ஹரா – அங்கேயே இருங்கள். அது உங்கள் வாழ்க்கை சக்தி முழுவதையும் மையப்படுத்தும். நீங்கள் அதனுள் பார்க்க வேண்டும், பின் அது செயல் படத்துவங்கும்: உங்கள் முழுவாழ்க்கையும் அந்த மையத்தைச் சுற்றி நகர்வதை உணர்வீர்கள்.
அந்த ஹராவிலிருந்துதான் வாழ்க்கை துவங்குகிறது அந்த ஹராவில்தான் வாழ்க்கை முடிகிறது. நமது உடலின் எல்லா மையங்கள் தொலைவில் இருக்கிறது. ஹராதான் மையத்திலிருக்கிறது. அங்கேதான் சரிசமமாகி, வேரூன்றி இருக்கிறோம். அதனால் ஒருவர் ஒருமுறை ஹராவை பற்றி தெரிந்துகொண்டால், பல விஷயங்கள் நடக்க துவங்கும். 
.உதாரணமாக, நீங்கள் ஹராவை அதிகம் நினைவில் கொள்ளும்போது, யோசனை குறைந்துவிடும். தானாகவே, யோசனை குறையும். காரணம் தலைக்கு நகரும் சக்தி குறைந்துவிடும், அது ஹராவிற்கு செல்லும். நீங்கள் ஹராவை அதிகம் நினைக்கும்போது, நீங்கள் அதில் அதிககவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு அதிகமான ஒழுக்கம் எழுவதை காண்பீர்கள். அது இயற்கையாக வரும்; அதை திணிக்கவேண்டியதில்லை. நீங்கள் ஹராமையத்தை பற்றி அதிக அளவில் விழிப்பு கொள்ளும்போது, நீங்கள் இறப்பைப்பற்றி குறைவாக அஞ்சுவீர்கள், காரணம் அதுதான் இருப்பிற்கும், இறப்பிற்குமான மையம். 
ஒருமுறை நீங்கள் அந்த ஹராமையத்தோடு இசைந்துவிட்டால், நீங்கள் தைரியமாக வாழலாம். அதிலிருந்து துணிச்சல் வருகிறது – குறைவான சிந்தனை, அதிக மெளனம், குறைவான கட்டுபாடற்ற தருணங்கள், இயற்கையான கட்டுப்பாடு, தைரியம், ஒரு வேரூன்றுதல், ஒரு மண்ணில் இறங்கி இருத்தல்.
.
இரவுப்புகலிடம்;
.

நீங்கள் வலஇடமாக ஒருமாதிரி அலைபாய்வதாக உணர்ந்தால், உங்களுக்கு உங்களது மையம் எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை என்று பொருள். அது நீங்கள் ஹராமையத்தோடு தொடர்பிலில்லை என்பதையே காட்டுகிறது, அதனால் நீங்கள் அந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். 
.
இரவில் நீங்கள் தூங்கச்செல்லுமுன், படுக்கையில் படுத்துக் கொண்டு, உங்கள் இரண்டுகைகளையும் தொப்புளுக்கு இரண்டுஇஞ்ச்க்கு கீழே வைத்து, கொஞ்சம் அழுத்துங்கள். பிறகு சுவாசிக்க ஆரம்பியுங்கள், ஆழமாக சுவாசியுங்கள். சுவாசத்தோடு சேர்ந்து அந்த மையம் மேலெழம்பி கீழே போவதை நீங்கள் உணர்வீர்கள். அங்கிருக்கும் உங்கள் முழுசக்தியும் சுருங்கி, சுருங்கி , சுருங்கி நீங்கள் அங்கே ஒரு சின்னமையமாக, குவிக்கப்பட்ட சக்தியாக மாறி விட்டதாக உணருங்கள். இதை பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் செய்யுங்கள், பிறகு தூங்கச்செல்லுங்கள். 
அதைச் செய்தபடியே தூங்கப்போகலாம்; அது உதவும். பிறகு அந்த இரவு முழுவதும், அந்தமையம் இருக்கும். மறுபடியும் மறுபடியும் ஆழ்உணர்வுநிலை சென்று அங்கே மையம் கொள்ளும். உங்களுக்குத் தெரியாமலேயே, அந்த இரவு முழுவதும், நீங்கள் பல வழிகளில் அந்த மையத்தோடு ஆழ்ந்த தொடர்பில் இருப்பீர்கள். 

.காலையில், தூக்கம்போன உணர்வு வந்ததருணம், உங்கள் கண்களை முதலில் திறக்காதீர்கள். மறுபடியும் உங்கள் கைகளை அங்கே வையுங்கள், கொஞ்சம் அழுத்துங்கள், சுவாசிக்க ஆரம்பியுங்கள். மறுபடியும் அந்த ஹராவை உணருங்கள். இதை பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு செய்யுங்கள். பிறகு எழுந்திருங்கள். இதை ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு காலையிலும் செய்யுங்கள். மூன்று மாதங்களுக்குள் நீங்கள் மையப்பட்டிருப்பதை உணர்வீர்கள்.
*******

மையத்தில் இருப்பது மிகஅவசியம், இல்லையேல் ஒருவர் பிளவு பட்டிருப்பதாக உணர்வார். பிறகு அந்த ஒன்று என்பது ஒன்றாக இருப்பதல்ல, ஒரு துண்டு என்பதாக – எல்லாம் சிதறுண்டு – ஒரு தொகுதியாக இல்லாமல், ஒரு முழுமையாக இல்லாமல் போகிறது. அது மோசமான அமைப்புமுறையில் இருப்பதாகும். காரணம் மையமில்லாமல், ஒருமனிதன் தன்னை இழுத்து கொண்டுதான் அலையமுடியும். நேசிக்க முடியாது. மையமில்லா விட்டாலும் நீங்கள் வழக்கமாக செய்கிற காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செய்யமுடியும், ஆனால் நீங்கள் ஒரு படைப்பாளியாக முடியாது. நீங்கள் குறைந்தபட்சத்தில் வாழ்வீர்கள்: அதிகபட்ச வாழ்வானது உங்களுக்கு சாத்தியப்படாது. மையமடைவதில்தான் ஒருவர் அதிகபட்சமாக, உச்சத்தில், சிகரத்தில் வாழ்கிறார், அந்த உச்சகட்டம் நிகழ்கிறது. – அதுதான் உண்மையான வாழ்க்கை, அதுதான் வாழ்க்கையை வாழ்வது. 

.நன்றி:- திரு.சூர்யாகுரு

பல ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம்


மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான், இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும், அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும். பித்ரு சாபத்தை நீக்கவும். மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும், என அறிந்து கொள்க .

நாம் செய்த ஒரு பாவத்தை ஆரம்பத்திலேயே போக்காத போது அந்த ஒரே பாவம் மட்டும் நம்மிடம் இருக்காது , ஒரு பாவம் விலக்காத போது அந்த பாவம் நம்முள் இருந்து தினம் தினம் ஒரு புது பாவத்தை செய்ய வைக்கும், இது நமக்கே தெரியாது , அதனால்தான் பாவிகள் கடைசிவரையுமே பாவிகளாக பலரும் இருக்கிறார்கள், இடைபட்ட வாழ்வில் ஒன்றோ. நூறோ தர்மத்தை செய்து விட்டு நான் எவ்வளவோ தர்மம் செய்கிறேன், என் கஷ்டம் மட்டும் போகமாட்டேங்குது என புலம்புவார்கள், இவர்கள் கஷ்டம் தீராததிற்கு மேற்கண்ட தினசரி பாவ கணக்கே காரணமாகும்,

எனவே நாம் செய்யும் தர்மம் அளவு அதிகரித்தால் தான் இந்த பித்ரு ஜென்ம பாவம் கழியும் எனவே இதை அறிந்த நம் முன்னோர்கள் ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும் உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவி (அ) குளித்து பொறி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும், மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள் .
உணவே இல்லாமல் தவிக்கும் கிணறு. குட்டை. ஏரி. ஆறு போன்ற இடத்தில் உள்ள மீன்களுக்கும் பொறி உணவு கொடுத்தால் அவ்வளவும் தர்மம் உடனே வேலை செய்யும், யார் செய்கிறார்களோ இல்லையோ மாந்திரீக அருள் வாக்கு செயலில் ஈடுபடக்கூடியவர்கள் அவசியம் செய்ய வேண்டும் . காரணம் இறைக்கடமையில் குறுக்கிடக் கூடியவர்கள் ஆன்மீகவாதிகள், ஊர் பாவத்தை சுமக்கும் துர்யோகம் உள்ளவரும் ஆன்மீகவாதிகள்தான் , பிறக்கும் போதே அதிக பித்ரு பரம்பரை பாவத்தில் பிறக்க கூடியவரும் ஆன்மீகவாதிகள் தான், எனவே அவசியம் நீங்கள் தான்அதிகம் தர்மம் செய்ய வேண்டும், தர்மத்தின் அளவை பொறுத்து எந்த பாவமும் உங்களை அண்டாமல் காக்கும்,
தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய உகந்த நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .
உங்களுக்கு பெரும் சந்தேகம் உண்டாகும், நாம் மீனுக்கு உணவு கொடுத்து உதவுகிறோம் சரி, அது வளர்ந்த பின் அதை கொன்று சாப்பிடுகிறார்களே அது பாவம் இல்லையா என்று கேட்க தோன்றும், இந்த கேள்வி நியாயமானது தான், உயிரை வளர்ப்பது தர்மம் இந்த வாய்ப்பு பாவமற்றவருக்கும் துன்ப விடுதலை உள்ளவருக்கும் உண்டாகும் . உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்து கொண்டிருப்பார்கள், எனவே நம் செயல் தர்மம் செய்து உயிரை வளர்ப்பதாக இருக்கட்டும், அத்தனை உயிர்களுக்கும் இது பொருந்தும் .மரங்களுக்கும் பொருந்தும்,

எனவே தான் சித்தர்கள் ஒரு உயிரை கொன்றாலும் பல நன்மைக்கு பயன்படுத்தினார்கள், மூலிகை என்னும் உயிரை கொல்லும் முன் சாப விமோசனம். செய்தார்கள், பாவ விமோசன மந்திரம் கூறி காப்பு கட்டி இறைவனை வேண்டி அதன் உயிர் அதன் உடலிலேயே இருக்க வேண்டும் என வேண்டி எடுத்து பின்பு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினார்கள், ஒன்றை கொன்றாலும். பல உயிர் பிழைக்க மருந்தாகவும் பயன்படுத்தினார்கள், எந்த உயிரை கொன்றாலும் தவறு என்பதை உணர்ந்து பாவ புண்ணிய கணக்கை உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள் எனவே நாம் செய்யும் தர்மம் மூலமே அவர்களை சாந்தப்படுத்த முடியும்.

Tuesday, 13 June 2017

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்



வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்
உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா? நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா? கீழ்காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

Thursday, 8 June 2017

சித்தர் ஜீவசமாதி வழிபாடு

சித்தரின் ஜீவசமாதி
ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.
1.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.
2.இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.
3.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.
4.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.
5.ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.
6.அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.
7.இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.
இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!

Sunday, 4 June 2017

சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று


நமச்சிவாய வாழ்க

நமக்கு என்ன தேவை என்று நம்மை விட நன்றாக அறிந்தவர் சிவபெருமான். ஆயினும், நாம் உருகி கேட்டால், இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவரும் சிவபெருமான் தான். இதை தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "வேண்டத்தக்கது அறியோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று போற்றுகிறார்.

பேதம் போற்றாத பெருங்கருணை கொண்ட சிவபெருமான் தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து வழிபடுவோர் ஈசனிடமிருந்து வாங்க கூடாத ஒன்று "பின்வாங்குதல்".
ஈசனிடமிருந்து எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம். ஆனால் ஒருபோதும், எவர் வற்புறுத்தலுக்கும் பயந்து பின்வாங்க கூடாது.

நான் படும் துயரங்கள் மலை அளவு இருப்பினும், இந்த இடர்களை களைந்து எம்மை ஆனந்தமாக வாழ வைக்க, எம்மை படைத்து காக்கும் சிவபெருமான் இருக்கிறார் என்று தன் மனதுக்கு சொல்லிக் கொடுங்கள். ஈசன் அருளால் உங்கள் மனம் பக்குவப்படும்.
பக்குவப்பட்ட மனம் ஒருபோதும் சிவ வழிபாட்டில் இருந்து பின்வாங்குவதில்லை.

ஈசனை விட்டு பின்வாங்காதே. பின்வாங்கி நொந்து சாகாதே. நற்றுணையாவது நமச்சிவாயவே.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய