Monday, 22 May 2017

சிவபெருமானின் அழித்தல் தொழில்


செப்டம்பர் 2000 ஆன்மீக ஆலயத்தில் வெளிவந்த தொடர்ச்சி
கலிபுருஷனின் கடைசி காலமாகிய 2001 ல் இருந்து 2018 வரை உலகம் முழுவதும் சனிபகவான் ரோகினி நட்சதிரத்தை கடக்கும் காலமான மிதுன ராசி வரை சனிபகவான் சஞ்சரிக்கும் காலம் வரை உலக அரசியல்வாதிகளுக்கு ஆகாத காலமாகும்.

ஏனென்றால் சிவபெருமான் சாபத்தின் படி வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் நிலைத்து நிற்பதர்காக விலங்கு நிலையில் உள்ள மனித ஆத்மாக்களை களை எடுப்பதற்காக ராகு கேதுக்கள் விருச்சிக ராசியை நெருங்குவதற்குள் பரமேஸ்வரனிண் உக்கிர சக்தியாகிய கல்கத்தா காளி உத்திரகோசமங்கை வராகி ஐவர்பாடி பிரத்தியங்கா தேவி ஆகிய மூன்று காளிகளும் அகோர தாண்டவ மாடும்.


                                      அப்போது பதினான்கு லோகங்களுக்கும் கிரக நட்சத்திர மண்டலத்தின் கலியுக சூரிய சாப விமோச்சனம் ஏற்படும். இக்கால கட்டத்தில் தான் இயற்கையானது பஞ்சபூதங்களும் கொந்தளிப்படையும். தமிழ் நாட்டில் ஜீவ சமாதிகள் ஆன 18 சித்தர்கள் சப்தரிஷிகளின் ஆத்மீக சக்தி இராமேஸ்வரம் வடகோடி தனுஸ்கோடி பாகத்தில் இருந்து ஓளிமயமான ஜோதி ரூபத்தில் இராமேஸ்வரம் கோவில் கும்பாபிஸேகம் அன்று தொடங்கிவிடும்.


ராமையண கால சர்வாதிகார இறைவனின் ஆட்சி தொடங்குவதற்கு இது ஓரு கலங்கரை விளக்கமாக திகளும். மொத்தம் 245 நாடுகளில் கேரளா தமிழ்நாடு ( சென்னை தவிர்த்து ) ஆந்திரா கன்னடா ஓரிசா அழிவு ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்பு கிடையாது.


                                          ஐய்ரோப்பிய நாடுகளும் அமேரிக்காவை சுற்றி உள்ள பல்வேறு நாடுகளும்  ( அமேரிக்காவிற்கும் பிரிட்டீஸ் தீவுகளுக்கும் இடைப்பட்ட பகுதி ) வியாழன் கிரகத்துடைய கதிர்வீச்சாலும் சனி கிரகத்துடைய கதிர்வீச்சாலும் அதன் பின் கேது கிரகத்துடைய கதிர்வீச்சும் பலமாக இருப்பதால் பூமிக்கு அடியில் உள்ள வெப்ப சக்தியானது பூமியை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

ஆதலால் எல்லா மனித சமுதாயத்தினரும் மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றி மோகம் கொண்டு அழிந்து விடாமல் தனி மனித வாழ்க்கையிலும் சரி சமுதாய வாழ்க்கையிலும் சரி ஓழுக்கத்தை பின் பற்றி பெண்களை மதித்து வாழ வேண்டும். நவகிரகங்கள் தேவதைகள் தெய்வங்கள் அருளாளர்கள் பித்ருக்கள் மும்மூர்த்திகள் பராபரத்தை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

இல்லையெணில் அவமிருத்தியு எண்ணும் கலியுக தோஷமானது உலக மக்கள் தொகையில் 3 ல் 1 பங்கு கிரகித்துவிடும்.

ஆதலால் மக்கள் ௐவ்வொருவரும் மத வேற்றுமை பாராமல் இயற்கை நெறியின் உண்மையான ஆத்மீக பிரார்தனை செய்து கொண்டு போட்டி பொறாமை இல்லாமல் சமுக நீதியுடன் வாழ்ந்து கொண்டால் இயற்கை சக்தியானது அதிகம் தீண்டாமல் ஊழி காலத்தின் கணக்கில் ஓரு பகுதி குறைக்கபடும்.

மேலும் ஓரு சிறு உதாரணத்தை கூற விரும்பகிறேன். இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தனுஷ்கோடி பலம்பெரும் யாத்திரிகர்கள் ஸ்தலமாகும். அங்கு சொல்ல முடியாத குற்றங்களும் கொலைகளும் வழிப்பறியும் நடந்தது. 1963-64 ம் ஆண்டுகளில் ஓரே நாளில் தனுஷ்கோடி கடலின் புயலுக்கு அடியோடு அழிந்து விட்டது.

                                சென்னை மாநகரம் இந்திய கலாசாரத்தை பிரதி பலிக்கும் நகரமாகும். இந்த சென்னை மாநகருக்கு அருகில் உள்ள காஞ்சிகாமாட்சியம்மன் ஆலயம் பீடம் மனித உடலில் தொப்புள் போல் பூமியின் மைய பாகத்தின் அமைப்பில் உள்ளது. அந்த அம்மன் சென்னையின் கோபம் தாங்காமல் கிருகிரு என்று சுற்றுவாள்.

அதே சமயம் விஜயவாடா கனகதுர்கை ரத்தம் குடிப்பாள். திருப்பதி கோவிலில் முதலை புகுந்து கொள்ளும். வானத்தில் கரிய நிறம் போன்ற யானை உருவ தோற்றம் தெரியும்.


                                     18 சித்தர்களும் ஜீவசமாதியிலிருந்து வெளிவருவார்கள். சென்னையில் திருவேற்காடு மாரியம்மன் சுயம்புவாக வீற்றிருப்பதால் சென்னை பூமி அதிர்ச்சிக்கு உள்ளாகாது. ஆனால் கடல் அருகில் 2 கிமீ வரை கடல் அலை பொங்கும்.


சப்தரிஷிகள் பூலோகத்தில் மாற்று வடிவம் தாங்கி திருவண்ணாமலையை சுற்றி உள்ள 7 லிங்கத்தின் அடியில் இறங்கி சூட்சுமமாக ஞான சித்தனுடைய ஆட்சிக்கு அருள் புரிய வந்து விடுவார்கள். பொதிகை மலையை இருப்பிடமாக கொண்ட அகத்திய மாமுனியின் குருநாதரான அஸ்வினி தேவர் வெளிவரும் காலமும்,

கலியுகத்தில் வெங்கடாசலபதியின் வட்டிக் கணக்கு முடிவு பெறும் காலமும் வந்துவிட்டதால் ஜீவசமாதியிலிருந்து கொங்கண சித்தரும் வெளிவருகிறார். 43 முக்கோண சக்கரத்தையுடைய கடலாண எவர் சென்றாலும் இந்த இடத்திலிருந்து திரும்பி வர இயலாது.


கருங்கடல் செங்கடல் அருகில் உள்ளது. திருப்பாற்கடல் அடியில் உள்ள யோகநிஷடையில் உள்ள யுகாந்த ரிஷி பல கோடி யுகமாய் வாழ்பவர். அஸ்வினி தேவருக்கு ஓப்பாணவர். ஞான சித்தருக்கு ஆசி வழங்கியவர். இந்த நிலையான மணி மந்திர ஔடத காலத்தில் சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் மேலோங்கி ஆங்கில மருத்துவம் பயனலிக்காது போய் விடும்.


                                            இனி வரும் காலகட்டங்களான 2001 முதல் 2018 வரை மனிதன் விலங்கு நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர முடியாமல் போனாலும் மனித நிலைக்கு வந்துவிட்டால் போதும். உங்களுக்கெல்லாம் தாயும் தந்தையும் போன்று தெய்வீக சக்தியை அழித்து உண்மை எது போலி எது மனிதனுடைய ஆன்மாவை மட்டும் மதித்து மதம் என்ற போர்வையில் உள்ள வேஷத்தை கிழித்து வழி காட்ட போகிறார் ஓருவர்.


அவர் கால சக்கரத்தின் கதாநாயகனாவார். வேதங்களாலும் மந்திரங்களாலும் அரிய முடியாத மகான் அவர். ஆதி சக்தியின் அரும்பெரும் புதல்வர் அவர். அனைத்து மதங்களுக்கும் அவர் ஆதி ஓளியாயிருப்பார்.

அவரை உலக மக்கள் அனைவரும் 2028 ல் இருந்து தரிசிக்கலாம். அவர் யார் என்று வெளிப்படுத்த வேண்டாமென பரப்பிரம்ம நாடியும் காக புஷண்டர் நாடியும் நந்தி தேவர் நாடியும் கமலமுனி நாடியும் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.


அதனால் இனி வரக்கூடிய அந்த கால கட்டங்களில் இயற்கை அன்ணையால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும் என்று எண்ணி அவரை போற்றி வணங்க வேண்டும்.


                              பூமியில் உள்ள போக மாமுனிவரால் செய்யபட்ட முருகனுடைய நவ பாஷாண சிலைகள் பூமியின் அடியிலிருந்து 9 சிலைகள் முருகன் அனுகிரகத்தால் கிடைத்து விடுவதால் வியாழன் கிரகத்தின் சக்தியானது பழனியில் ஸ்தாபிக்கபடும்.

அப்போது அந்த அருள் ஓளி கதிர்கள் 82000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அப்போது உலகத்தின் மேலைநாடுகளில் உள்ள பூமிக்கு அடியில் உள்ள இயற்கை கனிம வளங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துவிடும். தமிழ்நாடுதான் உலக கனிம வளத்தின் முதன்மையாக திகழும்.

உலக பணசந்தையாக இராமேஷ்வரம் திகழும். திருக்கழுகுன்றத்தில் உள்ள 2 கழுகுகளும் 2 சித்தர்களாக மாறி விடுவார்கள். நாத்திகம் தோற்று ஆத்திகம் உலக அளவில் வந்துவிடும். சிங்கமும் பசுவும் ௐரிடத்தில் தண்ணீர் அருந்தும். மக்கள் அனைவரும் ஞான சித்தர் காட்டிய பாதையில் சென்று ஆயுளை அதிகமாக்கி கொள்வார்கள். யோகம் பயில்வார்கள். 18 சித்தர்களும் வெளிப்பட்டு வந்து நாலா திசையும் சென்று தர்மத்தை நிலைநாட்டுவார்கள்.

                                       உலகம் ஓரே மண்ணரின் ஆட்சியில் வரும். மோகம் கலைந்து வேஷம் கலைந்து உண்மையான இறை ஆட்சி நடக்கும். மக்களுடைய தேவைகளில் ஏதும் பற்றாகுறை இருக்காது.

எல்லோரும் ஜீவாத்மா பரமாத்மாவின் ஆத்மீக நிலையினை உணர்ந்து பரமபதம் விளையாடி அருள் ஓளி பீடத்தின் உபதேசத்தை பெறுவார்கள். 2015 முதல் 2018 க்குள் வால் நட்சத்திரம் தோன்றும்.

அல்லது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க சக்தி ஏற்படும். இதனால் மனித சமுதாயத்திற்கு பஞ்ச பூதங்களால் கேடு உண்டாகும். கி.பி 2028 முதல் கி.பி 82000 ஆண்டு வரை ஞான சித்தரின் பரம்பரையே உலகை ஆளும்.

வாலை வராகி மணோன்மணி சித்தர் முதுகலை வணிகவியல் ஆசிரியர்

Thursday, 11 May 2017

ஸ்ரீ வராகி மாதா


முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.
கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..
“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”
– திருமூலர்
உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.
அபிராமி அந்தாதி :
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.
அன்னை வராகி வழிபாடு :
தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;


அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.
ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
மந்திரம்:
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
இன்று பஞ்சமி திதி
வழிபடவூம்!!